சினிமா
Published:Updated:

தமிழ்க் கிராமத்திலிருந்து ஒரு தளபதி!

நடராஜன்
பிரீமியம் ஸ்டோரி
News
நடராஜன்

முதல் போட்டியில், அதுவும் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் தற்போதிருக்கும் பார்முக்கு நடராஜன் தாக்குப்பிடிப்பது கஷ்டம்தான் என கோலி நினைத்திருக்கக்கூடும்.

தன் கேப்டன்சியைக் காப்பாற்ற சின்னப்பம் பட்டியில் இருந்து, தங்கராசு நடராஜன் என ஓர் இடதுகை வேகப்பந்து வீச்சாளர் வருவார் என கோலி கனவிலும் எதிர்பார்த்திருக்க மாட்டார்!
தமிழ்க் கிராமத்திலிருந்து ஒரு தளபதி!

‘கோலி கேப்டன்சியில் இருந்து விலக வேண்டும்’ என்கிற குரல்கள் ஓங்கி ஒலிக்க ஆரம்பித்த நேரத்தில்தான் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரையும் இழந்திருந்தார் கேப்டன் கோலி. டி20 தொடரும் கைவிட்டுப்போனால் அவராகவே கேப்டன்சியில் இருந்து விலகும் அறிவிப்பை வெளியிட்டுவிடுவார் என ஆரூடங்கள் சொல்லப்பட்ட நிலையில், நடராஜனால் நிகழ்ந்திருக்கிறது அந்த அதிசயம்... அற்புதம்!

ஒருநாள் தொடர் 3-0 என முடிந்து, கோலி அவமானங்களை சுமந்திருந்திருக்க வேண்டிய நேரமது. மூன்றாவது ஒருநாள் போட்டியில் ‘எதற்கும் ஒரு முயற்சியாக இருக்கட்டும்’ எனத் தன்னுடைய வழக்கமான பிளேயிங் லெவனைக் கலைத்து நடராஜனை அணிக்குள் கொண்டுவந்திருந்தார் கோலி. அதுவும் முகமது ஷமிக்குப் பதிலாக!

தமிழ்க் கிராமத்திலிருந்து ஒரு தளபதி!

முதல் போட்டியில், அதுவும் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் தற்போதிருக்கும் பார்முக்கு நடராஜன் தாக்குப்பிடிப்பது கஷ்டம்தான் என கோலி நினைத்திருக்கக்கூடும். ஆனால், நடராஜன் ஒன்றும் சாதாரண பெளலர் இல்லையே. வயல்வெளிகளில், கிரிக்கெட் பிட்ச் என்றால் என்னவென்றே தெரியாத முரட்டு மைதானங்களில், டென்னிஸ் பந்துகளில் விளையாடிப்பழகிய எளிய வனுக்கு ஒரு முதல் வாய்ப்பு கிடைத்தால் அது என்னவாக மாறும் என்பதை ஒட்டுமொத்த உலகமே இப்போது வியந்து பார்த்துக்கொண்டிருக்கிறது.

ரன் அதிகம் கொடுக்காமல் எக்கனாமிக்கலாகப் பந்துவீசும் பெளலர்களைவிட, பார்ட்னர் ஷிப்களை உடைக்கும், முக்கிய பேட்ஸ் மேன்களைப் பெவிலியனுக்கு அனுப்பும் பெளலர்களை கேப்டன்களுக்கு ரொம்பவே பிடிக்கும். கோலிக்கு இன்றைய தேதியில் மிகவும் பிடித்த பெளலர் நடராஜனாகத்தான் இருக்கமுடியும்.

தமிழ்க் கிராமத்திலிருந்து ஒரு தளபதி!

‘‘ஐபிஎல் பர்பாமென்ஸை வெச்சுலாம் ஒருவரை சர்வதேச கிரிக்கெட்டுக்குக் கொண்டு வரக்கூடாது. வெறும் யார்க்கர் மட்டும் வீசக்கூடிய பெளலரைத் தூக்கிக் கொண்டாடுவதா?’’- நடராஜன் இந்தியாவின் பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டிருக்கிறார் என்று செய்திபரவிய அந்த நொடி முதலே இப்படி விமர்சனங்கள் பறந்தன. ‘‘இவன்லாம் ஒன்டைம் வொண்டர்ப்பா...’’ என வெளிப்படையாகவே மைக் பிடித்துப் பேசினார்கள் ‘பிரபல’ வர்ணனையாளர்கள். ஸ்டீவ் ஸ்மித்துக்கு நடராஜன் வீசிய அந்த 5 பந்துகளில் அவர்களுக்கான பதில் கிடைத்தது. முதல் மூன்று சர்வதேசப் போட்டிகளில் நடராஜன் எடுத்த 7 விக்கெட்டுகளைவிடவும் ஸ்மித்துக்கு அவர் வீசிய 5 பந்துகள் கொண்டாடப்பட வேண்டியவை.

தமிழ்க் கிராமத்திலிருந்து ஒரு தளபதி!

மிகுந்த மனவலிமையும், ஷாட் மேக்கிங்கில் மிகப்பெரிய தெளிவும் கொண்ட உலகின் சிறந்த பேட்ஸ்மேன் ஸ்டீவ் ஸ்மித். இந்தியாவுக்கு எதிரான முதல் இரண்டு போட்டிகளிலும் சதங்கள் அடித்து, அதுவும் குறைந்த பந்துகளில் அடித்து, பார்மின் உச்சத்தில் இருந்தார் ஸ்மித். மார்னஸ் லாபுசேனை ஐந்தாவது ஓவரின் முதல் பந்தில் வீழ்த்திவிட்டு ஸ்மித்தை பிட்சுக்குள் வரவைத்தார் நடராஜன். முதல் பந்தை எப்போதுமே அடித்து ஆடாமல் டாட் பாலாக ஆடுவது ஸ்மித் ஸ்டைல். நடராஜனின் முதல் பந்தையும் பேட்டால் தொடாமல் விட்டார் ஸ்மித். நடராஜனிடம் இருந்து யார்க்கர் வரும், ஸ்ட்ரெய்ட் பவுண்டரி அடிக்கலாம் எனக் காத்திருந்த ஸ்மித்துக்கு ஏமாற்றமே மிஞ்சியது. விக்கெட் மெய்டன் எடுத்தார் நடராஜன். இவர் ஏற்படுத்திய பிரஷரால் வந்தவேகத்திலேயே அவுட் ஆகிக் கிளம்பினார் ஸ்மித். இந்தியா வெற்றிபெற்றது.

இந்தியா தொடரை வென்ற இரண்டாவது டி20 போட்டியில் நடராஜனின் பங்கு மிக மிக முக்கியமானது. சாஹல், தீபக் சஹார், சுந்தர், ஷ்ரதுல் என மற்ற இந்திய பௌலர்களை வெளுத்த ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களால் நடராஜனின் பந்துகளைத் தொடவே முடியவில்லை.

தமிழ்க் கிராமத்திலிருந்து ஒரு தளபதி!
தமிழ்க் கிராமத்திலிருந்து ஒரு தளபதி!

முந்தைய போட்டியில் யார் சிறப்பாகப் பந்துவீசி அச்சுறுத்தலாக இருக்கி றார்களோ, அந்த பெளலரை டார்கெட் செய்து மொத்தமாக அவரின் தன்னம்பிக்கையைக் காலி செய்வதுதான் ஆஸ்திரேலியர்களின் கேம் பிளானாக இருக்கும். ஆனால், நடராஜனின் நம்பிக்கையை அவர்களால் சிதைக்க முடியவில்லை. அவரின் நான்கு ஓவர்களில் வெறும் 20 ரன்கள்தான் ஆஸ்திரேலிய பேட்ஸ் மேன்களால் எடுக்கமுடிந்தது. டார்சி ஷார்ட் மற்றும் ஹென்ரிக்ஸ் ஆகியோர் தங்கள் விக்கெட்களையும் இழந்திருந் தார்கள். ஷார்ட் அவுட் ஆனது நடராஜனின் ஷார்ட் பாலில். ஹென்ரிக்ஸ் அவுட்டானது கட்டரில். யார்க்கர் மட்டுமே வீசி விக்கெட் எடுக்கக்கூடியவர் என்கிற விமர்சனம் உடைந்தது.

தமிழ்க் கிராமத்திலிருந்து ஒரு தளபதி!

2011 உலகக்கோப்பையை இந்தியா வெல்ல மிக முக்கியக் காரணங்களில் ஒருவர் ஜாகிர் கான். இடது கை வேகப்பந்து வீச்சாளரான ஜாகிர்கான்தான் தோனியின் பக்கபலமாக இருந்தார். 2021, 2022, 2023 எனத் தொடர்ந்து மூன்று ஆண்டுகளில் மூன்று உலகக்கோப்பைத் தொடர்கள் நடக்கவிருக்கும் நிலையில் இந்தியாவின் கோப்பைக் கனவுகளை நனவாக்கும் முக்கிய வீரராக ‘சின்னப்பம்பட்டி’ நடராஜன் இருப்பார் என்பதுதான் எல்லாருடைய எதிர்பார்ப்பும்!