Published:Updated:

BAN v ZIM: தவறிழைத்த கீப்பர்; சர்ச்சையைக் கிளப்பிய நோ-பால்; ஐ.சி.சி விதிகள் என்ன சொல்கின்றன?

நூருல் ஹசன் ( Hotstar )

பந்து ஸ்டம்பைக் கடந்து செல்வதற்கு முன்னே நூருல் ஹசன் பந்தைப் பிடித்து ஸ்டம்பிங் செய்திருந்தார். இந்த ஸ்டம்பிங்கும் அதற்காக நோ-பால் அறிவிக்கப்பட்டதும் சர்ச்சையாகியிருக்கிறது.

BAN v ZIM: தவறிழைத்த கீப்பர்; சர்ச்சையைக் கிளப்பிய நோ-பால்; ஐ.சி.சி விதிகள் என்ன சொல்கின்றன?

பந்து ஸ்டம்பைக் கடந்து செல்வதற்கு முன்னே நூருல் ஹசன் பந்தைப் பிடித்து ஸ்டம்பிங் செய்திருந்தார். இந்த ஸ்டம்பிங்கும் அதற்காக நோ-பால் அறிவிக்கப்பட்டதும் சர்ச்சையாகியிருக்கிறது.

Published:Updated:
நூருல் ஹசன் ( Hotstar )

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் உலகக்கோப்பைத் தொடரில் வங்கதேச அணியும் ஜிம்பாம்ப்வே அணியும் மோதின. இந்தப் போட்டியில் ஜிம்பாப்வேயின் வெற்றிக்குக் கடைசி பந்தில் ஐந்து ரன்கள் தேவைப்பட்டன. பரபரப்பான சூழலில் மொசடெக் ஹூசைன் வீசிய கடைசி பந்தில் முசர்பானி ஸ்டெம்பிங் முறையில் அவுட்டானார். வங்கதேச அணி வெற்றிக் கொண்டாட்டங்களிலெல்லாம் ஈடுபட்டுக் கொண்டிருக்க திடீரென அந்த பந்து நோ-பாலாக அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ஃப்ரீ ஹிட்டில் மீண்டும் ஆடிய முசர்பானி கடைசி பந்தை வீண் செய்ய வங்கதேச அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. 

நடுவர்கள் நோ-பால் கொடுக்க காரணம் என்ன?

அம்பயர் நோ பால் கொடுத்தபோது
அம்பயர் நோ பால் கொடுத்தபோது

முசாடெக் ஹொசைனின் ஓவரின் இறுதிப் பந்தில் முசரபானி, ஸ்டம்பிங் முறையில் அவுட் ஆகியது போல் கண்ணுக்குத் தெரிந்தது. ஆனால் மூன்றாவது நடுவர் கிறிஸ் கஃபனே ஸ்டம்பிங்கைச் சரிபார்த்தார். உண்மையில், பந்து ஸ்டம்பைக் கடந்து செல்வதற்கு முன்னே நூருல் ஹசன் பந்தைப் பிடித்து ஸ்டம்பிங் செய்திருந்தார். இந்த ஸ்டம்பிங்கும் அதற்காக நோ-பால் அறிவிக்கப்பட்டதும் சர்ச்சையாகியிருக்கிறது.

இந்நிலையில் இதுபற்றி விதிமுறைகளில் என்ன கூறப்பட்டிருக்கிறது என்பதைப் பற்றி இங்கே...

MCC ஆனது கிரிக்கெட் விதி 27.3.1-யின் படி ஸ்டம்பிங் டிஸ்மிஸ் தொடர்பாகப் பின்வருவனவற்றைக் கூறுகிறது. ஒரு விக்கெட் கீப்பர் என்ன செய்ய வேண்டும் என்பதையும் என்ன செய்யக்கூடாது என்பதையும் அது விளக்குகிறது.

நாட் அவுட் அறிவிப்பு
நாட் அவுட் அறிவிப்பு
"பந்து வீச்சாளரால் வீசப்படும் பந்து, ஸ்டிரைக்கரின் மட்டை அல்லது ஸ்ட்ரைக்கரைத் தொடும் வரை அல்லது ஸ்ட்ரைக்கரின் எண்டில் விக்கெட்டைக் கடக்கும் வரை அல்லது ஸ்ட்ரைக்கர் பந்தை அடிக்க முயற்சி செய்யும் வரை, விக்கெட் கீப்பர் முழுவதுமாக ஸ்டம்புக்குப் பின்னால் இருக்க வேண்டும்" என்று அறிவுறுத்துகிறது.
BAN v ZIM
BAN v ZIM

நேற்றைய போட்டியில் ஹசன் பந்து ஸ்டம்பைக் கடப்பதற்கு முன்பே அதை கலெக்ட் செய்தது மூன்றாம் நடுவரால் கண்டறியப்பட்டது. கள நடுவர் எராஸ்மஸூம் அந்தப் பந்தை நோ-பாலாக அறிவித்தார். எராஸ்மஸின் நோ-பால் அழைப்பைத் தொடர்ந்து, ஜிம்பாப்வேயின் ஸ்கோரில் கூடுதலாக நோ-பாலுக்கு ஒரு ரன் கிடைத்தது. இதனால் வெற்றிக்கு நான்கு ரன்கள் மட்டுமே தேவைப்பட்ட நிலையில், பேட்டிங் ஆடும் தரப்பிற்கு ஃப்ரீ-ஹிட்டும் வழங்கப்பட்டது. ஐ.சி.சி விதியிலேயே கூறப்பட்டிருப்பதால் இந்த நோ-பால் விஷயத்தில் எந்தச் சர்ச்சைக்குமே இடமில்லாமல் போயிருக்கிறது.