Published:Updated:

T20 WorldCup: `ஏதாச்சு கருத்தா பேசுவேன்னு பாத்தா...' நன்றி கூறிய டிகே; நக்கலடித்த அஷ்வின்|Video

DK, Ashwin ( BCCI )

`நேற்று என்னை காப்பாற்றியதற்கு ரொம்ப நன்றி!' என தினேஷ் கார்த்திக் சொல்ல, அதற்கு அஷ்வின் செய்திருக்கும் ரியாக்சன் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Published:Updated:

T20 WorldCup: `ஏதாச்சு கருத்தா பேசுவேன்னு பாத்தா...' நன்றி கூறிய டிகே; நக்கலடித்த அஷ்வின்|Video

`நேற்று என்னை காப்பாற்றியதற்கு ரொம்ப நன்றி!' என தினேஷ் கார்த்திக் சொல்ல, அதற்கு அஷ்வின் செய்திருக்கும் ரியாக்சன் இணையத்தில் வைரலாகி வருகிறது.

DK, Ashwin ( BCCI )

பிசிசிஐ தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டிருக்கிறது. அதில் தினேஷ் கார்த்திக் அஷ்வினிடம் நன்றி கூறுகிறார். அதற்கு அஷ்வின் நக்கலாக ரியாக்ட் செய்கிறார். இந்த வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

டி20 உலகக்கோப்பையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மெல்பரினில் இந்திய அணி பாகிஸ்தானுக்கு எதிராக ஆடியிருந்தது. விராட் கோலியின் அதிரடியால் அந்தப் போட்டியை இந்திய அணி சிறப்பாக வென்றிருந்தது. இந்திய அணி தனது அடுத்த போட்டியில் நெதர்லாந்துக்கு எதிராக மோதவிருக்கிறது. இந்த போட்டி வருகிற 27 ஆம் தேதி சிட்னியில் நடைபெறுகிறது. இதற்காக இந்திய அணி மெல்பர்னிலிருந்து கிளம்பி சிட்னிக்கு பயணித்திருக்கிறது. இந்தப் பயணத்தின்போது விமான நிலையத்தில் எடுக்கப்பட்ட வீடியோவே இப்போது வைரலாகி வருகிறது. அதில்,

'நேற்று என்னை காப்பாற்றியதற்கு ரொம்ப நன்றி..' என தினேஷ் கார்த்திக் ஆங்கிலத்தில் சொல்ல, பதிலுக்கு 'எதாச்சு கருத்தா பேசுவேன்னு பார்த்தா...' என அஷ்வின் தமிழில் பேசி தினேஷ் கார்த்திக்கை கலாய்த்திருக்கிறார்.

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ஆட்டம் கடைசி ஓவரில் திரில்லாக சென்ற போது நவாஸ் வீசிய கடைசிக்கு முந்தைய பந்து கொஞ்சம் வைடாக சென்றிருக்கும் அதை இறங்கி வந்து ஆட முற்பட்டு தினேஷ் கார்த்திக் ஸ்டம்பிங் ஆகியிருந்தார். இந்திய அணி ஒரு பந்துக்கு இரண்டு ரன்கள் அடிக்க வேண்டிய சூழல் உருவானது. அப்போது அஷ்வின் உள்ளே வந்து ஒரு பந்தில் வைடு வாங்கி இன்னொரு பந்தை தூக்கியடித்து இந்திய அணிக்கு வெற்றியை பெற்று கொடுத்திருப்பார்.

ஒருவேளை அஷ்வின் அடித்துக் கொடுக்காமல் போட்டியின் முடிவு மாறியிருக்குமெனில் ரசிகர்கள், விமர்சகர்கள் என அத்தனை பேரின் கோபமும் 'ஃபினிஷர்' தினேஷ் கார்த்திக் மீதே திரும்பியிருக்கும். அஷ்வினின் சமயோஜிதத்தால் அது நிகழாமல் போனது. அதற்காகத்தான் தினேஷ் கார்த்தி அஷ்வினுக்கு நன்றி கூறினார். ஆனால், அஷ்வின் அதை செம கூலாக நக்கலடித்து ஜாலி செய்திருக்கிறார்.