Published:Updated:

வார்னர், வில்லி, பேர்ஸ்டோ, ரஷீத்... நட்சத்திரங்கள் நிறைந்த SRH ஆல்டைம் லெவன்!

Sunrisers Hyderabad

இன்னொரு வேகப்பந்துவீச்சாளர் வேண்டாம் என்பதால் முஸ்தாஃபிசுர் தன் இடத்தை இழக்கிறார். முகமது நபி, மோய்சஸ் ஹென்றிக்ஸ், ஷகிப், வில்லியம்சன்… நால்வரில் யார்?

வார்னர், வில்லி, பேர்ஸ்டோ, ரஷீத்... நட்சத்திரங்கள் நிறைந்த SRH ஆல்டைம் லெவன்!

இன்னொரு வேகப்பந்துவீச்சாளர் வேண்டாம் என்பதால் முஸ்தாஃபிசுர் தன் இடத்தை இழக்கிறார். முகமது நபி, மோய்சஸ் ஹென்றிக்ஸ், ஷகிப், வில்லியம்சன்… நால்வரில் யார்?

Published:Updated:
Sunrisers Hyderabad

2013-லிருந்துதான் ஐ.பி.எல் தொடரில் பங்கேற்கத் தொடங்கியதால், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் ஆல்டைம் லெவனைத் தேர்வு செய்வது கடினம். அதுமட்டுமல்லாமல் பெரும்பாலான போட்டிகளில் பந்துவீச்சையும், வார்னர் / வில்லியம்சனையும் நம்பியிருந்தார்கள். அவர்கள்தான் தொடர்ந்து பங்களித்துக்கொண்டிருந்தார்கள். அதனால், ஒரு சில இடங்களுக்கு வீரர்களைத் தேர்வு செய்வது எளிதாக இல்லை.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஓப்பனராக, கேப்டனாக டேவிட் வார்னர். சன்ரைசர்ஸின் தவிர்க்க முடியாத வீரர். சொல்லப்போனால், அந்த அணியின் ஆல்டைம் பெஸ்ட் பிளேயர் அவராகத்தான் இருப்பார். 5 சீஸன்களில் 3,271 ரன்கள். 2 சதங்கள், 34 அரைசதங்கள். 55.44 என்ற நினைத்துக்கூடப் பார்க்க முடியாத சராசரி..! நினைத்துப் பார்க்க முடிகிறதா! தவான், ஃபின்ச், சஹா, வில்லியம்சன், பேர்ஸ்டோ எனத் தன்னுடைய பார்ட்னர் யாராக இருந்தாலும் அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் தன் வெறித்தன ஆட்டத்தை நான் ஸ்டாப்பாக ஆடியிருக்கிறார். அந்த அணியின் சாம்பியன் பட்டத்தில் இவரது பங்களிப்பென்பது அசாத்தியமானது.

David Warner
David Warner

வார்னரோடு ஓப்பனராக ஷிகர் தவான். 2014, 2015 சீஸன்களில் சுமாராகவே விளையாடியிருந்தாலும் மற்ற சீஸன்களில் சிறப்பாகச் செயல்பட்டிருக்கிறார் கபார். அந்த அணிக்கான தன் கடைசி 3 சீஸன்களில் 401, 479, 497 என 36+ சராசரியில் சிறப்பாக ஸ்கோர் செய்திருக்கிறார். 19 அரைசதங்கள் வேறு! மற்ற இந்திய வீரர்கள் பெரிதாக சோபித்திடாத நிலையில், தவானை கேபிடல்ஸ் அணிக்கு விற்றது சரியான முடிவா என்பது அந்த நிர்வாகத்துக்குத்தான் வெளிச்சம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மூன்றாவதாக ஜானி பேர்ஸ்டோ. பேர்ஸ்டோ? ஆம், பேட்ஸ்டோ. ஒரு சீஸன்தானே ஆடியிருக்கிறார்? ஆம், ஆனால் அதுவொன்றும் சாதாரண சீஸன் கிடையாதே... என்னா அடி! 10 போட்டிகளில் 455 ரன்கள். 55.62 என்ற அசத்தல் சராசரி. ஆனாலும் ஒரு சீஸன் ஆடிய ஒருவரை ஆல்டைம் லெவனில் எப்படி எடுப்பது? காரணம், சன்ரைசர்ஸுக்கு ஒரு நல்ல இந்திய கீப்பரைக் கண்டுபிடிப்பது மிக மிகக் கடினம். நமன் ஓஜா, ரித்திமான் சஹா, பார்திவ், கோஸ்வாமி என யாருமே சரியான பங்களிப்பை அந்த அணிக்குத் தரவில்லை. விக்கெட் கீப்பர் என்ற பாக்ஸை டிக் செய்வதால் பேர்ஸ்டோவை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.

Jonny Bairstow
Jonny Bairstow

ரஷீத் கான் இன்னொரு ஓவர்சீஸ் ஸ்லாட்டை போட்டியின்றி நிரப்பிவிடுவார் என்பதால், கடைசி வெளிநாட்டு வீரராக யாரைத் தேர்ந்தெடுப்பது என்பதில் கடும் போட்டி நிலவும். பேட்டிங், பௌலிங் என இரண்டு ஏரியாவிலும் முழுமையான பங்களிப்பை இன்னும் கொடுக்கவில்லை என்பதால் நபியைக் கழித்து விடலாம். ஷகிப் 2018-ல் சிறப்பாகச் செயல்பட்டிருந்தாலும், அதைத் தவிர்த்து பெரிய பங்களிப்பு இல்லை. அதனால், அவரையும் விட்டுவிடலாம். கடைசியில், ஹென்றிக்ஸ் vs வில்லியம்சன்.

ஒரு சீஸனில் 11 விக்கெட்டுகளும், இன்னொரு சீசனில் 12 விக்கெட்டுகளும் வீழ்த்தியிருக்கும் ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டரைத் தேர்வு செய்வது சரியான முடிவாகத்தான் இருக்கும். ஆனால், நியூசிலாந்து கேப்டனைத் தவிர்க்க முடியுமா? ஒரேயொரு சிறப்பான சீஸன் (2018) மட்டும்தான். இருந்தாலும் நல்ல சராசரி வைத்திருக்கிறார் வில்லியம்சன். 2017-ல் குறைந்த போட்டிகளில் மட்டுமே ஆடியிருந்தாலும் கன்சிஸ்டென்ட்டாக ஸ்கோர் செய்தார். வார்னர் என்ற மிகப்பெரிய ஆளுமை இல்லாத இடத்தை மிகச் சிறப்பாக நிரப்பினார். முன்நின்று வழிநடத்தினார். ரசிகர்களின் ஃபேவரிட்டாகவும் இருப்பவரை எப்படிப் புறக்கணிக்க முடியும். அதனால், நான்காவது ஸ்லாட் வில்லிக்குத்தான்.

Kane Williamson
Kane Williamson

வார்னர், தவான், பேர்ஸ்டோ, வில்லியம்சன் என டாப் ஆர்டர் செட் ஆகிவிட்டது. மிடில் ஆர்டர். சன்ரைசர்ஸின் மிடில் ஆர்டர்… இதைத் தேர்வு செய்வது எளிதல்ல. ஏனெனில், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அந்த அணிக்குப் பங்களித்ததே இல்லை. அதனால், ஓரளவு சுமாராகவாவது செயல்பட்ட யுவ்ராஜ் சிங், மனீஷ் பாண்டே, விஜய் சங்கர் ஆகியோரை வைத்து மீதமிருக்கும் பேட்டிங் ஸ்பாட்களை நிரப்பிவிடுவோம். அடுத்து பௌலர்கள்.

ரஷீத் கான்… அந்த அணியில் தவிர்க்க முடியாத மற்றொரு வீரர். 3 சீஸன்களில் 55 விக்கெட்டுகள் என்பது அசாதாரணமான விஷயம். தன் முதல் சீஸனிலேயே ஐ.பி.எல் ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியவர், இன்னும் அதைவிட்டு அவர்களை அகல விடவில்லை. இன்னும் அந்த ஆச்சர்யத்துக்குள்ளேயே மூழ்க வைத்திருக்கிறார். ஒருசில போட்டிகளில் விக்கெட் எடுக்கவில்லையென்றாலும் சிக்கனமாகப் பந்துவீசி எதிரணிக்கு நெருக்கடி ஏற்படுத்துவிடுவார்.

Rashid Khan
Rashid Khan

புவி, தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் பர்ப்பிள் கேப் வென்ற ஒரே வீரர். அதற்கு மேல் அவரைத் தேர்வு செய்வதற்குக் காரணம் சொல்லத் தேவையில்லை. இன்னொரு வேகப்பந்துவீச்சாளராக சித்தார்த் கௌல். சன்ரைசர்ஸுக்காக ஆடிய 34 போட்டிகளில் 43 விக்கெட்டுகள் வீழ்த்தியிருக்கிறார். புவி அண்ட் கோவுக்கு நல்ல கம்பெனி கொடுத்து தேவையான நேரங்களில் விக்கெட் வீழ்த்தியிருக்கிறார். அதனால், அந்த அணிக்கு ஆடிய லட்சம் வேகப்பந்துவீச்சாளர்களிலிருந்து ஆல்டைம் லெவனுக்கு அவரைத் தேர்வு செய்யலாம். கடைசி ஒரு இடம் யாருக்கு?

அமித் மிஷ்ரா, கரன் ஷர்மா இருவரும் அந்த அணிக்கு ஓரளவு நன்றாக ஆடியிருக்கிறார்கள். ஆனால், வேகப்பந்துவீச்சுக்குப் பெயர்போன அணியில் இரண்டு ஸ்பின்னர்கள் ஆடுவதை எப்படி ஏற்றுக்கொள்வது. அதனால், கடைசி இடத்தையும் ஒரு வேகப்பந்துவீச்சாளருக்கே கொடுப்போம். சந்தீப் ஷர்மா… ஐ.பி.எல் தொடரில் கன்சிஸ்டென்டாகப் பெர்ஃபார்ம் செய்துகொண்டிருப்பவர், சன்ரைசர்ஸ்கும் நன்றாகவே செயல்பட்டிருக்கிறார். 23 போட்டிகளில் 24 விக்கெட்டுகள் என்பது ஒரு வேகப்பந்துவீச்சாளருக்கு நல்ல நம்பர்தான். பவர்பிளேவில் எகனாமிகலாகவும் பந்துவீசக்கூடிய சந்தீப், அணியின் கடைசி இடத்தைப் பிடிக்கிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism