Published:Updated:

AUSvIRE: `மேல ஏறி வாரோம் ஒதுங்கி நில்லு' - அயர்லாந்தை வெளுத்தெடுத்த ஆஸ்திரேலியா!

Finch ( ICC )

ஃபின்ச் மட்டும் தொடர்ச்சியாக நின்று ஸ்கோரை உயர்த்தினார். தொடக்கத்தில் ஷார்ட் பிட்ச் டெலிவரிக்களை முதுகில் வாங்கி தடுமாறியிருந்தாலும் பின்னர் சிறப்பாகவே ஆடினார்.

AUSvIRE: `மேல ஏறி வாரோம் ஒதுங்கி நில்லு' - அயர்லாந்தை வெளுத்தெடுத்த ஆஸ்திரேலியா!

ஃபின்ச் மட்டும் தொடர்ச்சியாக நின்று ஸ்கோரை உயர்த்தினார். தொடக்கத்தில் ஷார்ட் பிட்ச் டெலிவரிக்களை முதுகில் வாங்கி தடுமாறியிருந்தாலும் பின்னர் சிறப்பாகவே ஆடினார்.

Published:Updated:
Finch ( ICC )
டி20 உலகக்கோப்பையின் சூப்பர் 12 சுற்றில் கட்டாயம் வென்றே ஆக வேண்டிய போட்டியில் அயர்லாந்தை வீழ்த்தி சிறப்பான வெற்றியைப் பெற்றிருக்கிறது ஆஸ்திரேலியா. இந்த போட்டியில் ஸ்கோரை டிஃபண்ட் செய்த ஆஸ்திரேலிய அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது.

டாஸை வென்று அயர்லாந்து அணியே முதலில் பந்துவீசியிருந்தது. நாங்களும் முதலில் பந்துவீசவே நினைத்தோம் என கூறி ஆஸ்திரேலிய கேப்டன் ஃபின்ச் வருத்தமுடனேயே பேட்டிங்கைத் தொடங்கினார். ஆனால், ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங் வருத்தப்படும் வகையில் இல்லை. 20 ஓவர்களில் அந்த அணி 179 ரன்களை எடுத்திருந்தது.

தொடக்கத்தில் வார்னர் வெகு சீக்கிரமே விக்கெட்டை விட்டிருந்தார். மெக்கார்த்தி வீசிய மூன்றெ ஓவரில் ஷார்ட் பிட்ச் டெலிவரியை ஃபைன் லெக்கில் அடிக்க முயன்று கேட்ச் ஆகி வெளியேறினார். ஃபின்ச்சுடன் மார்ஷ் கூட்டணி சேர்ந்தார். இந்தக் கூட்டணி சிறிது நேரம் நிலைத்து நின்று 52 ரன்களை எட்டியது. இந்தக் கூட்டணியையும் மெக்கார்த்தியே பிரித்தார். மார்ஷை 28 ரன்களில் வீழ்த்தினார். இதன்பிறகு, மேக்ஸ்வெல் உள்ளே வந்து சிலபல ரிவர்ஸ் ஸ்வீப்களை ஆட முயன்று 13 ரன்களை மட்டுமே எடுத்து வெளியேறினார்.

Finch
Finch
ICC
ஃபின்ச் மட்டும் தொடர்ச்சியாக நின்று ஸ்கோரை உயர்த்தினார். தொடக்கத்தில் ஷார்ட் பிட்ச் டெலிவரிக்களை முதுகில் வாங்கியி தடுமாறியிருந்தாலும் பின்னர் சிறப்பாகவே ஆடினார். 44 பந்துகளை எதிர்கொண்டிருந்ர ஃபின்ச் 63 ரன்களை எடுத்து மெக்கார்த்தியின் பந்திலேயே வீழ்ந்தார்.

ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்களில் 179 ரன்களை எடுத்தது.

அயர்லாந்துக்கு டார்கெட் 180. ஓப்பனர்கள் பால்பிரினியும் ஸ்டிர்கிங்கும் தொடக்கத்தில் கொஞ்சம் அதிரடி காட்டினர். இரண்டு சிக்சர்களையும் ஒரு பவுண்டரியையும் அடித்திருந்தனர். கட்டாயம் வென்றே ஆக வேண்டிய போட்டியில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக எதுவும் அப்செட்டை நிகழ்த்திவிடுவார்களோ என்று தோன்றியது. ஆனால், பேட் கம்மின்ஸ் அப்படி எதையும் நிகழவிடாமல் தடுத்தார். பால்பிரினியை போல்ட் ஆக்கி வெளியேற்றினார். இதன்பிறகு, அயர்லாந்தால் பெரிதாக ஒன்றுமே செய்ய முடியவில்லை. மேக்ஸ்வெல்லே ஒரே ஓவரில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். டக்கர் மட்டுமே நின்று ஆடி அரைசதத்தை கடந்தார். இறுதியில் அயர்லாந்து அணி 137 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. 42 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய அணி அரையிறுதிக்கான வாய்ப்பை அதிகப்படுத்தியிருக்கிறது.