Published:Updated:

இதயம் இழந்த இலங்கை!

Srilanka team
பிரீமியம் ஸ்டோரி
Srilanka team ( AP )

ஒரு வெற்றியே போதும் என்று நினைத்துக்கொண்ட இலங்கை அணி மீண்டும் தன் டெம்ப்ளேட் ஆட்டத்தைத் தொடர்ந்தது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டி நடந்தது ஸ்லோ பிட்ச்சில். ஷார்ட் பால்கள், பேக் ஆஃப் தி லென்த் பந்துகளைக் கொஞ்சம் நிதானமாகக் கணித்து ஆட வேண்டும்.

இதயம் இழந்த இலங்கை!

ஒரு வெற்றியே போதும் என்று நினைத்துக்கொண்ட இலங்கை அணி மீண்டும் தன் டெம்ப்ளேட் ஆட்டத்தைத் தொடர்ந்தது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டி நடந்தது ஸ்லோ பிட்ச்சில். ஷார்ட் பால்கள், பேக் ஆஃப் தி லென்த் பந்துகளைக் கொஞ்சம் நிதானமாகக் கணித்து ஆட வேண்டும்.

Published:Updated:
Srilanka team
பிரீமியம் ஸ்டோரி
Srilanka team ( AP )

இலங்கை... பத்து, பதினைந்து வருடங்களுக்கு முன்பு ஆஸ்திரேலியா, இந்திய அணிகள்கூட இலங்கையைக் கண்டால் சற்று மிரளத்தான் செய்வார்கள். ஜெயசூர்யா, தில்ஷன் ஓப்பனிங், ஜெயவர்தனே, சங்ககாரா மிடில் ஆர்டர், வாஸ், மலிங்கா, முரளிதரனின் பெளலிங் கூட்டணி என மிரட்டும் அணியாக இருந்தது இலங்கை. 2007, 2011 ஆகிய இரு ஆண்டுகளும் நூலிழையில் கோப்பையைத் தவறவிட்ட அணி இன்று நாக் அவுட் போட்டிகளுக்குள் நுழையவே போராடிக்கொண்டிருக்கிறது, 2015 உலகக் கோப்பைக்குப் பின் இலங்கை அணி சரியத் தொடங்கியது. 2015 உலகக் கோப்பைக்கு பின் ஆடிய 20 ஒரு நாள் தொடர்களில் நான்கில் மட்டுமே வென்றுள்ளது இலங்கை. அதுவும் கத்துக்குட்டி அணிகளான ஜிம்பாப்வே, அயர்லாந்து போன்ற அணிகளுடன்தான்.

2019-ம் ஆண்டு ஏதேனும் மாற்றத்தைக் கொண்டு வருமா என்று எதிர்பார்த்தால், அங்கேயும் சறுக்கியது இலங்கை. உலகக் கோப்பை போட்டிக்கு முன்பு 2019-ம் ஆண்டின் தொடக்கத்திலிருந்தே ஒரு வெற்றியைக்கூட இலங்கை அணியால் பெற முடியவில்லை. ஜனவரி மாதம் நடந்த நியூசிலாந்து தொடரில் வொயிட் வாஷ், மார்ச் மாதம் நடந்த தென்னாப்பிரிக்க தொடரில் மற்றொரு வொயிட் வாஷ் என இருபெரும் தோல்விகளோடுதான் உலகக் கோப்பைக்குள் நுழைந்தது இலங்கை.

srilanka
srilanka
AP

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கேப்டனை தேர்வு செய்ததிலேயே பெரிய கோட்டைவிட்டது இலங்கை அணி. மலிங்கா, திஸாரா பெரேரா, மேத்யூஸ் என ஆறு கேப்டன்களை மாற்றி இறுதியாக 2015-ம் ஆண்டு வரை மட்டுமே ஒருநாள் போட்டிகளில் ஆடிய கருணரத்னேவை கேப்டனாகத் தேர்வு செய்ததில் தொடங்கியது இலங்கை அணியின் தடுமாற்றம். எதிர்கொண்ட முதல் போட்டியிலேயே நியூசிலாந்திடம் சம்மட்டி அடி வாங்கியது, ஒற்றை ஆளாக கருணரத்னே போராட மற்ற வீரர்களெல்லாம் ஒதுங்கி நின்று வெறும் வேடிக்கை மட்டும் பார்த்தனர். அடுத்த ஆட்டம் ஆப்கானிஸ்தானுடன், ஆப்கன் பாய்ஸின் 35 எக்ஸ்ட்ராக்கள் சொல்லாமல் சொல்லின இலங்கையின் வெற்றியை.

அடுத்து இரண்டு ஆட்டங்கள் மழையால் ரத்து, நான்காவது ஆட்டம் ஆஸ்திரேலியாவுடன். இந்தப் போட்டியில் இலங்கை அணியின் செயல்பாடு முற்றிலும் வெறுக்கத்தக்கதாக இருந்தது. அவர்களின் உடல்மொழியே, ``இந்தப் போட்டியில் நாம் தோற்கத்தான் விளையாடிக்கொண்டிருக்கிறோம்’’ என்ற வகையில் இருந்தது. பீல்டிங், பௌலிங், பேட்டிங் என மூன்று இடத்திலும் கோட்டை விட்டது என்பதைவிட உலகக் கோப்பையின் மீது கனவேதும் இல்லாமல் கடமைக்கென்று ஆடியதுபோல் இருந்தது இலங்கையின் செயல்பாடு.

Malinga
Malinga
AP

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இப்படி ஒரு நிலைமையில்தான் ஏதேனும் ஒரு அனுபவ ஃபேக்டர் கைகொடுக்கும். கடந்த உலகக் கோப்பையில் அந்த ஃபேக்டர் சங்ககாராவாக இருந்தார். இந்த உலகக் கோப்பையில் அது மலிங்கா. ஆஸ்திரேலியாவுடனே இப்படி ஆடிய இலங்கை உள்ளூர் தாதா இங்கிலாந்துடன் மோசமாக தோற்கும் என்றெண்ணிய சமயத்தில் தான் அணியின் ஆபத்வாந்தானாக வந்தார் யார்க்கர் கிங் மலிங்கா. இலங்கையின் ஸ்கோர் என்னவோ 232 ரன்கள்தான். ஆஸ்திரேலியாவுடன் ஆடிய அதே ஆட்டத்தை தொடர்ந்திருந்தால் நிச்சயம் பத்து விக்கெட் வித்தியாசத்தில் வென்றிருக்கும் இங்கிலாந்து. ஆனால், அதைச் செய்யவிடாமல் அணியை மீட்டெடுத்தார் மலிங்கா. தன் யார்க்கர் அஸ்திரங்களை தொடுக்கப் 10 ஓவர்களில் 38 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை எடுத்தார். எவ்வளவு முயன்றும் 212 ரன்களில் இங்கிலாந்து அணி ஆல் அவுட்டாகி நடையைக் கட்டியது. மேட்ச் வின்னராக ஜொலித்த மலிங்கா இலங்கையின் அரையிறுதி வாய்ப்பையும் பிரகாசமாக்க இங்கிலாந்து, பாகிஸ்தானோடு இலங்கையும் அந்த அரையிறுதி லிஸ்ட்டில் சேர்ந்துகொண்டது.

இந்த ஒரு வெற்றியே போதும் என்று நினைத்துக்கொண்ட இலங்கை அணி மீண்டும் தன் டெம்ப்ளேட் ஆட்டத்தைத் தொடர்ந்தது. தென்னாபிரிக்காவுக்கு எதிரான போட்டி நடந்தது ஸ்லோ பிட்ச்சில். ஷார்ட் பால்கள், பேக் ஆஃப் தி லென்த் பந்துகளைக் கொஞ்சம் நிதானமாகக் கணித்து ஆட வேண்டும். அதைச் செய்யத் தவறினர் இலங்கை பேட்ஸ்மேன்கள். ஒன்று தூக்கி அடித்து கேட்ச் ஆகினர். இல்லையெனில் டாட் பால்களாய் வைத்து பந்தை வீணாக்கினர். இதுமட்டும்தான் அந்த பேட்ஸ்மேன்களின் சூத்திரம். தென்னாப்பிரிக்காவுக்கு பெரிய மனதோடு ஆறுதல் வெற்றி கொடுத்த இலங்கை அணி செய்த தவறு 187 டாட் பால்கள்.

Srilanka
Srilanka
AP

வெற்றி, பெரிய தோல்வி, மிகப்பெரிய வெற்றி இதுதான் இந்த உலகக் கோப்பையில் இலங்கை அணியின் பாணி. தென்னாப்பிரிக்காவுடன் மோசமாக தோற்ற இலங்கை அணி, வெஸ்ட் இண்டீஸுடன் சில அதிரடி முடிவுகளை எடுத்து வெற்றியில் திளைத்தது. முக்கியமாக ஆஞ்சலோ மேத்யூஸை நீண்ட நாட்களுக்குப் பிறகு பந்துவீசச் செய்து நிக்கோலஸ் பூரனின் விக்கெட்டை வீழ்த்தியதாக இருக்கட்டும், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்ததாக இருக்கட்டும் எனத் தன் தவறுகளையெல்லாம் திருத்திய இலங்கை வெஸ்ட் இண்டீஸை புரட்டிப்போட்டது.

இறுதியாக இந்தியாவுக்கு எதிரான‌ போட்டியில் அதே டெம்ப்ளேட் ஆட்டம், அதே தோல்வி. மேத்யூஸின் சதத்தைத் தவிர சொல்லிக்கொள்ளும்படியாக ஏதும் இல்லை இலங்கை அணியில். மொத்தத்தில் இலங்கையின் இந்த உலகக் கோப்பை செயல்பாடு சராசரிக்கும் கீழ்தான். பவர்ப்ளே ஓவர்களில் அதிக ரன்ரேட் (6.5) வைத்திருக்கும் இலங்கை அணியால் 300 ரன்களை ஒரு முறைதான் தொட முடிந்தது. காரணம் சொதப்பலான, ஸ்ட்ரைக் ரொட்டேட் செய்யாத, டாட் பால்களில் நேரம் கடத்தும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள். டெயில் எண்டர்களே ஃபினிஷர்களாக இருக்கும் ஒரு மிகப்பெரிய சீஸ்னில் இலங்கை அணியில் மிடில் ஆர்டரே ஆட்டம் கண்டது மிகப்பெரிய பின்னடைவு.

இப்படி எத்தனையோ விஷயங்களைத் திருத்த வேண்டிய இலங்கை அணி பெரிதாக எதுவுமே செய்யவில்லை. ஆரம்ப போட்டிகளில் திரிமண்ணே சொதப்புகிறார் என்று தெரிந்தபோதே அவிஷ்கா ஃபெர்ணான்டோவை டீமில் எடுத்திருக்க வேண்டும். ஆனால், அரையிறுதி வாய்ப்பு கலைந்த பின்னே அவரை எடுத்தார்கள். புது வீரர்களை அணியில் எடுத்ததற்குப் பதிலாக அனுபவம் வாய்ந்த தரங்காவையோ, டிக்வெல்லாவையோ எடுத்திருக்கலாம். எடுக்கவில்லை... அணியின் கீ பேட்ஸ்மேனாக அறியப்பட்டவர்கள் மேத்யூஸும் திசாரா பெரேராவும்தான். அணியை சுமக்க வேண்டிய அவர்களே முக்கிய நேரத்தில் கோட்டைவிட்டனர்.

Srilanka
Srilanka
AP

ஆல் ரவுண்டர்களின் ஆதிக்கம் இந்த சீஸனில் அதிகம் இருந்தது. இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸ் தொடங்கி வங்கதேசத்தின் ஷகிப் வரை தங்களின் ஆல் ரவுண்டர் பணியைச் சிறப்பாகச் செய்தனர். சில போட்டிகளின் முடிவே ஆல் ரவுண்டர்களால்தான் மாற்றியமைக்கப்பட்டது. ஒவ்வொரு அணியிலும் ஆல் ரவுண்டர் என்ற இடத்தை நிரப்ப குறைந்தபட்சம் ஒருவராவது இருக்க, இலங்கை அணியில் பெயருக்கு இருவர் இருந்தாலும் அவர்களால் ஒரு போட்டியில்கூட எவ்வித மாற்றத்தையும் கொடுக்க முடியவில்லை.

அனுபவ வீரர்களும் புதுமுக வீரர்களும் இருக்கும் அணியில் இருவரும் சம அளவு விளையாடினால்தான் எதிர்பார்த்த அவுட் புட் கிடைக்கும். அந்த விதத்தில் ஒவ்வொரு போட்டியிலும் இந்த ஃபேக்டர் இலங்கைக்கு பயங்கர ஒன் சைடாக அமைந்தது. ஒன்று கருணரத்னே ஆடுவார், இல்லை மேத்யூஸ் ஆடுவார், இல்லை அவிஷ்கா ஆடுவார் அதுவும் இல்லையென்றால் இறுதியில் மலிங்காவின் பவுலிங்கால் ஜெயிப்பார்கள். கூட்டு முயற்சி என்பது இலங்கை அணியினரிடம் இறுதி வரை இல்லவே இல்லை.

ஒரு போட்டியில் நன்றாக ஆடினால் அடுத்த இரண்டு போட்டிகளில் மோசமான ஆட்டம் ஆடி, வந்த வாய்ப்புகளை கோட்டைவிட்டனர். இந்த உலகக் கோப்பையில் இலங்கையின் ஒரே ஆறுதல் நிலையை உணர்ந்து பொறுப்புடன் ஆடக்கூடிய அவிஷ்கா ஃபெர்ணான்டோ மட்டும்தான். ஆடிய சில போட்டிகளிலேயே தான் யார் என்பதை நிரூபித்துவிட்டார். v

Srilanka
Srilanka
AP

ட்ரெஸிங் ரூமிலும் சரி, களத்திலும் சரி ஒரே மாதிரியான, சோர்வளிக்கக்கூடிய மைண்ட் செட். பிரஸ் மீட்டில்கூட இலங்கை கேப்டர் கருணரத்னே அதே மைண்ட் செட்டில்தான் பேசினார். ``We will give our best’’ என்பதைத் தாண்டி ``We will win this game’’ என்ற வார்த்தையை அவர் சொல்லவே இல்லை. இப்போது மலிங்காவும் ஓய்வுபெற்றுவிட்டார். அணியில் ஒரு 360° மாற்றத்தை ஏற்படுத்தினால் மட்டுமே இலங்கை விட்ட இடத்தைப் பிடிக்க முடியும். தவறினால் அடுத்த உலகக் கோப்பையில் கத்துக்குட்டியாக மாறி உலகக்கோப்பையின் தகுதிச்சுற்றில் விளையாடிக் கொண்டிருக்கும் 1996-ம் ஆண்டின் உலக சாம்பியன் இலங்கை.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism