Published:Updated:

AFGvSL: `ஆறுதல் வெற்றி கூட இல்லை' ஆப்கானிஸ்தானை எளிதில் வீழ்த்திய இலங்கை!

AFGvSL ( ICC )

தனஞ்சய டி சில்வா ரஷித் கானை அட்டாக் செய்து ஆடியது அவர்களுக்கு அழுத்தத்தைக் குறைத்தது. அசத்தலாக ஆடி அரைசதம் அடித்த தனஞ்சய டி சில்வா பவுண்டரி அடித்து அணியை வெற்றி பெற வைத்தார்.

AFGvSL: `ஆறுதல் வெற்றி கூட இல்லை' ஆப்கானிஸ்தானை எளிதில் வீழ்த்திய இலங்கை!

தனஞ்சய டி சில்வா ரஷித் கானை அட்டாக் செய்து ஆடியது அவர்களுக்கு அழுத்தத்தைக் குறைத்தது. அசத்தலாக ஆடி அரைசதம் அடித்த தனஞ்சய டி சில்வா பவுண்டரி அடித்து அணியை வெற்றி பெற வைத்தார்.

Published:Updated:
AFGvSL ( ICC )
டி20 உலகக்கோப்பையின் சூப்பர் 12 சுற்றின் இன்றைய போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணியும் இலங்கையும் மோதியிருந்தன. இலங்கை அணி இந்தப் போட்டியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது.

டாஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான் அணியின் கேப்டன் நபி முதலில் பேட்டிங் செய்வதாக தீர்மானித்தார். காயத்தால் விலகிய ஜசாய்க்கு பதில் குல்புதின் நைப் களமிறங்கினார். முதல் ஓவரில் ஒரு ரன் மட்டுமே கொடுக்க, அதற்கடுத்த ஓவர்களில் ஆப்கன் பேட்டர்கள் ரன்களை எடுக்க ஆரம்பத்தினர். பவர்ப்ளே முடிவில் 42 ரன்களை எடுத்தது ஆப்கன் அணி. பவர் ப்ளே முடிந்தவுடன் விக்கெட்டுகளை இழக்க ஆரம்பித்தது ஆப்கன்.

AFGvSL: `ஆறுதல் வெற்றி கூட இல்லை' ஆப்கானிஸ்தானை எளிதில் வீழ்த்திய இலங்கை!

குர்பாஸை ஆட்டமிழக்கச் செய்தார் லஹிரு குமாரா. அடுத்து களமிறங்கிய இப்ராஹிம் ஜட்ரான் கானி உடன் சிறிது நேரம் பார்ட்னர்ஷிப் அமைக்க 11வது ஓவரில் அது பிரிந்தது. தீக்ஷனா ஓவரில் சிக்சர், பவுண்டரிகள் அடித்து அட்டாக் செய்த இப்ராஹிமை அடுத்த ஓவரிலேயே பெவிலியனுக்கு அனுப்பினார் குமாரா. அடுத்த இணையான நஜிபுல்லா - குல்புதின் நைப் ஓரே ஒரு பவுண்டரி மட்டும் அடித்தது, கடைசியில் நைப் ரன் அவுட்டானார். தனஞ்சய டி சில்வா வீசிய ஓவரில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார் நஜிபுல்லா. அடுத்து களமிறங்கிய ரஷித் மற்றும் நபி தலா ஒரு பவுண்டரியுடன் ஆட்டமிழக்க ஆப்கானிஸ்தான் அணி 144 ரன்களை எடுத்தது. இலங்கை தரப்பில் ஹசரங்கா 3 விக்கெட்டுகளும், குமாரா 2 விக்கெட்டுகளும் எடுத்தனர்.

பின்னர், 145 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணிக்கு முஜீப் நிசங்காவை ஆட்டமிழக்கச் செய்து அதிர்ச்சி அளித்தார். அடுத்த ஓவரை பசல் ஹக் பரூக் மெய்டனாக வீசி அழுத்தத்தை உண்டாக்கினார். ஆனால், அடுத்து வந்த தனஞ்சய டி சில்வா குசல் மெண்டிஸ் உடன் பார்ட்னர்ஷிப் அமைக்க இலங்கை இலக்கை நோக்கி பயணிக்க ஆரம்பித்தது. பரீத் அஹமது வீசிய ஓவர்களை அட்டாக் செய்து ஆடிய இந்த இணை, பரீதின் இரு ஓவரில் 25 ரன்களை விளாசினர்.

AFGvSL: `ஆறுதல் வெற்றி கூட இல்லை' ஆப்கானிஸ்தானை எளிதில் வீழ்த்திய இலங்கை!

ரஷித் கான் தான் வீசிய முதல் ஓவரில் குசல் மெண்டிஸை ஆட்டமிழக்கச் செய்தார். அடுத்து இரு ஓவர்கள் டைட்டாக இருந்ததால், ரஷித் வீசும் ஓவரில் விக்கெட் வீழும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தனஞ்சய அந்த ஓவரில் 14 ரன்கள் சேர்த்து அதகளப்படுத்தினார். அடுத்து அசலங்கா,ராஜபக்சா போன்ற பேட்டர்கள் ஆட்டமிழந்தாலும், தொடர்ந்து பவுண்டரிகள் வந்த வண்ணம் இருந்ததால் அது இலங்கையின் வெற்றிக்கு தடையாகவில்லை. அசத்தலாக ஆடி அரைசதம் அடித்த தனஞ்சய டி சில்வா பவுண்டரி அடித்து அணியை வெற்றி பெற வைத்தார். ஆப்கன் அணியில் முஜீப் மற்றும் ரஷித் கான் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

Srilanka
Srilanka
ICC

இலங்கை அணி இந்த தொடரில் சிறப்பாக பீல்டிங் செய்யவில்லை என்ற குறையை இன்றைய போட்டியில் போக்கினார்கள். தனஞ்சய டி சில்வா ரஷித் கானை அட்டாக் செய்து ஆடியது அவர்களுக்கு அழுத்தத்தைக் குறைத்தது. ஆட்டநாயகனாக டி சில்வா தேர்வு செய்யப்பட்டார்.

ஆப்கன் அணியிலோ பேட்டிங்கில் நஜிபுல்லா , நபி போன்றோர் பார்மில்லாதது அவர்களை பெரிதும் பாதிதுள்ளது. கூடுதலாக 20 ரன்கள் இல்லாதது தான் அவர்கள் தோற்பதற்கு மிக முக்கியமான காரணம். அது இன்றும் தொடர்ந்தது.