Published:Updated:

`விராட் கோலி டி20 போட்டிகளிலிருந்து ஓய்வு பெற வேண்டும்' - பாராட்டில் ட்விஸ்ட் கொடுத்த சோயப் அக்தர்

Virat Kohli ( ICC )

என்னைப் பொறுத்தவரை, பாகிஸ்தானுக்கு எதிராக, அவர் தனது வாழ்க்கையின் மிகச்சிறந்த இன்னிங்ஸை விளையாடினார். ஆனால்....

`விராட் கோலி டி20 போட்டிகளிலிருந்து ஓய்வு பெற வேண்டும்' - பாராட்டில் ட்விஸ்ட் கொடுத்த சோயப் அக்தர்

என்னைப் பொறுத்தவரை, பாகிஸ்தானுக்கு எதிராக, அவர் தனது வாழ்க்கையின் மிகச்சிறந்த இன்னிங்ஸை விளையாடினார். ஆனால்....

Published:Updated:
Virat Kohli ( ICC )
டி20 உலகக்கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக விராட் கோலி ஆடிய ஆட்டத்திற்காக அவரை பாராட்டாதவர்களே இல்லை. பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் சோயப் அக்தரும் விராட் கோலியை மனமார பாராட்டியிருக்கிறார். ஆனால், அந்த பாராட்டின் கடைசியில் ட்விஸ்ட் கொடுத்து ஒரு பன்ச்சும் வைத்திருக்கிறார்.
Akthar
Akthar

விராட் கோலி குறித்து அவர் கூறியதாவது, “என்னைப் பொறுத்தவரை, பாகிஸ்தானுக்கு எதிராக, அவர் தனது வாழ்க்கையின் மிகச்சிறந்த இன்னிங்ஸை விளையாடினார். எதுவும் முடியும் என்ற தன்னம்பிக்கை இருந்ததால் மட்டுமே இப்படி ஒரு சிறப்பான ஆட்டத்தை விளையாடினார். ”மேலும், 'அவர் 3 வருடங்களாக சரியாக ஆடவில்லை. கேப்டன் பதவியில் இருந்தும் நீக்கப்பட்டார். நிறைய பேர், அவரிடம் நிறைய விஷயங்களை சொன்னார்கள். மக்கள் அவரது குடும்பத்தைக்கூட சர்ச்சைக்குள் இழுத்தனர். ஆனால் அவர் தொடர்ந்து கடினமாகப் பயிற்சி செய்துவந்தார். இதன் பலனாக தீபாவளிக்கு ஒரு நாள் முன்பு, பட்டாசாக வெடித்திருக்கிறார். அவருக்காக நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். அவர் ஒரு சிறந்த கிரிக்கெட் வீரர்.' இவர் கோலி குறித்து புகழ்ந்து தள்ளிய சோயிப் அக்தர், இதன்பிறகு

கோலி டி20 போட்டியில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என்று நான் விரும்புகிறேன், ஏனென்றால் அவர் தனது முழு ஆற்றலையும் டி20 கிரிக்கெட்டில் செலுத்துவதை நான் விரும்பவில்லை. இன்று போல் தனது முழு பலத்தையும் பயன்படுத்தினால், ஒருநாள் போட்டிகளில் இன்னும் சதங்களை அடிக்க முடியும்
சோயப் அக்தர்

சோயப் அக்தரின் கருத்தில் உடன்படுகிறீர்களா? விராட் கோலி டி20 போட்டிகளிலிருந்து ஓய்வு பெற வேண்டுமா? உங்கள் விருப்பத்தைக் கமென்ட் பண்ணுங்க!