Published:Updated:

IREvENG: மழை மட்டும்தான் இங்கிலாந்தின் தோல்விக்கு காரணமா? அசரடித்த அயர்லாந்து!

Ireland Cricket ( ICC )

மழைக் குறுக்கிடாமல் இருந்திருந்தால் இங்கிலாந்து வெற்றி பெற்றிருக்கலாம். ஆனால், இந்த வெற்றிக்கு அயர்லாந்து அணி தகுதியுடையதே.

IREvENG: மழை மட்டும்தான் இங்கிலாந்தின் தோல்விக்கு காரணமா? அசரடித்த அயர்லாந்து!

மழைக் குறுக்கிடாமல் இருந்திருந்தால் இங்கிலாந்து வெற்றி பெற்றிருக்கலாம். ஆனால், இந்த வெற்றிக்கு அயர்லாந்து அணி தகுதியுடையதே.

Published:Updated:
Ireland Cricket ( ICC )
சூப்பர் 12 சுற்றின் இன்றைய ஆட்டத்தில் இங்கிலாந்து அணியும் அயர்லாந்து அணியும் மோதியிருந்தன. மழை குறுக்கிட்ட இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியடைந்திருக்கிறது.
Balbrinie
Balbrinie
ICC

டாஸ் வென்ற இங்கிலாந்து மேகங்கள் சூழ பவுலிங் தேர்வு செய்தது. இங்கிலாந்து பௌலர்கள் தொடர்ச்சியாக ஷார்ட் பிட்ச் பந்துகளை வீசினர். அதனை அயர்லாந்து பேட்டர்கள் சிறப்பாக எதிர்கொண்டனர். ஸ்கொயர் ஆப் தி க்ரவுண்ட்டில் அதிக ரன்களை எடுத்தனர். ஸ்டெர்லிங் ஆட்டமிழந்தாலும் பால்பிரினி மற்றும் டக்கர் ஸ்கோரை வேகமாக உயர்த்தினர். கேப்டன் பால்பிரினி சிறப்பாக ஆடி அரைசதம் விளாசினார். டக்கர் ரன் அவுட்டாக பார்ட்னர்ஷிப் முடிவுக்கு வந்தது. அதன்பிறகு எந்தவொரு பார்ட்னர்ஷிப்பும் அமையவில்லை. பால்பிரினி, டெக்டர் மற்றும் அடெர் ஆகியோரின் விக்கெட்டுகளை லிவிங்ஸ்டன் வீழ்த்தினார். கடைசி 25 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை அயர்லாந்து அணி இழந்தது. முடிவில் 157 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது அயர்லாந்து.

158 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு இரண்டாவது பந்திலேயே பட்லரின் விக்கெட்டை வீழ்த்தி அதிர்ச்சி கொடுத்தார் லிட்டில். அதிலிருந்து மீண்டு பார்ட்னர்ஷிப் அமைப்பதற்குள் ஹேல்ஸ் விக்கெட்டையும் வீழ்த்தினார் லிட்டில்.
scorecard
scorecard
ICC

அடுத்து களமிறங்கிய ஸ்டோக்ஸை அறிமுக வீரரான ஹேண்ட் தனது முதல்  பந்தில்  போல்டாக்கினார். பிறகும் அயர்லாந்து பவுலர்கள் தங்கள் ஆதிக்கத்தைத் தொடர்ந்தனர். மலான்-ப்ரூக் இடையே கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து வந்த பார்ட்னர்ஷிப்பை இரண்டு கேட்ச்கள் டிராப் ஆகினாலும் அதே ஓவரில் ப்ரூக் விக்கெட்டை வீழ்த்தி முடித்து வைத்தார் டாக்ரெல்.  களத்தில் அதிக நேரம் செலவிட்ட மலானை ஷார்ட் பிட்ச் பந்துகள் மூலம் பெவிலியன் அனுப்பினார் மெக்கார்த்தி. அடுத்த ஓவரில் மொயீன் அலி சிக்சர், பவுண்டரி என அடிக்க முதல் மூன்று பந்துகளில் 12 ரன்கள் எடுக்க மழைக் குறிக்கிட்டது. டக் வொர்த் லீவிஸ் விதியின் படி 5 ரன்கள் குறைவாக இருந்தது இங்கிலாந்து, அடுத்த 8 நிமிடத்தில் ஆட்டம் ஆரம்பிக்கப்படாததால் அயர்லாந்து வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

மழைக் குறுக்கிடாமல் இருந்திருந்தால் இங்கிலாந்து வெற்றி பெற்றிருக்கலாம். ஆனால், இந்த வெற்றிக்கு அயர்லாந்து அணி தகுதியுடையதே. ஆரம்பத்தில் இருந்தே கடும் போராட்டக் குணத்தை வெளிப்படுத்திய அயர்லாந்து இறுதிவரை அதனை கடைப்பிடித்தது. அயர்லாந்து எதிர்ப்பார்த்ததைவிட குறைவான ஸ்கோரை தான் எடுத்தது. ஆனால், பவுலிங்கில் அதனை ஈடு செய்தது. ஆப்கன் போன்ற ஆசிய அணி  ஷார்ட் பிட்ச் பந்துகளுக்கு தடுமாறலாம்; ஆனால், அயர்லாந்து அணியுன் இதற்கு தடுமாறுவார்களா என்பதை இங்கிலாந்து அணி யோசிக்க மறந்துவிட்டது

IREvENG
IREvENG
இந்த வெற்றியின் மூலம் `ஏ' பிரிவிலிருந்து யார் அரையிறுதிக்குத் தகுதி பெறப் போகிறார்கள் என்பது இன்னும் சுவாரஸ்யமாகி உள்ளது. இந்த உலகக்கோப்பையில் மழை நிச்சயம் தவிர்க்க முடியாத ஒரு அங்கமாக இருக்கும் என்று தெரிகிறது!