Published:Updated:

மாறிவரும் ஐ.பி.எல் களம்!

ஐ.பி.எல்
பிரீமியம் ஸ்டோரி
ஐ.பி.எல்

இந்தப் பட்டியல் வெளியான பிறகு, ரீடெய்ன் செய்யப்படாத பல வீரர்கள் தங்கள் அணிகளுக்கு நன்றி கூறியிருக்கிறார்கள்.

மாறிவரும் ஐ.பி.எல் களம்!

இந்தப் பட்டியல் வெளியான பிறகு, ரீடெய்ன் செய்யப்படாத பல வீரர்கள் தங்கள் அணிகளுக்கு நன்றி கூறியிருக்கிறார்கள்.

Published:Updated:
ஐ.பி.எல்
பிரீமியம் ஸ்டோரி
ஐ.பி.எல்

2022 ஐ.பி.எல் தொடருக்கான எதிர்பார்ப்பு இப்போதே கிளம்பிவிட்டது. புதிதாக இரண்டு அணிகள் இணையப்போகின்றன. மற்ற எட்டு அணிகளையும் கலைத்துப் போட்டு மீண்டும் மெகா ஏலம் நடக்கப்போகிறது. அதற்கு முன்பாக ஒவ்வொரு அணியும் தாங்கள் தக்கவைத்திருக்கும் வீரர்களின் பட்டியலை வெளியிட்டிருக்கின்றன. ஆச்சர்யங்களும் அதிர்ச்சியும் நிறைந்ததாக இருக்கிறது அந்தப் பட்டியல்.

முன்பெல்லாம் ஒரு வீரரைத் தக்கவைப்பது கடினமான காரியமாக இருக்காது. ஆனால், இப்போது அப்படியில்லை. வீரர்கள் தங்களுக்கான ஊதியம் என்ன என்பதில் கறாராக இருக்கிறார்கள். ஏலத்தில் தங்களுக்கு அதிக தொகை கிடைக்கும் என்று கருதினால், அந்த அணியைத் தவிர்த்துவிடுகிறார்கள். மனக்கசப்பு ஏற்பட்டவர்கள் வெளியேறியிருக்கிறார்கள்.

மாறிவரும் ஐ.பி.எல் களம்!

இவ்வளவு ஏன், மற்ற அணிகளுடன் வீரர்கள் பேசியதாகக்கூட தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. கே.எல்.ராகுலை பஞ்சாப் தக்கவைக்காததற்கும், வார்னரை சன்ரைசர்ஸ் தக்கவைக்காததற்கும் மேற்சொன்ன விஷயங்கள் காரணம். ஆர்ச்சர், ஸ்டோக்ஸ் போன்ற வீரர்கள் ஃபிட்னஸ் காரணமாக ரீடெய்ன் செய்யப்படாமல் போயிருக்கலாம்.

இந்திய வீரர்களுக்கும், வெளிநாட்டு வீரர்களுக்கும் இருந்த அளவுக்கு இப்போது சர்வதேசப் போட்டிகளில் ஆடாத இளைஞர்களுக்கும் முக்கியத்துவம் தரப்பட்டிருக்கிறது. யஷஷ்வி ஜெய்ஸ்வால், ஆர்ஷ்தீப் சிங், உம்ரான் மாலிக், அப்துல் சமாத் போன்ற uncapped வீரர்கள் 4 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்கள். ஆக, ஐ.பி.எல் அணிகளின் அணுகுமுறை பெரிதாக மாறியிருக்கிறது. அதுமட்டுமல்லாமல், இந்தச் சில நாள்கள் ஐ.பி.எல் ஏலத்தின் எதிர்காலம் எப்படியிருக்கும் என்றும் சுட்டிக்காட்டி யிருக்கின்றன.

இந்தப் பட்டியல் வெளியான பிறகு, ரீடெய்ன் செய்யப்படாத பல வீரர்கள் தங்கள் அணிகளுக்கு நன்றி கூறியிருக்கிறார்கள். ஒருசில அணிகளும், வீரர்களின் நம்பர்களை, வெற்றிகளைக் குறிப்பிட்டு வலைதளத்தில் வழியனுப்பிவைத்துக்கொண்டிருக்கிறார்கள். இந்த மெசேஜ்கள் முழுமையான எண்டு கார்டோ என்ற எண்ணத்தைத்தான் ஏற்படுத்துகிறது. இன்னும் ஏலம் இருக்கிறது. அதில் அவர்களைத் திரும்ப வாங்கக்கூடும். ஆனால், அதுவும் வேண்டாம் என்ற முடிவுக்கு இரு தரப்பும் வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது.

வார்னர் சன்ரைசர்ஸ் ரசிகர்களுக்கு நன்றி சொன்னதைக் கூடப் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், இப்போது ஹர்திக் பாண்டியாவுக்கு நன்றி சொல்லியிருக்கும் மும்பை அணியின் திட்டம் புரியவில்லை. இதற்கு மேல் அவர்களுக்கு நடுவே செட் ஆகாது என்ற முடிவுக்கு வந்துவிட்டார்கள் போல!

மாறிவரும் ஐ.பி.எல் களம்!

இந்தப் பட்டியல் வெளியாவதற்கு முன்பே, அடுத்த ஏலம்தான் ஐ.பி.எல் தொடருக்கு நடக்கும் கடைசி மெகா ஏலமாக இருக்கும் என்ற வதந்தியும் கிளம்பியது. இந்த நன்றி நவில்தல் மெசேஜ்களையெல்லாம் பார்த்தால் அதற்குத்தான் வித்திடும் என்று தோன்றுகிறது. ரீடெய்ன் செய்யவேண்டாம் என்பதையும், ஏலத்தில் எடுக்கவேண்டாம் என்பதையும் இரு தரப்பும் பேசி முடித்துக்கொள்ளுமென்றால், நிச்சயம் இதன் முடிவு ஏலத்தின் முடிவாகத்தான் இருக்கும்.

****

ஏலத்திற்கு முன்பு 3 புதிய வீரர்களை எடுக்க, புதிய அணிகளான அஹமதாபாத்துக்கும் லக்னோவுக்கும் வாய்ப்பு வழங்கப்படும். ஏற்கெனவே கே.எல்.ராகுலை கேப்டனாக்குவது பற்றி லக்னோ அணி பேசிக்கொண்டிருப்பதாகவும், அஹமதாபாத் ஷ்ரேயாஸ் ஐயரை வளைத்துப்போட நினைப்பதாகவும் செய்திகள் வந்துகொண்டிருக் கின்றன. இஷன் கிஷன், ஹர்திக் பாண்டியா, ரஷீத் கான், டேவிட் வார்னர் போன்றவர்களை இந்த அணிகள் ஒப்பந்தம் செய்யலாம்.