Published:Updated:

T20 WorldCup:`இந்தியா மேட்ச்ல எப்படி கோலியோ; ஆஸி மேட்ச்ல அப்படி ஸ்டாய்னிஸ்' இலங்கையை வீழ்த்திய ஆஸி.!

Stoinis ( Australia Cricket )

தீக்சனா ஓவரில் மூன்று சிக்சர்களை விளாசி 17 பந்தில் அரைசதம் விளாசினார் ஸ்டாய்னிஸ். அடுத்த ஓவரிலேயே ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றது.

T20 WorldCup:`இந்தியா மேட்ச்ல எப்படி கோலியோ; ஆஸி மேட்ச்ல அப்படி ஸ்டாய்னிஸ்' இலங்கையை வீழ்த்திய ஆஸி.!

தீக்சனா ஓவரில் மூன்று சிக்சர்களை விளாசி 17 பந்தில் அரைசதம் விளாசினார் ஸ்டாய்னிஸ். அடுத்த ஓவரிலேயே ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றது.

Published:Updated:
Stoinis ( Australia Cricket )
டி20 உலகக்கோப்பையில் சூப்பர் 12 சுற்றின் இன்றைய ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவும் இலங்கையும் மோதியிருந்தன. இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது.
Stoinis
Stoinis
ICC

முதலில் பேட்டிங் ஆடிய இலங்கை அணியில் நிசாங்கா பொறுமையாக ஆடி 40 ரன்கள் எடுத்தார். அதன்பின் வந்த பேட்டர்களில் தனஞ்சய டி சில்வா மற்றும் சரித் அசலங்கா இருவரின் பங்களிப்பு மட்டும் தான் அணியை நல்ல ஸ்கோர் நோக்கி அழைத்துச் சென்றது. டி சில்வா 26 ரன்களும், அசலங்கா 38 ரன்களும் எடுத்தனர். இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளர்கள் பிட்ச்சை சிறப்பாகப் பயன்படுத்தினர். ஆஸ்திரேலியா தரப்பில் ஹேசில்வுட், ஸ்டார்க் ஆகியோர் தனது துல்லியமான பந்து வீச்சின் மூலம் கட்டுக்கோப்பாக  வீசியிருந்தனர்.  கம்மின்ஸ் மட்டும் இறுதி ஓவரில் 20 ரன்களை விட்டுக் கொடுத்தார். இதுபோக, 12 ரன்களை எக்ஸ்ட்ராஸாக கொடுத்திருந்தனர் ஆஸ்திரேலிய பௌலர்கள். இவற்றால் இன்னிங்ஸின் முடிவில் இலங்கை அணி 157 ரன்களை எடுத்தது.அடுத்து 158 என்ற இலக்கை குறைந்த ஓவர்களில் எட்டினால் நெகட்டிவ் ரன்ரேட்டை சற்று  உயர்த்தலாம் என்ற நிலையில் ஆஸ்திரேலிய அணி சேஸிங்கை ஆரம்பித்தது. ஆனால்,  ஆஸ்திரேலியாவிற்கு எதிர்ப்பார்த்த நல்ல துவக்கம் கிடைக்கவில்லை. 5வது ஓவரில் மஹீஸ் தீக்சனா பந்தில் வார்னர் ஆட்டமிழந்தார். டி20ஐ வரலாற்றில் ஆஸ்திரேலியா அணி முதல் முறையாக  பவர்ப்ளே  ஓவர்களில்  ஒரு பவுண்டரி கூட அடிக்கவில்லை. அடுத்து வந்த மார்ஷ், ஹசரங்கா ஓவரில் பவுண்டரி சிக்சர்களை அடித்து ரன்ரேட்டைக் கட்டுக்குள் கொண்டு வந்தார். டி சில்வா ஓவரில் தப்பித்த மார்ஷ், அவரின் அடுத்த ஓவரிலேயே ஆட்டமிழந்தார். மறுபடியும் ஹசரங்கா ஓவரில்  மேக்ஸ்வெல் 16 ரன்களைச் சேர்த்தார்.

ஆஸ்திரேலியா எளிதில் வெற்றி பெறும் என நினைத்த நிலையில் மஹீஸ் தீக்சனாவும் லஹிரு குமாராவும் இரண்டு ஓவர்களைக்  கட்டுக்கோப்பாக வீசி இலங்கை அணியை மீண்டும் ஆட்டத்திற்குள் கொண்டு வந்தனர்.
Stoinis
Stoinis
ICC

இந்த சிக்கனமான ஓவர்களுக்குப் பிறகு கருணாரத்னே மேக்ஸ்வெல்லின் விக்கெட்டை வீழ்த்தினர். இலங்கை ஆட்டத்திற்குள் வந்தது என நினைத்த நிலையில் மீண்டும் ஹசரங்கா ஓவரில் ஸ்டாய்னிஸ் இரண்டு சிக்சர்கள் விளாசி  ஆட்டத்தை முற்றிலும் திருப்பினார். தன் அதிரடியை நிறுத்தாத ஸ்டாய்னிஸ் அடுத்து தீக்சனா ஓவரில் மூன்று சிக்சர்களை விளாசி 17 பந்தில் அரைசதம் விளாசினார். அடுத்த ஓவரிலேயே ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றது.

டி20 உலகக்கோப்பையில் அடிக்கப்பட்ட இரண்டாவது அதிவேக அரைசதமாக ஸ்டாய்னிஸின் அரைசதம் பதிவாகியிருக்கிறது.

 கேப்டன் பின்ச் 42 பந்துகளில் 31 ரன்களை எடுத்து ஆட்டமிழக்காமல் கடைசி வரை களத்தில் இருந்தார். அதிரடியாக ஆடிய ஸ்டாய்னிஸ் ஆட்டநாயகன் விருது பெற்றார். இரண்டு சாம்பியன்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டிக்குரிய அதே பரப்பரப்புடன் இந்த ஆட்டம் நகர்ந்தது. இருபக்கமும் மாறிமாறி சாய்ந்து வந்த இந்த ஆட்டம் இறுதியில் ஸ்டாய்னிஸின் அதிரடியால் ஆஸ்திரேலியா பக்கம் திரும்பியது. ஆரம்பத்தில் அடிக்காத பவுண்டரிகளுக்கு எல்லாம் சேர்த்து இறுதியில் வான வேடிக்கை நிகழ்த்தினார் ஸ்டாய்னிஸ். இதுவரை சிறப்பாக வீசிய ஹசரங்காவை இன்று ஆஸ்திரேலியாவின் அதிரடி பேட்டர்கள் தாக்கினர். அதற்கு அவரின் ஷார்ட் பிட்ச் பந்துகளும் ஒரு காரணமாக இருந்தது. மேலும் பினுரா பெர்ணான்டோ ஆரம்பத்தில் காயம் காரணமாக வெளியேறியது இலங்கைக்கு சற்று பின்னடைவாக அமைந்தது.

லஹிரு குமாரா பந்து வீச்சு இலங்கைக்கு சற்று ஆறுதலான விஷயம். சமீரா இல்லாதது இலங்கையை பாதிக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். ஆனால், இருப்பதை வைத்து தான் செல்ல வேண்டும் என்ற நிலையில் சனாகாவிற்கு  பெரிய சவால் வரும் நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான போட்டியில் காத்திருக்கிறது. அதனை சனாகா எப்படி சமாளிக்கப்பபோகிறார் என்பதைப் பொறுத்திருந்து பார்க்கவேண்டும்!