ஐபிஎல்-2020 தொடரில் டி.நடராஜன் வீசிய அந்தத் துல்லிய யார்க்கர்களை நாம் அத்தனை சீக்கிரம் மறந்திருக்க மாட்டோம். தன் சிறந்த பந்துவீச்சால் ஆஸ்திரேலியாவிற்குப் பயணப்பட்ட இந்திய அணிக்கு நெட் பௌலராய் விமானம் ஏறினார் நடராஜன். ஆனால் ஆஸ்திரேலியா மண்ணில் நடந்ததோ வேறு, வெறும் நெட் பௌலராய் சென்ற அவர் டி20 தொடங்கி காபா டெஸ்ட் வரை தன் சர்வதேச அறிமுகத்தை சிறந்த முறையில் நிகழ்த்திவிட்டு நாடு திரும்பினார்.

இப்படி தன் சர்வதேச கரியரின் முதல் படியிலேயே தனக்கென்று முத்திரை பதித்த நடராஜன் அதை அடுத்து வரும் தொடர்களிலும் தொடர்வார் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகவும் இருந்தது. ஆனால், கடந்த ஒரு வருட காலமாக காயம், கொரோனா தொற்று எனக் களத்திற்கு வெளியே பல்வேறு சோதனைகளைச் சந்தித்து வந்தார் நடராஜன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSஆஸ்திரேலியாவில் நடந்த பார்டர் - கவாஸ்கர் கோப்பையின் போது அவரின் முட்டியில் காயம் ஏற்பட்டது. சுமார் நான்கு வார இடைவெளிக்கு பிறகு இங்கிலாந்திற்கு எதிரான போட்டியில் மீண்டும் களமிறங்கினார் அவர். காயத்தில் இருந்து முழுமையாக மீளாத அவரின் உடலை மேலும் மோசமாகியது அத்தொடர். அதன் பிறகு இன்று வரை எந்த ஒரு சர்வதேச போட்டியிலும் விளையாடவில்லை நடராஜன்.

2021-ம் ஐபிஎல் தொடரின் முதல் பாதியில் அந்தப் பழைய காயம் மீண்டும் தொந்தரவு கொடுக்க இரண்டாம் பாதியில் கொரோனா தொற்று ஏற்பட்டு அவர் எந்தப் போட்டியிலும் விளையாட முடியாத நிலை ஏற்பட்டது. அதன் பிறகு நடைபெற்ற சையத் முஷ்டாக் அலி தொடரில் நடராஜனால் தன் பழைய பந்துவீச்சை மீட்டெடுக்க முடியவில்லை. இதனால் அடுத்த நடந்த விஜய் ஹசாரே தொடரில் அவர் பங்கேற்கவில்லை.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
தற்போது காயத்தில் இருந்து முழுமையாக மீண்டு வந்துள்ள நடராஜன் தன் கம்-பேக் குறித்தும் வரவிருக்கும் ஐபிஎல் தொடர் பற்றியும் ஆங்கில ஊடகம் ஒன்றில் விரிவாகப் பேசியுள்ளார்.
"ஐபிஎல் அதற்கடுத்து டி20 உலகக்கோப்பை என பல முக்கிய தொடர்கள் இவ்வாண்டில் நடக்கவிருக்கின்றன. ஆனால் அவற்றை பற்றியெல்லாம் யோசிக்காமல் என் ஆட்டத்தில் மட்டுமே நான் கவனம் செலுத்துவது அவசியம். நான் செய்யவேண்டியவற்றை சரியாகச் செய்தால் பிற விஷயங்கள் தானாக நடக்கும். ஒரு நீண்ட இடைவெளிக்கு பிறகு விளையாட உள்ளேன். அதனால் நான் எந்த பதற்றமும் இல்லாமல் இருக்கிறேன் என்று சொன்னால் அது உண்மை இல்லை.
நான் சிறந்த முறையில் பந்துவீச வேண்டும் என்று மக்கள் நிச்சயம் எதிர்பார்ப்பார்கள். ஒன்றிரண்டு போட்டிகள் விளையாடினால் என் பழைய ரிதமிற்கு நான் நிச்சயம் திரும்பிவிடுவேன். வரவிற்கும் போட்டிகளுக்கான திட்டங்களிலும் நான் தெளிவாக உள்ளேன். என்னுடைய பலமான யார்க்கர் மற்றும் கட்டர்களில் அதிக கவனம் செலுத்தி பழைய நடராஜனாக நிச்சயம் வருவேன்" என்று கூறினார்.

சுமார் ஐந்து மாத காலம் பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் மையத்தில் (NCA) பயிற்சி மேற்கொண்ட நடராஜன், அதன்பிறகு சென்னையிலும் தன் சொந்த ஊரான சின்னப்பம்பட்டியிலும் தன் பயிற்சியைத் தொடர்ந்தார். அது குறித்து பேசும் அவர், "NCA-வில் ஒரே பயிற்சியை மீண்டும் மீண்டும் மேற்கொள்ள வேண்டி இருந்தது. ஆனால், காயத்தில் இருந்து முழுமையாக மீண்டு அணிக்குத் திரும்ப அதை முழுமையாக செய்தேன். மேலும் புதிய வைட் பாலை நன்றாக ஸ்விங் செய்ய தற்போது தீவிரம் காட்டி வருகிறேன். முக்கிய போட்டிகளில் நான் வீசும் பந்து அதிக அளவில் ஸ்விங் ஆனதில்லை. இப்பயிற்சிக்கு எனக்கு மிகவும் உதவியாக இருப்பவர் ஸ்ரீநாத் அரவிந்த்."
மேலும் தன் கிராமத்தில் தொடங்கிய கிரிக்கெட் பயிற்சி மையத்தை பற்றி பேசும் அவர், "அது என் நீண்ட நாள் கனவு. அங்குள்ள வீரர்களுக்கு நன்றாக பயிற்சியளித்து சிறந்த முறையில் நிச்சயம் உருவாக்குவோம்.” இவ்வாறு கூறினார் நடராஜன்.