Published:Updated:

SAvBAN: `சும்மா கிழி' ரூஸ்ஸோ சதம்; வாரிச்சுருட்டிய பௌலர்கள்; வங்கதேசத்தை வாஷ் அவுட் செய்த தெ.ஆ.!

ரூஸ்ஸோ

டீகாக்கை விட ரூஸ்ஸோ இன்னும் அதிரடியாக ஆடினார். 30 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். 52 பந்துகளில் சதத்தை எட்டிவிட்டார்.

SAvBAN: `சும்மா கிழி' ரூஸ்ஸோ சதம்; வாரிச்சுருட்டிய பௌலர்கள்; வங்கதேசத்தை வாஷ் அவுட் செய்த தெ.ஆ.!

டீகாக்கை விட ரூஸ்ஸோ இன்னும் அதிரடியாக ஆடினார். 30 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். 52 பந்துகளில் சதத்தை எட்டிவிட்டார்.

Published:Updated:
ரூஸ்ஸோ

சூப்பர் 12 சுற்றின் இன்றைய போட்டியில் தென்னாப்பிரிக்க அணியும் வங்கதேச அணியும் மோதின.

ஒன் சைடடாக சென்ற இந்த போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 104 ரன்கள் வித்தியாசத்தில் பெரிய வெற்றியைப் பெற்றிருக்கிறது. அந்த அணியின் சார்பில் ரூஸ்ஸோ சதத்தையும் ஆண்ரிச் நோர்கியா 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தியிருந்தனர்.

டாஸை வென்று தென்னாப்பிரிக்க அணியே முதலில் பேட் செய்தது. வழக்கம்போல கேப்டன் பவுமா மெதுவாகத் தொடங்கி தடுமாறி விக்கெட்டைப் பறிகொடுத்து இரண்டே ரன்களில் வெளியேறினார். இதன்பிறகு, டீகாக்கும் ரூஸ்ஸோவும் கூட்டணி சேர்ந்தனர். ஜிம்பாப்வேவேக்கு எதிரான கடந்த போட்டியில் தென்னாப்பிரிக்க அணி மழையால் துரதிர்ஷ்டவசமாக வெற்றி வாய்ப்பை இழ்ந்திருக்கும். அந்தப் போட்டியில் 3 ஓவர்களில் 50 ரன்களை எடுத்திருந்தனர். டீகாக் விட்டு வெளுத்திருந்தார். அந்தப் போட்டியில் விட்ட இடத்திலிருந்தே இங்கே தொடங்கியதை போல இருந்தது. ஆனால், டீகாக்கை விட ரூஸ்ஸோ இன்னும் அதிரடியாக ஆடினார்.

30 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். 52 பந்துகளில் சதத்தை எட்டிவிட்டார். இந்த உலகக்கோப்பையில் அடிக்கப்பட்ட முதல் சதம் இதுதான்.
ரூஸ்ஸோ
ரூஸ்ஸோ
ICC

ஸ்பின்னர்களையும் சிறப்பாக எதிர்கொண்டார். டீகாக் இன்னொரு பக்கம் அரைசதத்தைக் கடந்து அதிரடியாக ஆடியிருந்தார். இவர்களின் ஆட்டத்தால் 11-15 இந்த ஓவர்களில் மட்டும் 85 ரன்களை தென்னாப்பிரிக்க அணி எடுத்திருந்தது. டீகாக்கை ஆஃபிப் ஹொசைன் வீழ்த்த ரூஸ்ஸோவை ஷகிப்-அல்-ஹசன் வீழ்த்தியிருந்தார். ஆயினும், தென்னாப்பிரிக்க அணி 20 ஓவர்கள் முடிவில் 205 ரன்களை எடுத்திருந்தது.

பெரிய இலக்கை நோக்கிப் பயணித்த வங்கதேச அணிக்கு முதல் ஓவர் மட்டுமே பாசிட்டிவ்வாக அமைந்தது. ரபாடா வீசிய அந்த ஓவரில் சவுமியா சர்கார் 2 சிக்சர்களைப் பறக்கவிட்டார். அந்த ஓவரில் மட்டும் 17 ரன்கள் வந்திருந்தது. இதன்பிறகு, வங்கதேசத்திற்கு எந்த நல்ல காரியமும் நடக்கவில்லை. ஏறக்குறைய பவர்ப்ளேயிலேயே தோல்வியை உறுதி செய்தனர். அதற்கு மூலக்காரணமாக இருந்தவர் நோர்கியா. 150 கி.மீ-க்கு நெருக்கமாக நோர்கியா வீசிய பந்துகளின் துல்லியத்தன்மைக்கு ஈடுகொடுக்க முடியாமல் பவர்ப்ளேயிலேயே மூன்று பேட்டர்கள் வீழ்ந்தனர். கேசவ் மகாராஜா, ஷம்சி போன்ற ஸ்பின்னர்களும் சிறப்பாக வீச வங்கதேசம் 101 ரன்களுக்கே ஆல் அவுட் ஆனது. நோர்கியா 4 விக்கெட்டுகளையும் ஷம்சி 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தனர்.

கடந்த போட்டியில் டக்வொர்த் லூயிஸால் வஞ்சிக்கப்பட்ட தென்னாப்பிரிக்க அணி இந்த வெற்றியின் மூலம் அவர்களின் பிரிவில் முதலிடத்திற்கு முன்னேறியிருக்கிறது.