Published:Updated:

Dhoni: `அதெல்லாம் ஒண்ணும் இல்ல பாஸ்!' - தோனியின் ஓய்வு குறித்து ஃப்ளெமிங் கொடுத்த அப்டேட்!

Stephen Fleming | ஸ்டீபன் ஃப்ளெமிங்

தோனியின் ஓய்வு குறித்து பயிற்சியாளர் ஸ்டீபன் ப்ளெமிங் ஒரு சுவாரஸ்யமான அப்டேட்டைக் கொடுத்திருக்கிறார்.

Published:Updated:

Dhoni: `அதெல்லாம் ஒண்ணும் இல்ல பாஸ்!' - தோனியின் ஓய்வு குறித்து ஃப்ளெமிங் கொடுத்த அப்டேட்!

தோனியின் ஓய்வு குறித்து பயிற்சியாளர் ஸ்டீபன் ப்ளெமிங் ஒரு சுவாரஸ்யமான அப்டேட்டைக் கொடுத்திருக்கிறார்.

Stephen Fleming | ஸ்டீபன் ஃப்ளெமிங்

சென்னை அணியின் கேப்டனான தோனி நடப்பு ஐ.பி.எல் சீசனோடு ஓய்வு பெற்றுவிடுவாரோ எனும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. அவருமே ஆடுகிற ஒவ்வொரு போட்டியிலும் அந்தந்த மைதானங்கள் சார்ந்த தன்னுடைய பழைய நினைவுகளை பகிர்ந்து கொள்கிறார்.

"கரியரின் கடைசிக்கட்டத்தில் இருக்கிறேன். இனி வரும் போட்டிகளை அனுபவித்து ஆட வேண்டும்" என ஒரு போட்டியில் பேசியிருந்தார். இன்னொரு போட்டியில் மைதானத்தில் குழுமியிருந்த ரசிகர்களைப் பார்த்து "இவர்கள் எனக்காக பிரியாவிடை அளிக்க வந்திருக்கிறார்கள்" என்கிறார்.
Dhoni
Dhoni

தன்னுடைய ஓய்வு பற்றி ரசிகர்களுக்கு அவரே கொடுக்கும் சமிக்ஞைகளாகத்தான் இவையெல்லாம் பார்க்கப்படுகின்றன. தோனியின் ஓய்வு பற்றி இன்னும் விடை கிடைக்காத நிலையில் சென்னை அணியின் பயிற்சியாளர் ஃப்ளெமிங் இப்போது ஒரு அப்டேட்டைக் கொடுத்திருக்கிறார்.

சென்னை மற்றும் பஞ்சாப் அணிகள் மோதிய போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் நடந்திருந்தது. இந்தப் போட்டியில் பஞ்சாப் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றிருந்தது. இந்தப் போட்டிக்கு பிறகான பத்திரிகையாளர் சந்திப்பிற்கு ஃப்ளெமிங் வந்திருந்தார். ஃப்ளெமிங்கிடம் ஒரு பத்திரிகையாளர்,

"தோனி இந்த சீசனோடு ஓய்வு பெறப்போவதாக பேச்சுகள் எல்லாம் அடிபடுகிறதே. இது சார்ந்து டிரெஸ்ஸிங் ரூமில் தோனி எதுவும் சமிக்ஞைகளை (Indication) வெளிப்படுத்துகிறாரா?" எனக் கேட்டார்.
மகேந்திர சிங் தோனி
மகேந்திர சிங் தோனி
ஃப்ளெமிங் ஒரு நொடி கூட தாமதிக்காமல் `No Indication' எனப் பதிலளித்தார். ஃப்ளெமிங்கின் இந்த பதில் தோனி தனது ஓய்வு பற்றி முன்பு கூறிய `Definitely Not' என்பதைத்தான் ஞாபகப்படுத்தியது.

தோனியின் ஓய்வு பற்றி ஒவ்வொரு போட்டியிலும் ஒவ்வொரு விதமாக செய்தி வெளியாகிக் கொண்டே இருக்கிறது. ஆனால், இன்னுமே அது ஒரு விடை தெரியாத கேள்வியாகத்தான் நீண்டு கொண்டே இருக்கிறது.