Published:Updated:

IND vs SA: பயமுறுத்தும் பெர்த் - ஜெயிக்கப்போவது இந்திய பேட்டிங்கா, தென்னாப்பிரிக்க பௌலிங்கா?

Team India ( BCCI )

இந்த உலகக்கோப்பையில் இதுவரை 3 போட்டிகள் பெர்த்தில் நடந்திருக்கின்றன. மூன்று போட்டிகளிலுமே அவ்வளவு எளிதாக ரிசல்ட் கிடைத்துவிடவில்லை. எல்லாமே கொஞ்சம் நெருக்கமான போட்டிகளாகவே முடிந்திருக்கின்றன.

IND vs SA: பயமுறுத்தும் பெர்த் - ஜெயிக்கப்போவது இந்திய பேட்டிங்கா, தென்னாப்பிரிக்க பௌலிங்கா?

இந்த உலகக்கோப்பையில் இதுவரை 3 போட்டிகள் பெர்த்தில் நடந்திருக்கின்றன. மூன்று போட்டிகளிலுமே அவ்வளவு எளிதாக ரிசல்ட் கிடைத்துவிடவில்லை. எல்லாமே கொஞ்சம் நெருக்கமான போட்டிகளாகவே முடிந்திருக்கின்றன.

Published:Updated:
Team India ( BCCI )

ஒரு போட்டியில் பவுண்டரி லைனுக்கு வெளியே இந்திய வீரர் சஹால் சாவகாசமாக ஜாலியாக காலை ஆட்டிக்கொண்டே படுத்திருக்கும் ஒரு படத்தை வைத்து, 'இந்திய அணியும் க்ரூப் 2 இல் இப்படித்தான் இருக்கிறது' என்றெழுதி நெட்டிசன்கள் ஒரு மீமை ஷேர் செய்து வருகின்றனர்.

ஆம், இந்திய அணி அத்தனை சௌகரியமாகவே க்ரூப் 2 வில் முதலிடத்தில் இருக்கிறது. இதே நிலை இன்னும் ஒருநாள் கழித்தும் தொடருமா என்பது சந்தேகமே. ஏனெனில், இந்திய அணி தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக நாளை மோதவிருக்கிறது. அந்தப் போட்டியை வென்றால் மட்டுமே இந்திய அணியால் தொடர்ந்து சௌகரியமாக முதலிடத்தில் நீடிக்க முடியும். இந்திய அணி வெல்லுமா?
Zimbabwe
Zimbabwe
ICC

இந்திய அணியும் தென்னாப்பிரிக்க அணியும் மோதும் இந்தப் போட்டி பெர்த் மைதானத்தில் நடைபெறுகிறது. மற்ற மைதானங்களை விட இந்த மைதானம் பந்துவீச்சிற்கு அதிகமாக ஒத்துழைக்கக்கூடியது. இந்த உலகக்கோப்பையில் இதுவரை 3 போட்டிகள் பெர்த்தில் நடந்திருக்கின்றன. மூன்று போட்டிகளிலுமே அவ்வளவு எளிதாக ரிசல்ட் கிடைத்துவிடவில்லை. எல்லாமே கொஞ்சம் நெருக்கமான போட்டிகளாகவே முடிந்திருக்கிறது. இங்கேதான் இங்கிலாந்தை 113 ரன்கள் சேஸ் செய்ய ஆஃப்கானிஸ்தான் 19 வது ஓவர் வரை இழுத்துச் சென்றது. இலங்கையும் ஆஸ்திரேலியாவும் மோதிய ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவும் சேஸிங்கில் கடுமையாகத் திணறியது. ஃபின்ச் என்ன செய்வதென்றே தெரியாமல் விழிபிதுங்கி நின்றார். ஸ்டாய்னிஸின் அதிரடியால் மட்டுமே ஆஸ்திரேலியா தப்பித்திருந்தது. இவற்றையெல்லாம் விட ஹைலைட்டாக பாகிஸ்தானை வீழ்த்தி இந்த உலகக்கோப்பையின் மாபெரும் அப்செட்டை ஜிம்பாப்வே அணி இங்கேதான் நிகழ்த்தியது.

ஆக, தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக இந்திய அணி நாளை கடுமையான சவாலை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அதேதான் தென்னாப்பிரிக்காவிற்கும்.

தென்னாப்பிரிக்கா அணி
தென்னாப்பிரிக்கா அணி

தென்னாப்பிரிக்கப் பந்துவீச்சிற்கு அதிகம் ஒத்துழைப்பு இருக்கும் மைதானம்தான் என்றாலும் அதை கடந்தும் இந்திய அணியின் பேட்டிங் டிபார்ட்மெண்ட் பெர்ஃபார்ம் செய்தே ஆக வேண்டும். ஓப்பனர்களிடமிருந்து அதிரடியான தொடக்கம் இல்லாவிடிலும் சீரான நல்ல தொடக்கம் கிடைத்தே ஆக வேண்டும். கே.எல்.ராகுல் கடந்த இரண்டு போட்டிகளிலும் சொதப்பியிருக்கிறார். எஞ்சியிருக்கும் போட்டிகளில் இதுதான் முக்கியமான போட்டி என்னும்போது ராகுல் இந்தப் போட்டியில் சிறப்பாக ஆடியே ஆக வேண்டும்.

கடந்த 2 போட்டிகளிலுமே இந்திய அணி பவர்ப்ளேயில் ஓவருக்கு 6 ரன்களுக்கும் குறைவாகவே எடுத்திருக்கிறது.

என்னதான் நிலையான தொடக்கம் என்றாலும் இந்த அணுகுமுறை பின்வரிசை வீரர்களுக்கு கூடுதல் அழுத்தத்தைக் கொடுக்கும். ரோஹித், ராகுல், கோலி மூவரும் இந்த பவர்ப்ளே விஷயத்தில் பிரத்யேக கவனம் செலுத்தியாக வேண்டும். மற்றபடி பேட்டிங்கில் இந்திய அணி படு ஜோராகவே இருக்கிறது.

விராட் கோலி
விராட் கோலி
ICC
Sur - Vir கூட்டணி, ஹர்திக் பாண்டியா என எல்லாருமே சிறப்பாக ஆடுகிறார்கள். எந்தச் சொதப்பலும் இன்றி பெர்த் மைதானத்தின் கொஞ்சம் சீரற்ற பவுன்சை சரியாக எதிர்கொண்டாலே நல்ல ரிசல்ட் கிடைக்க வாய்ப்பிருக்கிறது.

வேகப்பந்துவீச்சும் ஒரு யுனிட்டாகவே சிறப்பாகவே இருக்கிறது. நடந்து முடிந்திருக்கும் இரண்டு போட்டிகளில் மட்டும் இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் 10 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கின்றனர். புவனேஷ்வர் குமார், ஷமி, அர்ஷ்தீப் சிங் மூவருமே தங்களின் பெஸ்ட்டை வெளிப்படுத்துவதற்கு ஏற்ற மைதானம் இது. அதேநேரத்தில், அது அத்தனை எளிதாகவும் நடந்துவிடாது. தென்னாப்பிரிக்க அணியின் பேட்டிங்குமே பயங்கரமாக இருக்கிறது. டீகாக் பேட்டை சுழற்றினாலே பவுண்டரிதான் எனக் கடந்த இரண்டு போட்டியிலுமே கலக்கியிருக்கிறார். ரூஸ்ஸோ இந்த உலகக்கோப்பையின் முதல் சதத்தை அடித்திருக்கிறார். இவர்கள் போக எய்டன் மார்க்ரம், டேவிட் மில்லர் என ஒரு பெரிய பேட்டிங் பட்டாளமே இருக்கிறது. இவர்களுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமெனில், இந்திய பௌலர்கள் ஆரம்பத்திலேயே விக்கெட்டுகளை வீழ்த்தி நல்ல தொடக்கத்தை கொடுத்தாக வேண்டும். டீகாக், ரூஸ்ஸோ போன்றோரை வீழ்த்த அஷ்வினுமே துருப்புச்சீட்டாக இருக்கக்கூடும்.

பந்துவீச்சிலும் ரபாடா, நார்க்கியா, பர்னல் என விதவிதமான வேகப்பந்து வீச்சாளர்களை வைத்திருக்கிறார்கள்.

நார்க்கியாவின் வேகத்தையும் பர்னலின் ஆங்கிள்களையும் ரபாடாவின் துல்லியத்தன்மையயும் சமாளிப்பது இந்திய அணிக்குக் கடினமாக இருக்கக்கூடும்.
South Africa
South Africa
ICC

இந்திய அணி இந்தப் போட்டியை வெல்லும்பட்சத்தில் பெரும் சவால்கள் அத்தனையையும் கடந்துவிடும். அரையிறுதிக்கு தகுதிப்பெறும் வாய்ப்பும் நிறையவே அதிகரிக்கும். ஏறக்குறைய தகுதிப்பெற்றுவிட்டது என்றே கூறிவிடலாம். தோற்கும்பட்சத்தில் இன்னும் கொஞ்சம் காத்திருக்க வேண்டும். தென்னாப்பிரிக்க அணி ஜிம்பாப்வேக்கு எதிராக வெல்ல வேண்டிய போட்டியில் மழையினால் வெறும் ஒரே ஒரு புள்ளியை மட்டுமே பெற்றிருந்தது. ஆக, அவர்களுமே இந்தப் போட்டியை வென்றே ஆக வேண்டும் என நினைக்கக்கூடும். தவறும்பட்சத்தில், பாகிஸ்தான் மீண்டு வந்து கடும் சவாலளிக்கவும் வாய்ப்பிருக்கிறது.

பெரும் சுவாரஸ்யத்தை அளிக்கப்போகும் ஒரு தரமான போட்டி நடைபெற இருக்கிறது. அதன் முடிவு எஞ்சியிருக்கும் போட்டிகளை மேலும் விறுவிறுப்பாகப் போகிறது.

இந்திய அணியின் வெற்றி வாய்ப்புகள் பற்றிய உங்களின் கருத்துகளை கமென்ட்டில் தெரிவியுங்கள்!