Published:Updated:

பும்ரா காயம்... பிரிஸ்பேனில் நடராஜனுக்கு வாய்ப்பு கிடைக்குமா?! #AUSvIND #Natarajan

Natarajan
Natarajan

பும்ராவிற்கு மாற்றாக, ஷர்துல் தாகூர் அல்லது நடராஜன் அணியில் விளையாடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆஸ்திரேலியவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய வீரர்கள் தொடர்ந்து காயமடைந்து வருகிறார்கள். ஷமி, உமேஷ் யாதவ், ராகுல் மற்றும் ஜடேஜா உள்ளிட்டோர் காயம் காரணமாக விலக, இப்போது இந்தியாவின் முக்கிய வேகப்பந்து வீச்சாளர் பும்ராவும் காயமடைந்திருக்கிறார். பும்ரா பிரிஸ்பேன் டெஸ்ட்டில் விளையாடமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Jasprit Bumrah
Jasprit Bumrah
AP

வயிற்றுப் பகுதியில் பும்ராவிற்குக் காயம் ஏற்பட்டிருக்கிறது. இதன், காரணமாக பும்ரா கடைசி டெஸ்ட்டில் விளையாட மாட்டார் எனவும், தொடர்ந்து பெளலிங் செய்யும்போது இந்தக் காயம் மேலும் பெரிதாகும் ஆபத்து இருக்கிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்து வரும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை மனதில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாகவும் தெரிகிறது. இந்திய அணியில் தொடர்ந்து பல வீரர்கள் காயத்தால் அவதிப்படுவது, நடந்துவரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை மேலும் சவாலான ஒன்றாக மாற்றியிருக்கிறது.

பும்ராவிற்கு மாற்றாக, ஷர்துல் தாகூர் அல்லது நடராஜன் அணியில் விளையாடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் சாய்ஸ் யார் என்பதை கமென்ட்டில் சொல்லுங்கள்...
அடுத்த கட்டுரைக்கு