Published:Updated:

INDvENG: `Singh is King' - அர்ஷ்தீப்தான் ஹீரோ; ரவி சாஸ்திரி சொல்லும் லாஜிக்!

Arshdeep Singh ( ICC )

அர்ஷ்தீப்தான் இந்திய அணியின் ஹீரோவாக இருப்பார் என ரவிசாஸ்திரி கூறியிருக்கிறார். இந்த கருத்தை முன்வைப்பதற்காக அவர் கூறிய உதாரணம் சுவாரஸ்யமாக இருந்தது.

Published:Updated:

INDvENG: `Singh is King' - அர்ஷ்தீப்தான் ஹீரோ; ரவி சாஸ்திரி சொல்லும் லாஜிக்!

அர்ஷ்தீப்தான் இந்திய அணியின் ஹீரோவாக இருப்பார் என ரவிசாஸ்திரி கூறியிருக்கிறார். இந்த கருத்தை முன்வைப்பதற்காக அவர் கூறிய உதாரணம் சுவாரஸ்யமாக இருந்தது.

Arshdeep Singh ( ICC )

டி20 உலகக்கோப்பையில் இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான அரையிறுதிப்போட்டி நடைபெற இருக்கிறது. இந்தப் போட்டிக்கு முன்பான நிகழ்ச்சியில் அர்ஷ்தீப்தான் இந்திய அணியின் ஹீரோவாக இருப்பார் என ரவி சாஸ்திரி கூறியிருக்கிறார். இந்த கருத்தை முன்வைப்பதற்காக அவர் கூறிய உதாரணம் சுவாரஸ்யமாக இருந்தது.

1983 உலகக்கோப்பையை வென்ற போது அணியில் பல்வீந்தர் சிங் முக்கிய வீரராக இருந்தார். 2007 உலகக்கோப்பையை வென்ற போது யுவராஜ் சிங்கும் ஆர்.பி.சிங்கும் அணியின் முக்கிய வீரர்களாக இருந்தனர். 2011 உலகக்கோப்பையை வென்ற போது யுவராஜ் சிங்கும் ஹர்பஜன் சிங்கும் அணியின் முக்கிய வீரர்களாக இருந்தனர். அந்த வகையில் இந்த முறை இந்திய அணிக்கு அர்ஷ்தீப் சிங்தான் ஹீரோ
ரவி சாஸ்திரி
ரவி சாஸ்திரி
ரவி சாஸ்திரி

ரவிசாஸ்திரி கொஞ்சம் ஜாலியாக இந்த கருத்தை கூறியிருந்தாலும் அவர் குறிப்பிட்ட வீரர்களெல்லாமே இந்திய அணி உலகக்கோப்பையை வெல்ல மிக முக்கிய காரணமாக இருந்திருக்கின்றனர். மிதவேக பந்துவீச்சாளரான பல்வீந்தர் சிங் 1983 உலகக்கோப்பையில் 8 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். இறுதிப்போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஓப்பனரான கார்டன் க்ரீனிச்சின் விக்கெட்டை அவர்தான் வீழ்த்தியிருந்தார். அதேமாதிரி, 2007 உலகக்கோப்பையில் ஆர்.பி.சிங்தான் இந்திய அணிக்காக அதிக விக்கெட்டுகளை எடுத்துக் கொடுத்திருந்தார். யுவராஜ் சிங் அதிரடி சூரராக அனல் பறக்க விட்டிருந்தார். 2011 உலகக்கோப்பையிலும் யுவராஜ் சிங் ஆல்ரவுண்டராக அசரடித்திருந்தார். தொடர் நாயகனும் விருதையும் வென்றிருந்தார். ஹர்பஜன் சிங்கும் தனது எக்கனாமிக்கலான ஸ்பெல்களால் அணியின் வெற்றிக்கு பெரிதும் உதவியிருந்தார்.

அந்த உலகக்கோப்பை ஹீரோக்களின் வரிசையில் இந்த உலகக்கோப்பையில் இந்திய அணியின் ஹீரோவாக அர்ஷ்தீப்தா. இருக்கிறார் என்றே ரவிசாஸ்திரி குறிப்பிட்டிருக்கிறார்.

IND v SA | Arshdeep Singh
IND v SA | Arshdeep Singh
அர்ஷ்தீப் சிங்தான் இந்த உலகக்கோப்பையில் இந்திய அணிக்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார். மொத்தம் 10 விக்கெட்டுகள். இந்த உலகக்கோப்பையில் அவர் வீசியிருக்கும் ஒவ்வொரு 11 பந்துக்கும் ஒரு விக்கெட் கிடைத்திருக்கிறது. Singh is King!