Published:Updated:

T20 WorldCup: பாகிஸ்தான் அவுட்; இங்கிலாந்து டவுட்; அரையிறுதிக்குச் செல்ல வாய்ப்புள்ள அணிகள் எவை?

Captains ( ICC )

சூப்பர் 12 சுற்று இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. நாக் அவுட் நெருங்கிவிட்டது. இந்நிலையில் அரையிறுதிக்கு தகுதிபெறப்போகும் அந்த 4 அணிகள் இவைதானோ?

T20 WorldCup: பாகிஸ்தான் அவுட்; இங்கிலாந்து டவுட்; அரையிறுதிக்குச் செல்ல வாய்ப்புள்ள அணிகள் எவை?

சூப்பர் 12 சுற்று இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. நாக் அவுட் நெருங்கிவிட்டது. இந்நிலையில் அரையிறுதிக்கு தகுதிபெறப்போகும் அந்த 4 அணிகள் இவைதானோ?

Published:Updated:
Captains ( ICC )

டி20 உலகக்கோப்பையில் தொடர்ந்து பல சிறப்பான போட்டிகளை பார்த்துவருகிறோம். இரு குரூப்களில் இருக்கும் 10 அணிகள் மூன்று போட்டிகளில் விளையாடி முடித்துவிட்டனர். ஆஸ்திரேலியா மற்றும் அயர்லாந்து மட்டும் நான்கு போட்டிகளில் விளையாடி இருக்கின்றனர்.

இன்னும் எந்த அணியும் அரையிறுதியில் தன் இடத்தை உறுதிசெய்யவில்லை. இதனால் அணிகள் விளையாடப்போகும் கடைசி இரண்டு போட்டிகளில் என்ன நடக்கப்போகிறது என்று ரசிகர்கள் எல்லோரும் ஆவலாக எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். அரையிறுதிக்குச் செல்லப்போகும் அந்த 4 அணிகள் எவை?

குரூப் A-ல் நியூஸிலாந்து தான் எளிதாய் அரையிறுதிக்குச் செல்ல வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. மற்ற ஒரு இடத்துக்கு ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து தீவிரமாகப் போட்டியிடுவார்கள். ரன் ரேட் ஒரு முக்கிய விஷயமாக இருக்கவும் வாய்ப்புள்ளது. மற்ற அணிகள் தொடரில் இருந்து அதிகாரப்பூர்வமாக வெளியேறாவிட்டாலும் அரையிறுதி வாய்ப்பு எட்டாக் கனியாகவே இருக்கும்.

NZ
NZ
ICC
நியூஸிலாந்து:

புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் நியூஸிலாந்து இதுவரை ஒருதோல்வியையும் சந்திக்கவில்லை. மூன்று போட்டிகளில் ஆஸ்திரேலியா மற்றும் இலங்கைக்கு எதிராக வெற்றி, ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் மழையால் முடிவில்லை. 5 புள்ளிகளுடன் நல்ல ரன் ரேட்டும் வைத்திருக்கிறதுநியூஸிலாந்து. இங்கிலாந்து மற்றும் அயர்லாந்துக்கு எதிராக மிச்சமிருக்கும் போட்டிகளில் ஒரு வெற்றியே நியூஸிலாந்தின் அரையிறுதி இடத்தை ஓரளவுக்கு உறுதி செய்துவிடும். இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றால் மற்ற அணிகளின் முடிவைப் பற்றி யோசிக்காமல் அரையிறுதிக்குச் சென்றுவிடும்.

Buttler
Buttler
ECB
இங்கிலாந்து:

புள்ளிப்பட்டியலில் இங்கிலாந்து மூன்றாவது இடத்தில இருக்க முக்கிய காரணம் அயர்லாந்திடம் சந்தித்த தோல்விதான். ஆப்கானிஸ்தானுடன் வெற்றி பெற்றதுமட்டுமே கிடைத்த ஒரே வெற்றி. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டி மழையால் தடைபட்டது. வரும் இரண்டு போட்டிகளிலும் நிச்சயம் வெல்ல வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கிறது இங்கிலாந்து. அதில் ஒரு போட்டி நியூஸிலாந்துடன் இருப்பது கவனிக்க வேண்டிய விஷயம். அது கடும் சவால்மிக்க போட்டியாக இருக்கலாம். இலங்கையையும் குறைத்து மதிப்பிட முடியாது. இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று ஆஸ்திரேலியாவின் போட்டி முடிவுகளும் சாதகமாகஅமைந்தால் மட்டுமே இங்கிலாந்து அரையிறுதிக்குச் செல்ல முடியும்.

Australia
Australia
ICC
ஆஸ்திரேலியா :

ஆஸ்திரேலியாவுக்கு இன்னும் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக மட்டும் ஒரு போட்டி இருக்கிறது. ஒரு தோல்வி, இரண்டு வெற்றி, ஒரு ஆட்டத்தில் முடிவில்லை என ரிசல்ட்டைப் பெற்றிருக்கும் ஆஸ்திரேலியா புள்ளிப்பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருக்கிறது. ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான அடுத்த போட்டியை ஆஸ்திரேலியா வென்றே ஆக வேண்டும். இங்கிலாந்தும் இரண்டு போட்டிகளில் வெற்றி பெறவாய்ப்புகள் உள்ளதால் ரன் ரேட் ஒரு தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. கடைசி போட்டியில் வெற்றி பெற்று நல்ல ரன் ரேட் வைத்திருந்து, இங்கிலாந்து ஒரு போட்டியில் தோல்வி பெற்றால்கூட ஆஸ்திரேலியா அரையிறுதி சென்றுவிடும்.

அயர்லாந்து:
Ireland
Ireland
ICC


நான்கு போட்டிகளில் ஒரே ஒரு வெற்றி மட்டுமே அயர்லாந்துக்குகிடைத்துள்ளது. இதனால் அயர்லாந்துக்கு அரையிறுதி வாய்ப்பு மங்கிப்போய்விட்டது. அதுவும் கடைசிப் போட்டி பலம் வாய்ந்த நியூஸிலாந்துக்கு எதிராகஇருக்கும் பட்சத்தில் பெரிய வெற்றி பெற்று மற்ற முடிவுகள் சாதகமாக அமையவாய்ப்பில்லை. இங்கிலாந்திடம் கிடைத்த வெற்றியே அயர்லாந்துக்கு ஒரே ஆறுதல்.

இலங்கை கிரிக்கெட் அணி
இலங்கை கிரிக்கெட் அணி
AP
இலங்கை:

இலங்கை இரண்டு தோல்வி, ஒரு வெற்றியுடன் புள்ளிப்பட்டியலில் ஐந்தாவது இடத்தில உள்ளது. இந்த குரூப்பில் எல்லோருக்கும் மழையால் குறைந்தது ஒருபுள்ளியாவது கிடைத்துள்ளது. ஆனால் இலங்கைக்கு அது கிடைக்கவில்லை. இதனால் மிச்சமிருக்கும் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றாலுமே அரையிறுதி செல்லவாய்ப்புகள் மிக மிகக் குறைவு.

Afghanistan Squad
Afghanistan Squad
Cricket Board
ஆப்கானிஸ்தான்:

மூன்று போட்டிகளில் இரண்டு போட்டிகள் மழையால் ரத்து. நடைபெற்ற ஒருபோட்டியிலும் தோல்விதான். என்ன செய்தாலும் ஆப்கன் அணியால் அரையிறுதி பற்றி நினைக்க முடியாத நிலைதான் உள்ளது.

குரூப் B:

இந்த குரூப்பைப் பொறுத்தவரை இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்காவிற்கு தான்அரையிறுதி வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது. பாகிஸ்தானுக்கு வாய்ப்பிருக்கும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், தொடரை விட்டு அந்த அணிஏறக்குறைய வெளியேறிவிட்டது. மற்ற அணிகளுக்கும் அதே நிலை தான்.

South Africa
South Africa
ICC
தென்னாப்பிரிக்கா:

ஜிம்பாப்வேக்கு எதிரான முதல் போட்டியே மழையால் ரத்தானதால், அரையிறுதிக்குச் செல்ல வாய்ப்புகள் இறுதியில் குறைவாக இருக்கும் என்று எல்லோரும் நினைத்திருந்தனர். ஆனால் இரண்டு போட்டிகளில் தோற்ற பாகிஸ்தானால், தற்போது தென்னாப்பிரிக்காவிற்கு அந்த போட்டியில் முடிவு கிடைக்காதது பெரும்பாதிப்பை ஏற்படுத்தவில்லை. புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் நல்ல ரன்ரேட்டுடன் இருக்கும் தென்னாபிரிக்கா வரும் இரண்டு போட்டிகளில் வெற்றிபெற்றால் எளிதாய் அரையிறுதிக்குச் செல்லலாம். ஒரு வெற்றியென்றாலும் அவர்களுக்கு ரன் ரேட் உதவக்கூடிய நிலைதான் இருக்கிறது. ஆனால் மற்ற அணிளின் முடிவுகள்பற்றி கவலைபடாமல் சொல்ல வேண்டுமென்றால் இரண்டு வெற்றிகள் பெறுவது நல்லது.

India
India
ICC
இந்தியா:

இந்தியாவுக்கு மூன்று போட்டிகளில் இரண்டு வெற்றிகளும் ஒரு தோல்வியும் கிடைத்துள்ளது. இன்னும் வங்கதேசம் மற்றும் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டிகள் மிச்சமுள்ளது. பெரிய அணிகளுக்கு எதிராக இல்லையென்றாலும் ஜிம்பாப்வே பாகிஸ்தானுக்கு என்ன செய்தது என்று எல்லோருக்கும் தெரியும். இதனால் இந்த இரண்டு போட்டிகளில் வெற்றி என்பது மிக முக்கியம். மேலும் இதேபுள்ளிகளுடன் இருக்கும் வங்கதேச அணியை வீழ்த்தும் போது இந்தியாவுக்கு அரையிறுதி வாய்ப்பு ஏறக்குறைய உறுதியாகிவிடும்.

வங்கதேசம்:

புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருக்கும் வங்கதேசத்திற்கும் இந்தியாவின் நிலைதான். இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளை வீழ்த்தினால் தான் அரையிறுதி வாய்ப்பு கிடைக்கும். ஒரு வெற்றி பெற்று மற்ற முடிவுகளை வைத்து ரன் ரேட் மூலம் செல்வதற்கான ரன் ரேட்டும் இல்லை. இரண்டு பெரிய அணிகளைத் தொடர்ந்து வீழ்த்தி வங்கதேசம் அரையிறுதி சென்றால் அதிசயமாக தான் இருக்கும்.

Zimbabwe
Zimbabwe
ICC
ஜிம்பாப்வே:

பாகிஸ்தானை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பை பிரகாசப்படுத்திய ஜிம்பாப்வே வங்கதேச அணியிடம் போராடி தோற்றுவிட்டது. நெதர்லாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு எதிரான போட்டியில் வெற்றி பெறவேண்டிய கட்டாயம். வெற்றிபெற்றாலும் மற்ற போட்டிகளின் முடிவு சாதகமாய் அமையவேண்டும்.  இதனால் இவர்களது அரையிறுதி வாய்ப்பு குறைவாகவே உள்ளது.

Pakistan
Pakistan
ICC
பாகிஸ்தான்:

இரண்டு தோல்விகளுடன் பரிதாபமான நிலையில் இருக்கும் பாகிஸ்தான் கடைசி இரண்டு போட்டிகளிலும் வெல்ல வேண்டும். அப்படி வெற்றி பெற்றாலும், மற்ற எல்லாப் போட்டிகளின் முடிவும் தொடர்ந்து இவர்களுக்கு சாதகமாய் அமையவேண்டும். எனவே, பாகிஸ்தானின் அரையிறுதி வாய்ப்பு முடிந்துவிட்டதாகவே தெரிகிறது.

Netherland
Netherland
Clive Rose / ICC
நெதர்லாந்து:

மூன்று போட்டிகளில் தோற்றுவிட்ட நெதர்லாந்துக்கு அரையிறுதி வாய்ப்பு முடிந்துவிட்டது. நியூஸிலாந்து, தென்னாபிரிக்கா, இந்தியா அரையிறுதிக்கு சென்றுவிடும். ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் கடும் போட்டிநிலவும். இந்த கடும் போட்டிக்குக் காரணம் இவர்களுக்கு இடையான போட்டிமழையால் ரத்தானது தான். இன்னும் எதாவது ட்விஸ்ட் இருக்கிறதா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

நீங்கள் எந்த 4 அணிகள் அரையிறுதிக்கு செல்லும் என நினைக்கிறீர்கள்? கமெண்ட்ஸ் ப்ளீஸ்!