Published:Updated:

ZIM v NED: `வெற்றி, வெற்றி!' - ஜிம்பாப்வேயை வீழ்த்தினாலும் நெதர்லாந்துக்குக் கடைசி இடம்தான்!

Netherlands ( ICC )

நெதர்லாந்து அணி வெற்றி பெற்றிருந்தாலும் குரூப் 2-வின் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்திலேயே உள்ளது.

ZIM v NED: `வெற்றி, வெற்றி!' - ஜிம்பாப்வேயை வீழ்த்தினாலும் நெதர்லாந்துக்குக் கடைசி இடம்தான்!

நெதர்லாந்து அணி வெற்றி பெற்றிருந்தாலும் குரூப் 2-வின் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்திலேயே உள்ளது.

Published:Updated:
Netherlands ( ICC )
உலகக்கோப்பைத் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இன்று சூப்பர் 12 சுற்றில் குரூப் 2 பிரிவில் ஜிம்பாப்வே அணியும் நெதர்லாந்து அணியும் அடிலெய்ட் ஓவல் மைதானத்தில் மோதியிருந்தன. இந்தப் போட்டியில் நெதர்லாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது.
Result
Result
ICC

முதலில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய ஜிம்பாப்வே அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் உட்பட அணியின் வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அதிகபட்சமாக ராசா 24 பந்துகளில் 40 ரன்கள் (3 பவுண்டரிகள், 3 சிக்ஸர்) எடுத்து ஸ்கோரை உயர்த்தியிருந்தார். சீன் வில்லியம்ஸ் 23 பந்துகளில் 28 ரன்கள் (3 பவுண்டரிகள்) எடுத்து ஆட்டமிழந்திருந்தார். இறுதியில் 19.2 ஓவர்களில் ஜிம்பாப்வே அணி 117 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக நெதர்லாந்து அணியின் வான் மேக்கரென் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். ப்ரெண்டண் கிளவர், வீக், பாஸ் டி லீட் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளும், கிளாஸன் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார்.

Netherlands
Netherlands
ICC

118 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கியது நெதர்லாந்து அணி. மேக்ஸ் ஓ டவுட் 47 பந்துகளில் 52 ரன்கள் (8 பவுண்டரிகள், 1 சிக்ஸர்) அடித்து முசரபானி பந்தில் ஆட்டம் இழந்தார். டாம் கூப்பர் 29 பந்துகளில் 32 ரன்கள் (2 பவுண்டரிகள், 1 சிக்ஸர்) எடுத்து எல் ஜாங்வே பந்தில் ஆட்டமிழந்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களிலேயே ஆட்டமிழந்தனர்.

18 வது ஓவரின் இறுதிப்பந்தில் பாஸ் டீ லீட் பவுண்டரி அடித்து அணியை வெற்றி பெறச் செய்தார். இறுதியில் 5 விக்கெட் இழப்பிற்கு 120 ரன்கள் எடுத்து, ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது நெதர்லாந்து அணி. ஜிம்பாப்வே அணியின் முசரபானி மற்றும் ரிச்சர்ட் தலா இரண்டு விக்கெட்டுகளும், ஜாங்குவே ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

O'Dowd
O'Dowd
ICC
இந்தப் போட்டியில் நெதர்லாந்து அணி வெற்றி பெற்றிருந்தாலும் குரூப் 2 வின் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்திலேயே உள்ளது.