Published:Updated:

Virat Kohli: "நாம் இப்போது பேசவேண்டியது கோலியைப் பற்றி அல்ல,கில் பற்றி"- சுனில் கவாஸ்கர் சொல்வதென்ன?

விராட் கோலி, சுப்மன் கில்

"டி20 அணி தேர்வு பற்றி நாம் இப்பொழுது கவலைப்பட வேண்டிய அவசியமில்லை"- சுனில் கவாஸ்கர்

Published:Updated:

Virat Kohli: "நாம் இப்போது பேசவேண்டியது கோலியைப் பற்றி அல்ல,கில் பற்றி"- சுனில் கவாஸ்கர் சொல்வதென்ன?

"டி20 அணி தேர்வு பற்றி நாம் இப்பொழுது கவலைப்பட வேண்டிய அவசியமில்லை"- சுனில் கவாஸ்கர்

விராட் கோலி, சுப்மன் கில்
குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் தோல்வி அடைந்ததால்  ப்ளே ஆப் சுற்றுக்குத் தகுதி பெறாமல் வெளியேறி இருக்கிறது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி.   

அந்தப் போட்டியின் போது, பெங்களூர் அணிக்காக விராட் கோலி சிறப்பாக சதம் அடித்திருந்தார். சுப்மன் கில்லும் சதம் விளாசி குஜராத் அணியை வெற்றி பெறச் செய்தார். இந்நிலையில் விராட் கோலியின் எதிர்காலம் குறித்து சுனில் கவாஸ்கரிடம் கேட்டபோது அதற்கு பதிலளித்த அவர், “ நாம் இப்போது பேச வேண்டியது கோலியைப் பற்றி அல்ல, சுப்மன் கில்லைப் பற்றி. காரணம் அன்றையப் போட்டியில் அவர் கடுமையான சூழலுக்கு மத்தியில் அந்த சதத்தை அடித்தார்.

சுனில் கவாஸ்கர்
சுனில் கவாஸ்கர்

டி20 அணித் தேர்வு பற்றி நாம் இப்போது கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. அதற்கு இன்னும் ஒரு வருடங்களுக்கு மேல் இருக்கிறது. ஞாயிற்றுக்கிழமை சுப்மன் கில்,  விராட் கோலி விளையாடியதைவிட யாராவது சிறப்பாக விளையாடினால்தான் போட்டியை வெல்ல முடியும் என்ற நிலையில் சதத்தை அடித்து அணிக்கு வெற்றியைத் தேடி தந்திருக்கிறார்.  எனவே விராட் கோலி பற்றி பேசுவதைத் தவிர்த்துவிட்டு கில் பற்றித்தான் அதிகம் பேசவேண்டும்" என்று தெரிவித்திருக்கிறார்.