Published:Updated:

INDvPAK: `கொட்டித் தீர்க்குமா கனமழை!' இந்தியா - பாகிஸ்தான் போட்டி நடைபெறுமா?

Ind vs Pak

மெல்பர்ன் நகரில் நாளை 'கன மழைக்கான (95%) வாய்ப்பு இருப்பதாகவும், பெரும்பாலும் மதியம் மற்றும் மாலை நேரங்களில் தென்கிழக்கு திசையில் காற்று மணிக்கு 15 கிமீ -25 கிமீ வேகம் வரை காற்று வீச கூடும்.'

INDvPAK: `கொட்டித் தீர்க்குமா கனமழை!' இந்தியா - பாகிஸ்தான் போட்டி நடைபெறுமா?

மெல்பர்ன் நகரில் நாளை 'கன மழைக்கான (95%) வாய்ப்பு இருப்பதாகவும், பெரும்பாலும் மதியம் மற்றும் மாலை நேரங்களில் தென்கிழக்கு திசையில் காற்று மணிக்கு 15 கிமீ -25 கிமீ வேகம் வரை காற்று வீச கூடும்.'

Published:Updated:
Ind vs Pak
டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் கடந்த அக்டோபர் 16ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் சூப்பர் 12 சுற்றில் நாளை இந்திய அணியும் பாகிஸ்தான் அணியும் மோதிக்கொள்ளும் போட்டி மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது.
Team India
Team India

கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புக்குள்ளாகியுள்ள இப்போட்டியில் மழை குறுக்கிட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. சனிக்கிழமையான இன்றும் மழை பொழிய வாய்ப்பு உள்ளது. ஆனாலும் சூரியன் ஓரளவு பிரகாசிக்கக்கூடும். இருப்பினும் இடியுடன் கூடிய கனமழையும் பெய்யவும் வாய்ப்புள்ளதாக வானிலை நிலவரங்கள் கூறப்பட்டுள்ளது.

மெல்பர்ன் நகரில் நாளை 'கன மழைக்கான (95%) வாய்ப்பு இருப்பதாகவும், பெரும்பாலும் மதியம் மற்றும் மாலை நேரங்களில் தென்கிழக்கு திசையில் காற்று மணிக்கு 15 கி.மீ- 25 கி.மீ வேகம் வரை காற்று வீச கூடும்.' என்றும் ஆஸ்திரேலிய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. 

இந்த போட்டி உள்ளூர் நேரத்தின்படி  இரவு 7:00 மணிக்கு தொடங்கும். இந்திய நேரத்தின் படி, ஆட்டம் மதியம் 1:30 மணிக்கு தொடங்கி நடைபெற உள்ளது.

இவ்வாறு உள்ள சூழலில் மழையினால் முழு ஆட்டமும் ரத்து செய்யப்படவும் வாய்ப்புள்ளது. அரையிறுதி, இறுதிப்போட்டிகளுக்கு மட்டுமே ரிசர்வ் டே திட்டமிடப்பட்டுள்ளது. இந்த சூப்பர் 12 லீக் போட்டிகளுக்கு அப்படி எந்த ரிசர்வ் டேவும் இல்லை.

ஒருவேளை, ஏதேனும் ஒரு அணி பேட்டிங் செய்து இலக்கை நிர்ணயித்து இருந்தால், மழை குறுக்கிடும்போது டக்வொர்த் லூயிஸ் விதிமுறையின் படி, செயல்பட்டு ஆட்டத்தை முடிக்க வாய்ப்புள்ளது. 

ஏற்கெனவே, டி20 உலக கோப்பை 2022 போட்டியில் இதுவரை இரண்டு போட்டிகள் மழையால் பாதிக்கப்பட்டுள்ளது.  நியூசிலாந்துக்கு எதிரான இந்தியாவின் இரண்டாவது பயிற்சி ஆட்டம் புதன்கிழமை கபாவில் நடைபெறவிருந்த நிலையில், இடைவிடாத மழை காரணமாக ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது. புதன்கிழமை பிரிஸ்பேனில் நடைபெறவிருந்த ஆப்கானிஸ்தானுக்கு எதிரான பாகிஸ்தானின் பயிற்சி ஆட்டமும் கனமழை காரணமாக கைவிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது