Published:Updated:

`அதற்குக் காரணம் ராகுல் டிராவிட், சச்சின்தான்!'- ஜெய்ஸ்வால் பகிர்ந்த இன்ஸ்பயரிங் ஸ்டோரி

ஜெய்ஸ்வால்
ஜெய்ஸ்வால்

சமீபத்தில் நடந்துமுடிந்த U19 உலகக்கோப்பை போட்டியில் இந்திய ஜூனியர் வீரர்கள் எதிரணி வீரர்களை ஸ்லெட்ஜிங் செய்யத் தவறவில்லை. அவர்கள் ஸ்லெட்ஜிங் செய்யும்போது அமைதி காக்காமல் பதிலடி கொடுத்துவந்தனர்.

சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட், அனில் கும்ப்ளே மற்றும் வி.வி.எஸ். லக்ஷ்மன் போன்ற வீரர்கள் இந்திய அணிக்காக விளையாடும்போது இந்திய கிரிக்கெட்டுக்கென தனிப் பெருமை இருந்தது. இந்தப் பெருமை இவர்களின் கிரிக்கெட் திறமைக்காக மட்டுமல்லாமல், அவர்கள் விளையாட்டை அணுகிய அணுகுமுறைக்காகவும் கிடைத்தது. களத்தில் இவர்கள் இருக்கும்போது எதிரணி வீரர்கள் ஸ்லெட்ஜிங் செய்யும்போது இவர்கள் தங்களது பேட்டிங், பௌலிங் மூலமே பதிலளிப்பர். மாறாக ஒருநாளும் ஆக்ரோஷம் அடைந்தது கிடையாது. கிரிக்கெட் `ஜென்டில்மேன் கேம்’ என்பதை ஒவ்வொரு முறையும் களத்துக்குச் சென்றபோது அதை உறுதிப்படுத்தினர். ஆனால் இப்போது இல்லை. இந்திய அணியில் நிறைய வீரர்கள் களத்தில் ஆக்ரோஷப்படுகின்றனர்.

சச்சின்
சச்சின்

எதிரணி வீரர்கள் ஸ்லெட்ஜிங் செய்யும்போது அவர்களுக்கு பதிலடி கொடுக்கின்றனர். இது சீனியர் அணியில் மட்டுமல்ல. ஜூனியர் அணிக்கும் பரவியிருக்கிறது. சமீபத்தில் நடந்துமுடிந்த U19 உலகக்கோப்பை போட்டியில் இந்திய ஜூனியர் வீரர்கள் எதிரணி வீரர்களை ஸ்லெட்ஜிங் செய்யத் தவறவில்லை. எதிரணியினர் ஸ்லெட்ஜிங் செய்யும்போது அமைதி காக்காமல் பதிலடியும் கொடுத்துவந்தனர். குறிப்பாக இறுதிப்போட்டியில் வங்கதேச அணி வீரர்கள் இந்திய அணி வீரர்களை அதிகமாக கோபப்படுத்தினர். அதேபோல் இந்திய அணியின் ஒரு சில வீரர்களும் ஆக்ரோஷமாகச் செயல்பட்டனர். அவர்களில் முக்கியமானவர் இறுதிப்போட்டியில் அதிக விக்கெட் எடுத்த ரவி பீஷ்னாய். வங்கதேசத்துக்கான இறுதிப் போட்டியில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியவர் அதிகமாக ஆக்ரோஷம் அடைந்தார்.

 `டிரேட் மார்க் கவர் டிரைவ்... ஸ்டைல், மாஸ்!’ - கண்காட்சி போட்டியில் கலக்கிய சச்சின்

அதேநேரம் இதே அணியில் வங்கதேச பௌலர்கள் ஸ்லெட்ஜிங் செய்தபோதும் அமைதி காத்தவர் இந்திய அணி பேட்ஸ்மேன் யாஷஸ்வி ஜெய்ஸ்வால். இறுதிப்போட்டியில் 88 ரன்களை இவர் களத்தில் இருந்தபோது வங்கதேச பௌலர்கள் அதிகமாகவே சீண்டினர். அவர்களுக்கு ஜெய்ஸ்வால் கொடுத்த ரெஸ்பான்ஸ் அமைதி மட்டுமே. பொறுமையாக தனது வேலையை மட்டுமே அப்போது பார்த்தார். அந்தப் போட்டி மட்டுமல்ல. அந்தத் தொடர் முழுவதுமாகவே எதிரணி வீரர்கள் சீண்டும்போது அமைதி காத்தார் ஜெய்ஸ்வால். அப்போது ஏன் அமைதி காத்தார் என்பதை இப்போது டைம்ஸ் ஆப் இந்தியா ஊடகத்துக்குப் பேசியுள்ளார்.

ஜெய்ஸ்வால்
ஜெய்ஸ்வால்

அதில், ``எனது அமைதிக்கு காரணம் ராகுல் டிராவிட் மற்றும் சச்சின்தான். நான் அவர்களிடம் பேசியபோது அவர்கள் என்னிடம் ஒரு விஷயத்தைச் சொன்னார்கள். அது ``எப்போதும் களத்தில் உனது பேட் மட்டும்தான் பேச வேண்டும். வாய் அல்ல" என்பது தான். அவர்களின் இந்த ஆலோசனையை, நான் எப்போதும் முதலில் கடைப்பிடிக்கிறேன். அதனால்தான் வங்கதேச வீரர்களின் சீண்டல்களுக்கு நான் அமைதி காத்தேன். அவர்களுக்கு சிரிப்பை மட்டுமே பதிலாகத் தந்தேன். நான் நீண்ட நேரம் பேட் செய்ய விரும்பினேன், அந்த நேரத்தில் என் மனதில் இருந்த ஒரே விஷயம் இன்னும் ரன்களை எடுக்க வேண்டும் என்பதுதான்.

2003-ல் டிராவிட்... 2020-ல் ராகுல்..! ஆஸ்திரேலிய தொடரில் கோலிக்குக் கிடைத்த ஜாக்பாட் #INDvAUS

பீஷ்னாயைப் பொறுத்தவரை இந்தத் தொடரில் நன்றாகப் பந்து வீசினார். தொடரில் அதிக விக்கெட் எடுத்ததும் அவர்தான். அவரது முயற்சியை நாங்கள் அனைவரும் பாராட்டினோம். கடைசி போட்டியில் நான் தொடர்ந்து அவரிடம் சொல்லிக்கொண்டிருந்தேன். `அமைதியாக இரு, உணர்ச்சிவசப்பட வேண்டாம்' என்றேன். உலகக்கோப்பை இறுதிப்போட்டி என்கிறபோது அதிகமான டென்ஷன் ஏற்படும். நாங்கள் இன்னும் சில ரன்கள் கூடுதலாகச் சேர்த்திருந்தால் நாங்கள் வெற்றிபெற்றிருப்போம்" என்றவர், உலகக்கோப்பை தொடரில் அவரின் பர்ஃபாமன்ஸ் குறித்தும் பேசியுள்ளார்.

ஜெய்ஸ்வால்
ஜெய்ஸ்வால்

``உண்மையாகவே எனது பர்ஃபாமன்ஸ் குறித்து மகிழ்ச்சி அடைகிறேன். ஆனால், நாட்டுக்காக உலகக்கோப்பையை வென்றிருந்தால் இதைவிட மகிழ்ச்சியாக இருந்திருப்பேன். ஆனால், உலகக்கோப்பையில் விளையாடியது முற்றிலும் ஒரு அற்புதமான அனுபவம். நான் வெவ்வேறு ஆடுகளங்களில், வெவ்வேறு சூழல்களில், நிலைமைகளில் விளையாடினேன். அங்கு அழுத்தத்தை எவ்வாறு கையாள்வது என்பதுதான் நான் கற்றுக்கொண்ட முதல் விஷயம்" என்றார்.

`பெரும் கனவுகள் உடையவன்; போராளி!'- `U19 ஸ்டார்' ஜெய்ஸ்வால் குறித்து நெகிழும் கிரிக்கெட் உலகம்
அடுத்த கட்டுரைக்கு