Published:Updated:

"பௌலர்களை மட்டும் குறை சொல்லாதீர்கள்!"- கேப்டன் ரோஹித்தை விமர்சிக்கும் சேவாக்

ரோஹித் சர்மா

"அன்றைய போட்டியில் அந்த ஆடுகளத்தில் தொடக்க பேட்ஸ்மேன்கள் நன்றாக ஆடியிருந்தால் இன்னும் அதிக ரன்களை எடுத்திருக்க முடியும்."- வீரேந்தர் சேவாக்

"பௌலர்களை மட்டும் குறை சொல்லாதீர்கள்!"- கேப்டன் ரோஹித்தை விமர்சிக்கும் சேவாக்

"அன்றைய போட்டியில் அந்த ஆடுகளத்தில் தொடக்க பேட்ஸ்மேன்கள் நன்றாக ஆடியிருந்தால் இன்னும் அதிக ரன்களை எடுத்திருக்க முடியும்."- வீரேந்தர் சேவாக்

Published:Updated:
ரோஹித் சர்மா

டி20 உலகக்கோப்பையின் அரையிறுதிப்போட்டியில் இந்திய அணி இங்கிலாந்திடம் தோற்றிருந்தது. போட்டியின் முடிவில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா அளித்த பேட்டியில், பந்துவீச்சாளர்கள் சரியாகச் செயல்படவில்லை எனவும் அவர்களின் செயல்பாடு ஆட்டத்தின் போக்கை மாற்றியது என்றும் கூறினார்.

இதைத் தொடர்ந்து ரோஹித் சர்மாவின் கருத்துக்கு எதிராக இந்திய அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் வீரேந்தர் சேவாக் விமர்சனம் செய்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில்,

sehwag
sehwag
"ஆட்டத்தின் முதல் பாதியில் இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் இன்னிங்ஸின் முதல் 12 ஓவரில் 82 ரன்கள் மட்டும் எடுக்கையில் அதன்பிறகு களமிறங்கக்கூடிய வீரர்கள் ஆட்டத்தில் பயமின்றி விளையாடி 100 ரன்களை எடுப்பார்கள் என்று எதிர்பார்ப்பது சரியல்ல. ஆம், இந்த மைதானத்தின் சராசரி ரன்கள் 150-லிருந்து 160 ஆக இருக்கலாம், நீங்கள் அதைவிட அதிகமாக ரன் எடுத்திருந்தீர்கள். ஆனால் அன்றைய போட்டியில் அந்த ஆடுகளத்தில் தொடக்க பேட்ஸ்மேன்கள் நன்றாக ஆடியிருந்தால் இன்னும் அதிக ரன்களை எடுத்திருக்க முடியும். இந்த ஆட்டத்தில் 150 -160 என்ற ரன்களுடன் வெற்றி பெற்றிருக்கவே முடியாது."
வீரேந்தர் சேவாக்

சேவாக்கின் இந்த விமர்சனத்தைப் பற்றிய உங்களின் கருத்து என்ன?