Published:Updated:

`இந்திய அணி மீண்டும் நிரூபித்துவிட்டது... எங்களுக்கு ஏமாற்றம்தான்!'- வில்லியம்ஸன்

கனே வில்லியம்ஸன்
கனே வில்லியம்ஸன்

கனே வில்லியம்ஸன் விக்கெட்டை இழந்து, நியூஸிலாந்து அணி நூலிழையில் வெற்றியைப் பறிகொடுத்தது.

நியூஸிலாந்து அணிக்கெதிரான மூன்றாவது டி-20 கிரிக்கெட் போட்டியில், சூப்பர் ஓவர் வரை சென்று இந்திய அணி த்ரில் வெற்றிபெற்றது. போட்டிக்குப் பிறகு பேசிய இந்திய கேப்டன் விராட் கோலி, நியூலிஸாந்து கேப்டன் கனே வில்லியம்ஸன் ஆட்டத்தைப் புகழ்ந்து பேசியிருந்தார்.

கனே வில்லியம்ஸன், விராட் கோலி
கனே வில்லியம்ஸன், விராட் கோலி

“ ஒரு கட்டடத்தில் எல்லாம் முடிந்துவிட்டது என நினைத்திருந்தேன். வில்லியம்ஸன் பேட் செய்த விதம், அவர் அணியை வழிநடத்திச் சென்றதைப் பார்த்து, இந்த ஆட்டத்தை அவர்கள் வெற்றிகரமாக முடிக்கத் தகுதியானவர்கள் என எங்களது பயிற்சியாளரிடம் கூறினேன்” என்றார் கோலி.

`எந்த பிளானும் இல்லை... அந்த தவறுக்காகக் காத்திருந்தேன்!’- ஹிட்மேன் ரோஹித் சொல்லும் சிக்ஸர் ரகசியம்

இந்தப் போட்டியில், இந்திய அணி 179 ரன்கள் எடுத்திருந்தது. இந்த இலக்கை சேஸ் செய்த நியூஸிலாந்து அணியில், கேன் வில்லியம்ஸன் மிரட்டினார். ’கேப்டன் ஆஃப் தி ஷிப்’ என்பதுபோல் அணியை கச்சிதமாக வழிநடத்திச் சென்றார் வில்லி. அணியை வெற்றியின் விளிம்புக்கே அழைத்துச் சென்றுவிட்டார். அவரது விக்கெட்டை இழந்த நியூஸிலாந்து அணி, நூலிழையில் வெற்றியைப் பறிக்கொடுத்தது. சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட வில்லியம்ஸன், 95 ரன்களில் அவுட்டானார். அதுவும் அணியின் வெற்றிக்கு 4 பந்தில் 2 ரன்கள் தேவை என்ற நிலையில் அவுட்டானார். முகமது ஷமியின் அற்புதமான பந்துவீச்சால் போட்டி சமனில் முடிந்தது. ஆட்டம் சூப்பர் ஓவர் வரை சென்றது. சூப்பர் ஓவரில் நியூஸிலாந்து வீரர்கள் நெருக்கடி கொடுத்தாலும் ஹிட் மேன் ரோஹித், இரண்டு சிக்ஸர்களைப் பறக்கவிட்டு அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தார்.

கனே வில்லியம்ஸன்
கனே வில்லியம்ஸன்

போட்டிக்குப் பின்னர் பேசிய கனே வில்லியம்ஸன், “சூப்பர் ஓவர்கள் எங்களுக்கு வெற்றிகரமாக இல்லை. இனி வரும் காலங்களில், சூப்பர் ஓவர்கள் போட்டிகளில் இன்னும் சிறப்பான பங்களிப்பை அளிக்க வேண்டும். நெருக்கடியான சூழலில் எப்படி சிறப்பாக விளையாட வேண்டும் என்பதை இந்திய அணி மீண்டும் நிரூபித்துவிட்டது. இந்திய அணி சிறப்பான தொடக்கத்தை ஏற்படுத்தியிருந்தாலும் எங்கள் பந்துவீச்சாளர்கள் சிறப்பாகப் பந்து வீசினர். இவ்வளவு பங்களிப்பு இருந்தும் தோல்வியடைந்தது வேதனையாக இருக்கிறது. மிடில் ஆர்டரில் இறங்கி நீண்ட நேரம் பார்ட்னர் ஷிப் பில்டு செய்தது நன்றாக இருந்தது. இது, அவ்வளவு எளிதான காரியம் கிடையாது. வெற்றிகரமாக போட்டியை முடிக்க முடியாததை நினைத்து வருத்தமாக இருக்கிறது. சிறிய அளவிலான வித்தியாசத்தில் போட்டியை இழந்தது வருந்தம்தான்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு