Published:Updated:

`தம்பி...மேட்ச் இன்னும் முடியல' - கீப்பரால் ஏற்பட்ட ட்விஸ்ட்; பரபர போட்டியில் வென்ற வங்கதேசம்!

Nurul ( Hotstar )

வென்றுவிட்டோம் என வெற்றிக் கொண்டாட்டங்களிலெல்லாம் ஈடுப்பட்டிருந்த வங்கதேச அணியினர் மீண்டும் வந்து கடைசி பந்தை வீசினர்.

Published:Updated:

`தம்பி...மேட்ச் இன்னும் முடியல' - கீப்பரால் ஏற்பட்ட ட்விஸ்ட்; பரபர போட்டியில் வென்ற வங்கதேசம்!

வென்றுவிட்டோம் என வெற்றிக் கொண்டாட்டங்களிலெல்லாம் ஈடுப்பட்டிருந்த வங்கதேச அணியினர் மீண்டும் வந்து கடைசி பந்தை வீசினர்.

Nurul ( Hotstar )
உலகக்கோப்பையின் சூப்பர் 12 சுற்றின் இன்றைய போட்டியில் வங்கதேசமும் ஜிம்பாப்வேவும் மோதியிருந்தன. இறுதி வரை பரபரப்பாக சென்று கடைசி நிமிட ட்விஸ்ட்டுகளுக்கு பிறகு வங்கதேசம் இந்த போட்டியை மூன்று ரன்கள் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது.

டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பேட் செய்ய ஷான்டோ மற்றும் சர்க்கார் இன்னிங்ஸை தொடங்கினர். முசர்பானி தனது முதல் ஓவரிலேயே சர்காரை ஆட்டமிழக்கச் செய்தார். அடுத்து வந்த லிட்டன் தாஸ் பவுண்டரிகளுடன் தனது இன்னிங்ஸை கட்டமைத்த போதிலும் அதனையும் முசர்பானி உடைத்தார். கேப்டன் ஷகிப் உடன் இணைந்து ஷான்டோ ரன்களை சேர்க்கத் தொடங்கினார். 54 ரன்கள் சேர்த்த நிலையில் இந்த பார்ட்னர்ஷிப்பை வில்லியம்ஸ் முடிவுக்கு கொண்டு வந்தார். இதுவரை எந்தவொரு பெரிய இன்னிங்ஸையும் ஆடிராத ஷான்டோ இன்று தன் மீது வைத்த நம்பிக்கைக்கு ஏற்ப ஆடி அரைசதத்தைப் பூர்த்தி செய்தார். தொடர்ந்து எவன்ஸ் வீசிய 16வது ஓவரில் இரண்டு பவுண்டரி மற்றும் ஒரு சிக்சர் என மொத்தம் 17 ரன்களை சேர்த்தார். அடுத்த ஓவரில் ராசா பந்தில் ஷான்டோ ஆட்டமிழந்தார். ஷான்டோ 55 பந்துகளில் 71 ரன்களை அடித்திருந்தார். இறுதியில் ஹபிப் ஹோசைன் மற்றும் மொசடைக் இணைந்து அதிரடியாக ஆடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஜிம்பாப்வே பவுலர்கள் கட்டுக்கோப்பாக வீசினர். கடைசி மூன்று ஓவர்களில் ஒரு சிக்சர் மட்டுமே அடித்தனர் வங்கதேச பேட்டர்கள். வங்கதேசம் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 150 ரன்கள் எடுத்தது. ஜிம்பாப்வே தரப்பில் நகர்வா மற்றும் முசர்பானி தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தனர்.

Shanto
Shanto
ICC


பின்னர் 154 என்ற இலக்குடன் களமிறங்கிய ஜிம்பாப்வே அணிக்கு தொடக்கம் அவ்வளவு சிறப்பானதாக அமையவில்லை. ஓப்பனர்களான எர்வின் மற்றும் மாதர்வேரை டஸ்கின் அகமது பெவிலியனுக்கு அனுப்பினார். அடுத்த களமிறங்கிய வில்லியம்ஸ் நிலைத்து நின்று ஆட, மறுமுனையில் ஷூம்பா மற்றும் ராசா ஆகியோரின் விக்கெட்டுகளை ஒரே ஓவரில் முஸ்தபிசூர் ரஹ்மான் எடுத்தார். அடுத்து களமிறங்கிய சக்பவாவும் நிலைக்கவில்லை. வில்லியம்ஸ் மற்றும் ரியன் பர்ல் இணை ஆட்டத்தை இறுதி வரை எடுத்துச் சென்றது. நிதானமாக ஆடிய வில்லியம்ஸ் அரைசதம் அடித்தார்.

ஹசன் வீசிய 18 ஓவரில் இரண்டு பவுண்டரிகள் அடித்து பதற்றத்தை குறைத்தார். ஷகிப் வீசிய ஓவரில் வில்லியம்ஸ் ரன் அவுட் ஆக, கடைசி ஓவரில் ஜிம்பாப்வேவின் வெற்றிக்கு 16 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது. சிக்சர் அடிக்க முயன்று எவன்ஸ் அவுட் ஆக, அடுத்து வந்த நகர்வா பவுண்டரி மற்றும் சிக்சர் அடித்து அவுட்டானார். கடைசி பந்தில் 5 ரன்கள் தேவை என்ற நிலைக்கு போட்டி வந்தது. முசர்பானி அந்த கடைசி பந்தில் ஸ்டம்பிங் ஆனார்.

Nurul
Nurul
Hotstar
வங்கதேச கீப்பர் நூரூல் ஸ்டம்புக்கு முன்பாகவே பந்தை கலெக்ட் செய்துவிட்டதால் அது நோ-பால் என அறிவிக்கப்பட்டது. வென்றுவிட்டோம் என வெற்றிக் கொண்டாட்டங்களிலெல்லாம் ஈடுப்பட்டிருந்த வங்கதேச அணியினர் மீண்டும் வந்து கடைசி பந்தை வீசினர்.
Bangladesh
Bangladesh
ICC

இப்போது ஃப்ரீஹிட்டில் ஜிம்பாப்வேக்கு 4 ரன்கள் தேவை. ஜிம்பாப்வே வெற்றி பெறுமோ என்ற எண்ணம் எழுந்த போது, அது நடக்கவில்லை. இந்த பந்தில் முசர்பானியால் ஒரு ரன்னை கூட எடுக்க முடியவில்லை. இறுதியில் 3 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசம் வெற்றி பெற்றது.

ஜிம்பாப்வே அணியில் முசர்பானி சிறப்பாக பந்து வீசிய போதிலும் அவருக்கு ஏன் இரண்டு ஓவர்கள் மட்டும் தரப்பட்டது எனப் புரியவில்லை. ஒருவேளை அவர் முழுமையாக வீசியிருந்தால், ஜிம்பாப்வே அணி குறைவான இலக்கை துரத்தியிருக்கலாம். தகுதி சுற்றில் சிறப்பாக பேட்டிங் செய்த ராசா , சூப்பர் 12 சுற்றில் இன்னும் பெரிய அளவில் சோபிக்கவில்லை என்பது ஜிம்பாப்வேவின் தோல்விக்கு மிக முக்கிய காரணமாகும்.