சினிமா
கட்டுரைகள்
Published:Updated:

டாட்டூ நாயகன்கள்

விராத் கோலி
பிரீமியம் ஸ்டோரி
News
விராத் கோலி

இந்திய கிரிக்கெட் அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் மற்றும் அதிரடி ஆட்டக்காரர். கைகளில் ரோமன் எண்கள், கலங்கரை விளக்கம் மற்றும் முதுகில் நாய் உட்பட பல டாட்டூக்களை வரைந்துள்ளார்

டாட்டூ... தனித்துவமாகத் தெரியவும், உணர்வுகளைப் பிரதிபலிக்கவும் டாட்டூ போடுகின்றனர். அவர்களுள் நம் மனங்கவர்ந்த இந்திய கிரிக்கெட் வீரர்களும் உண்டு. அவர்களுடைய டாட்டூஸ் பற்றி இங்கே பார்க்கலாம்...
விராத் கோலி
விராத் கோலி

விராத் கோலி

‘இந்தியாவின் ரன் மெஷின்.’ தோல்விகளைக் கண்டு துவளாமல் துணிச்சலுடன் விளையாடும் கெட்டிக்காரர். இவர் தனது உடலில் கடவுளின் கண், ஜப்பான் சாமுராய், எண்கள் 175, 269, அம்மா - அப்பாவின் பெயர், சிவன், மடாலயம், விருச்சிக ராசிக்கு ஸ்கார்ப்பியோ, ஓம், பழங்குடிச் சின்னம் என்று பலவிதமான டாட்டூக்கள் வரைந்துள்ளார். இவரது புதிய டாட்டூ ஒன்று, ஒற்றுமையைக் குறிக்கும் விதமாக அமைந்துள்ளது.

கே.எல்.ராகுல்
கே.எல்.ராகுல்

கே.எல்.ராகுல்

இந்திய கிரிக்கெட் அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் மற்றும் அதிரடி ஆட்டக்காரர். கைகளில் ரோமன் எண்கள், கலங்கரை விளக்கம் மற்றும் முதுகில் நாய் உட்பட பல டாட்டூக்களை வரைந்துள்ளார். இடக்கையில் அவர் பிறந்த நேரத்தைக் கடிகாரமாகக் குத்தியுள்ளார். பேட்மேன் ரசிகராக `தேஷி பசரா' என்ற வார்த்தையை வலது முன்கையிலும் இடது மணிக்கட்டில் பெற்றோரின் பெயர்களையும் பொறித்துள்ளார். இவற்றுடன், ராசி, முன்னோரைக் குறிக்க கண், சாவி போன்ற டாட்டூக்களும் உண்டு!

இஷான் கிஷன்
இஷான் கிஷன்

இஷான் கிஷன்

ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இரட்டைச் சதம் அடித்த முதல் விக்கெட் கீப்பர் என்ற பெருமை கொண்டவர். ரோமானிய கலாசார சிற்ப உருவப்படத்தை இடது முன்கையிலும் வலக்கையில் சாய்பாபாவையும் வரைந்துள்ளார். உத்வேகத்தைக் குறிக்கும் சொற்களாக, `Trust Your Struggle’ என்று மார்பிலும் ‘Believe’ என்பதை வலது தோளிலும் பச்சை குத்தியுள்ளார். அன்பை வெளிப்படுத்தும் வகையில் வலது முன்கையில் ரோஜாக்களைப் பொறித்துள்ளார்.

 ஹர்திக் பாண்டியா
ஹர்திக் பாண்டியா

ஹர்திக் பாண்டியா

வெற்றி தோல்வி இருந்தாலும் விளையாடும்போது தன் முக்கியத்துவத்தை உணர்த்தும் வீரர். களத்தில் அமைதியாகவும் பதற்றமில்லாமலும் இருக்கும் இவர் கழுத்தில் ‘அமைதி' சின்னத்தை டாட்டூவாகக் குத்திக்கொண்டுள்ளார். இடக்கையில் புலி உருவத்தை வரைந்துள்ளார். வலக்கையில் ஒரு போராளியின் படத்துடன் ‘எப்போதும் விட்டுக்கொடுக்காதே' என்ற வாசகத்தை எழுதியுள்ளார். அதுபோக, விலங்குகளின் பாதம், Believe என்கிற வார்த்தையும் குத்தியுள்ளார்.

 சூர்யகுமார் யாதவ்
சூர்யகுமார் யாதவ்

சூர்யகுமார் யாதவ்

இந்திய அணியில் தொடர்ச்சியான தாக்கத்தை ஏற்படுத்திவரும் இளம் சூப்பர் ஸ்டார். அவரது பெற்றோரின் பெயர்களை ஆம்பிகிராம் வடிவில் பச்சை குத்தியுள்ளார். மவோரி பழங்குடி வடிவத்தை மார்பில் குத்தி அதன் கீழே அவர் மனைவி தேவிஷாவின் பெயரையும் பதித்துள்ளார். புதிதாக `Evil Eye' என்கிற ஒரு கண்ணையும் வரைந்துள்ளார். உத்வேகம் தரும் வாசகங்களுடன் முதுகு, கை, கால், கழுத்து என 10க்கும் மேற்பட்ட பச்சைகளைக் குத்திக் கொண்டுள்ளார்.

ஷிகர் தவான்
ஷிகர் தவான்

ஷிகர் தவான்

கிரிக்கெட்டைத் தாண்டி வேடிக்கையான வீடியோக்கள், நடனங்கள் என டிரெண்டிங்கில் இருப்பவர். 15 வயதிலேயே பெற்றோரிடம் சொல்லாமல் முதல் டாட்டூவைக் குத்தியுள்ளார். கையில் கடவுள்கள் சிலரையும் புராண உருவங்களையும் வரைந்துள்ளார். தோள்பட்டை மற்றும் முதுகில் சில பழங்குடிக் குறிகளையும் இலையற்ற மரத்துடன் பறவையையும் உடலில் பச்சையாகக் கொண்டுள்ளார். எழுத்தாக மனைவியின் பெயர், `Carpe Diem' என்கிற உத்வேகச் சொல்லையும் குத்தியுள்ளார்.