Published:Updated:

BAN v SL: களத்திற்கு வெளியேவும் சண்டை செய்த அணிகள்; வங்கதேசம் கோட்டைவிட்டது எங்கே?

Asia Cup | BAN v SL

இலங்கை வங்கதேச அணிகளுக்கு இடையிலான இதுபோன்ற முட்டல் மோதல்கள் புதியதல்ல. ஆனால், இந்த முறை...

BAN v SL: களத்திற்கு வெளியேவும் சண்டை செய்த அணிகள்; வங்கதேசம் கோட்டைவிட்டது எங்கே?

இலங்கை வங்கதேச அணிகளுக்கு இடையிலான இதுபோன்ற முட்டல் மோதல்கள் புதியதல்ல. ஆனால், இந்த முறை...

Published:Updated:
Asia Cup | BAN v SL

"ஆப்கானிஸ்தான் அணியை ஒப்பிடுகையில் வங்கதேசம் உடனான போட்டி எங்களுக்கு எளிதாகவே இருக்கும். ஆப்கானிஸ்தான் அணி உலகத்தரம் வாய்ந்த பௌலிங்கைக் கொண்டுள்ளது. ஷகிப் மற்றும் முஷ்தாபிசூரைத் தவிர வங்கதேச அணியில் அப்படி சொல்லிக்கொள்வதற்கு யாரும் இல்லை” - போட்டிக்கு முன்னதாக இலங்கை கேப்டன் ஷனகா இவ்வாறு கூற, இதற்குப் பதிலளித்த வங்கதேச அணியின் பயிற்சியாளர் கலேத் மஹ்மூத், "ஷனகா இத்தகைய கருத்தை ஏன் தெரிவித்தார் என்று தெரியவில்லை. எங்கள் அணியிலாவது ஷகிப் மற்றும் முஷ்தாபிசூர் உள்ளனர். அப்படி ஒருவர் கூட, அவர்கள் அணியில் இல்லை!”

இவ்வாறு களத்திற்கு வெளியிலேயே இப்போட்டிக்கான யுத்தம் ஆரம்பானது. இலங்கை வங்கதேச அணிகளுக்கு இடையிலான இதுபோன்ற முட்டல் மோதல்கள் புதியதல்ல.
BAN v SL
BAN v SL

போட்டிக்கு முன்னர் இரு அணியின் தரப்பில் இருந்து வந்த வார்த்தைகள் குறித்து வங்கதேச கேப்டன் ஷகிபிடம் கேட்ட போது, "மீடியாக்கள் முன் நடக்கும் விஷயங்கள் பற்றி நாங்கள் கவலைப்படுவதில்லை. அவை எங்கள் அணிக்குள்ளும் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தப் போவதில்லை" என்றார். மேலும் சூப்பர் 4 சுற்றுக்கான அணியைத் தீர்மானிக்கப்போகும் போட்டியாக நேற்றைய ஆட்டம் அமைந்ததால் இப்போட்டி குறித்தான எதிர்பார்ப்பு சற்று அதிகமாகவே இருந்தது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பௌலிங்கைத் தேர்வு செய்ய, 183 ரன்கள் அடித்தது வங்கதேசம். இலங்கை அணியை பொறுத்தவரையில் வெறும் 10 ரன்களை மட்டுமே எக்ஸ்ட்ராஸாக அளித்திருந்தது. நோபால், வைட் என எதையும் வீசியிருக்கவில்லை அந்த அணி. ஆனால், அதே கவனத்தை ஃபீல்டிங் செட் செய்வதில் கடைபிடித்திருக்கவில்லை. வங்கதேச பேட்ஸ்மேன்கள் தொடர்ந்து ஸ்கூப் மற்றும் ராம்ப் ஷாட்களை ஆடி Third Man திசையில் பவுண்டரிகள் அடித்துக் கொண்டிருந்தனர். இதற்கேற்ற ஃபீல்ட் செட்டைக் கடைசியில்தான் மாற்றி அமைத்தார் ஷனகா. அதை முன்பே செய்திருந்தால் செய்திருந்தால் 20 ரன்கள் வரை குறைந்திருக்க வாய்ப்பிருந்திருக்கும். மேலும் ஆறாவது பௌலரை இலங்கை கடைசி வரை உபயோகிக்கவே இல்லை.

BAN v SL
BAN v SL

மறுபுறம் 8 வைட், 4 நோபால் என 17 ரன்களை எக்ஸ்ட்ராஸாக வழங்கி சில கேட்சுகளை ட்ராப் செய்திருந்தனர் வங்கதேச அணியினர். சிறப்பாகப் பந்து வீசிக் கொண்டிருந்த மெஹதி ஹசனும் இரண்டு நோபால்களை வீசினார். அதில் குசல் மெண்டிஸ் அவுட்டான பந்து நோபாலாக மாறியது ஆட்டத்தின் மிக முக்கியமான திருப்புமுனை. ஆரம்பத்தில் சிறப்பாக பந்துவீசி 3 விக்கெட்டுகளை எடுத்த எபாடட் ஹோசைன் இறுதி கட்டத்தில் நோபால், வைட் என ரன்களை அதிகமாகக் கொடுத்தார். இதுவே வங்கதேச அணியின் கைக்குள் பலமுறை வந்த போட்டி மீண்டும் மீண்டும் இலங்கை அணிக்கே சென்றது. கடைசி இரண்டு ஓவர்களுக்கு 25 ரன்கள் தேவைப்பட, 19வது ஓவரில் ஒரு நோபாலுடன் சேர்த்து 17 ரன்களை வழங்கியது அந்த அணி. இதனால் இறுதி ஓவரில் 8 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டன. அங்கும் நோபாலை வீச 3 பந்துகள் மீதமிருக்க, 2 விக்கெட் வித்தியாசத்தில் போட்டியை வென்றது இலங்கை.

"உலகக்கோப்பையில் நாங்கள் சிறப்பாகச் செயல்பட வேண்டுமானால் இன்னும் பல இடங்களில் முன்னேற வேண்டும். சிறப்பான பயிற்சியின் மூலம் அதனை நாங்கள் அடைய முடியும்" என்று போட்டி முடிந்து கூறினார் ஷனகா.

கடந்த முறை சூப்பர் 4 வாய்ப்பைத் தவறவிட்ட இலங்கை, தற்போது தொடர்ந்து இரண்டு முறை ஃபைனலிஸ்ட்டான வங்கதேசத்தை வெளியேற்றி அடுத்த சுற்றுக்குள் நுழைந்துள்ளனர்.