Published:Updated:

ஆட்டத்தை மாற்றிய 20 வயது இளைஞன்... கோட்டைவிட்ட பெர்த் ஸ்கார்ச்சர்ஸ்! #BBL

#BBL, Ferguson

153 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சிட்னி தண்டர்ஸ் களமிறங்கியது. அந்த அணியின் ஓப்பனர்களாக ஹேல்ஸும், கவாஜாவும் களமிறங்கினர். பெஹ்ரண்டஃப் வீசிய முதல் ஓவரிலேயே சிட்னி அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

ஆட்டத்தை மாற்றிய 20 வயது இளைஞன்... கோட்டைவிட்ட பெர்த் ஸ்கார்ச்சர்ஸ்! #BBL

153 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சிட்னி தண்டர்ஸ் களமிறங்கியது. அந்த அணியின் ஓப்பனர்களாக ஹேல்ஸும், கவாஜாவும் களமிறங்கினர். பெஹ்ரண்டஃப் வீசிய முதல் ஓவரிலேயே சிட்னி அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

Published:Updated:
#BBL, Ferguson
சிட்னி தண்டர்ஸ் மற்றும் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணிகளுக்கிடையே இன்று நடைபெற்ற லீக் போட்டியில் சிட்னி தண்டர்ஸ் அணி இறுதி ஓவர் வரை சென்று த்ரில் வெற்றி பெற்றது.

டாஸ் வென்ற சிட்னி தண்டர்ஸ் அணியின் கேப்டன் ஃபெர்குசன் பௌலிங்கைத் தேர்வு செய்தார். பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணியின் சார்பாக ஓப்பனர்களாக இங்லிஸும், மன்றோவும் களமிறங்கினார். முதல் 4 ஓவர் பவர்ப்ளேவை இந்த கூட்டணி மெதுவாகவே அணுகியது. இந்த 4 ஓவர்களில் 3 பவுண்டரிகளுடன் 22 ரன்கள் மட்டுமே கிடைத்திருந்தது. இந்நிலையில்தான் 5வது ஓவரை வீச வந்தார் மெக் ஆண்ட்ரூ. இந்த ஓவரில் இரண்டு விக்கெட்டுகளை இழந்து பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் தடுமாறத் தொடங்கியது. 11 பந்துகளைச் சந்தித்து பவுண்டரியே அடிக்காமல் 4 ரன்னில் தடுமாறிக்கொண்டிருந்த இங்லிஸ் பவுண்டரி ப்ரஷரில் பெரிய ஷாட்டுக்கு சென்று டேவிஸிடம் கேட்ச் கொடுத்து வெளியேற, அதே ஓவரில் வந்த வேகத்திலேயே ஜோ க்ளார்க் ரன் அவுட் ஆகி வெளியேறினார். 7-வது ஓவரிலேயே பென் கட்டிங்கின் பந்துவீச்சில் ஒரு கட் ஆட முயன்று மில்னேவிடம் கேட்ச் கொடுத்து 25 ரன்களில் மன்றோவும் வெளியேறினார். சீக்கிரமே மூன்று விக்கெட்டுகளை இழந்த நிலையில் கேப்டன் ஆஷ்டன் டர்னரும் ஷான் மார்ஷும் கூட்டணி போட்டனர். விக்கெட் விடாமல் ஆட வேண்டும் என்பதால் அடுத்த நான்கு ஓவர்களுக்கு ஸ்ட்ரைக்கை மட்டுமே ரொட்டேட் செய்து பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 10 ஓவர்கள் முடிவில் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணி 56 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது.

#BBL
#BBL

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ரன்ரேட் 6 க்கும் குறைவாக இருந்ததால் 11-வது ஓவரிலேயே பவர் சர்ஜை எடுத்தது இந்தக் கூட்டணி. டேனியல் சாம்ஸ் வீசிய 11-வது ஓவரில் ஒரு பவுண்டரியும் சிக்சரும் விளாசிய டர்னர் அந்த ஓவரின் கடைசி பந்தையும் பவுண்டரியாக்க முயற்சி செய்ய நூலிழையில் கவர் ஃபீல்டரை க்ளியர் செய்ய முடியாமல் கேட்ச் கொடுத்து 23 ரன்களில் வெளியேறினார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மிட்செல் மார்ஷ் அடுத்த ஓவரில் சிக்சர் அடிக்க 2 ஓவர் பவர் சர்ஜில் மட்டும் பெர்த் அணிக்கு 30 ரன்கள் கிடைத்தது. டர்னருக்கு பிறகு சீக்கிரமே ரிச்சர்ட்சன் வெளியேறிவிட, பேன்க்ராஃப்ட்டும் மிட்செல் மார்ஷும் கூட்டணி போட்டனர். இந்தக் கூட்டணி கடைசி வரை விக்கெட் விடாமல் நின்று அணியின் ஸ்கோரை உயர்த்தியது. கடைசி 5 ஓவர்களில் இந்த கூட்டணி 56 ரன்களை சேர்த்தது. பேன்க்ராஃப்ட்டும் ஒரு சில அட்டகாசமான பவுண்டரிகளை அடித்து 34 ரன்களில் நாட் அவுட்டாக இருந்தார். அதேமாதிரி, முதலிலிருந்தே பொறுப்பாக ஆடிய மிட்செல் மார்ஷ் 41 பந்துகளில் 52 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாக இருந்தார். 20 ஓவர்கள் முடிவில் பெர்த் அணி 152 ரன்களை எடுத்திருந்தது.

153 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சிட்னி தண்டர்ஸ் களமிறங்கியது. அந்த அணியின் ஓப்பனர்களாக ஹேல்ஸும், கவாஜாவும் களமிறங்கினர். பெஹ்ரண்டஃப் வீசிய முதல் ஓவரிலேயே சிட்னி அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அந்த ஓவரில் கடைசியாக வீசப்பட்ட ஒரு குட் லென்த் பந்தில் மிடில் ஸ்டம்ப்பை பறிகொடுத்து ஹேல்ஸ் வெளியேறினார். ஒன் டவுனில் அணியின் கேப்டன் ஃபெர்குசன் களமிறங்கினார். ஃபெர்குசன்-கவாஜா கூட்டணி பவர்ப்ளேயில் இன்னொரு விக்கெட்டை இழந்துவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தது. இதன் விளைவாக முதல் 4 ஓவர்களில் 20 ரன்கள் மட்டுமே கிடைத்திருந்தது. 6-வது ஓவரில் ஆண்ட்ரூ டை அறிமுகமானார். இந்த ஓவரின் முதல் பந்திலேயே கவாஜா எட்ஜ் ஆகி கீப்பரிடம் கேட்ச் கொடுத்தார். ஆனால், அம்பயர் இதை நாட் அவுட் என்று அறிவிக்க, ரீப்ளேவில் பந்து பேட்டில் பட்டு கேட்ச் ஆனது தெளிவாகத் தெரிந்தது. அம்பயரிடம் டை விளக்கம் கேட்ட போது, பேட் தரையில் பட்டதால் வந்த சத்தம் அது என கூறினார். உச்சபட்ச அதிர்ச்சியைடைந்த டை தரைக்கும் பேட்டுக்கும் ஏழு கிலோ மீட்டர் இருந்ததே என சைகையில் செய்து காண்பித்தார். இது உண்மையிலே அவுட்தான். புதிதுபுதிதாக விதிமுறைகளை கொண்டு வரும் பிக்பேஷ் லீகில் இன்னமும் DRS இல்லை என்பது சோகம்தான்.

#BBL
#BBL

கவாஜாவுக்கு கிடைத்த இந்த வாய்ப்பை அவர் முழுமையாக பயன்படுத்தி கொள்ளவில்லை. அடுத்த ஓவரே ஹார்டி பந்துவீச்சில் தூக்கியடித்து மிட் விக்கெட்டிடம் கேட்ச் ஆனார். கவாஜா 21 ரன்களில் வெளியேறியவுடன் ஆலிவர் டேவிஸ் உள்ளே வந்தார். ஆஸ்திரேலிய அண்டர் 19 அணியில் ஆடிவிட்டு வந்திருக்கும் ஆலிவர் டேவிஸ்தான் இந்த ஆட்டத்தை மாற்றினார். கேப்டன் ஃபெர்குசன் ஒருபுறம் விக்கெட் விழாமல் பாதுகாத்துக்கொள்ள டேவிஸ்தான் பெரிய சிக்சர்களையெல்லாம் அடித்தார். முதல் ஓவரிலேயே விக்கெட் எடுத்து மிரட்டிய பெஹ்ரண்டஃப் வீசிய 11-வது ஓவரில் மட்டும் 2 சிக்சர்களை அடித்து மிரட்டினார் டேவிஸ்.

தொடர்ந்து அதிரடி காட்டிய டேவிஸ் 14-வது ஓவரில் ஃபவாத் அஹமது வீசிய பந்தில் இறங்கி வந்து பெரிய ஷாட்டுக்கு முயன்று ஸ்டம்பிங் ஆனார். டேவிஸ் 22 பந்துகளில் 3 சிக்சர் மற்றும் பவுண்டரியுடன் 36 ரன்களை சேர்த்தார். டேவிஸ் டார்கெட்டை சுலபமாக்கிவிட்டு செல்ல ஆட்டம் சீக்கிரம் முடிந்துவிடும் என நினைக்கையில், கடைசியில் டை மற்றும் அஹமது வீசிய 17 மற்றும் 18 வது ஓவரில் மொத்தமாகவே 7 ரன்கள் மட்டுமே கிடைத்தது. பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் கொஞ்சம் கடினமளிக்கும் என நினைக்கையில் அடுத்த ஓவரிலேயே 10 ரன்கள் விட்டுக்கொடுக்க கடைசி ஓவரில் பென் கட்டிங் இரண்டு பவுண்டரிகளை அடித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்தார். கேப்டன் ஃபெர்குசன் 53 பந்துகளில் 61 ரன்கள் எடுத்து நாட் அவுட் ஆக இருந்தார்.

சிட்னி தண்டர்ஸ் அணி Bash Boost ஐயும் வென்றிருப்பதால் நான்கு புள்ளிகளைப் பெற்றது.

#BBL
#BBL
twitter.com/ThunderBBL

பெர்த் ஸ்கார்ச்சர்ஸின் பேட்டிங்கின் போது அந்த அணி சீக்கிரமே விக்கெட்டுகளை இழந்ததால் மிட்செல் மார்ஷ் கொஞ்சம் பொறுமையாக ஆடினார். ஆனால், கடைசி நேரத்தில் பேன்க்ராஃப்ட்டுடன் நல்ல பார்ட்னர்ஷிப் கிடைத்த போது இன்னும் கொஞ்சம் அதிரடி காட்டியிருக்க வேண்டும். அதன்மூலம் கூடுதலாக ஒரு 20 ரன்கள் கிடைத்திருந்தாலும் கூட ஆட்டம் இன்னும் நெருக்கமாக அமைந்திருக்கும்.

சிட்னி தண்டர்ஸ் அணியுமே தனது ஓப்பனர்களை சீக்கிரம் இழந்ததுதான் பிரச்னை. ஆனால், ஒரு முனையில் கேப்டன் ஃபெர்குசன் பொறுப்பாக நின்று விக்கெட் விழாமல் தடுத்தார். பெஹ்ரண்டஃப் வீசிய 5-வது ஓவரில் ஃபெர்குசன் ஒரு கேட்ச் வாய்ப்பைக் கொடுத்தார். அதை இங்லிஸ் தவறவிட்டிருப்பார். இது ஆட்டத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. மேலும், சில கேட்ச் ட்ராப்கள் மிஸ் ஃபீல்ட்கள் என பெர்த் ஸ்கார்ச்சர்ஸின் ஃபீல்டிங் ரொம்பவே சுமார்தான். அதுவும் கடைசியில் ஆட்டம் பரபரப்பாக எந்த பக்கம் செல்லும் எனத் தெரியாத நிலையில் இருந்த போது நடந்த மிஸ் ஃபீல்ட்கள் ஆட்டத்தை முழுமையாக சிட்னி பக்கமாக மாற்றிவிட்டது.