Published:Updated:

லண்டன் லார்ட்ஸில் இறுதிப்போட்டி இல்லை... விராட் கோலி & கேன் வில்லியம்சன் அணிகள் மோதப்போவது எங்கே?!

விராட் கோலி & கேன் வில்லியம்சன்
விராட் கோலி & கேன் வில்லியம்சன்

இறுதிப்போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இப்போது இடத்தை மாற்றியிருக்கிறது ஐசிசி.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விராட் கோலி தலைமையிலான இந்தியாவும், கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூஸிலாந்தும் மோத இருக்கின்றன. இறுதிப்போட்டி லார்ட்ஸில் நடைபெறும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இப்போது இடத்தை மாற்றியிருக்கிறது ஐசிசி.

உலக டெஸ்ட் சாம்பியின்ஷிப்பின் இறுதிப்போட்டி வருகிற ஜூன் 18 முதல் 22 வரை சவுத்தாம்ப்டனில் உள்ள Ageas Bowl மைதானத்தில் நடைபெறும் எனத்தெரிகிறது.

கேன் வில்லியம்சன்
கேன் வில்லியம்சன்

கொரோனா காரணமாகவே இடம் மாற்றப்பட்டிருக்கிறது. Ageas Bowl மைதானத்துக்குள்ளேயே ஹோட்டல்கள் உள்ளன. இதனால் வீரர்கள் வெளியே தங்கிவிட்டு மீண்டும் மைதானத்துக்கு உள்ளே வரவேண்டியதில்லை. பயோபபுள் அமைப்பது மிகவும் சுலபம் என்பதால்தான் சவுத்தாம்ப்டனில் போட்டிகள் நடத்த திட்டமிட்டிருப்பாதகச் சொல்லப்படுகிறது.

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக இந்தியா, ஒரு நியூட்ரல் வென்யூவில் நியூஸிலாந்துடன் இங்கிலாந்தில் மோத இருக்கிறது.

சவுத்தாம்ப்டன் மைதானம் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமானது. நியூஸிலாந்தில் ட்ரென்ட் போல்ட், டிம் சவுத்தி, கைல் ஜேமிசன், மேட் ஹென்ரி எனத் தரமான வேகப்பந்து வீச்சாளர்கள் இருப்பது நியூஸிலாந்துக்கு கூடுதல் பலம். சவுத்தாம்ப்டனில் கடந்த ஆண்டு இங்கிலாந்துக்கும், வெஸ்ட் இண்டீஸுக்கும் இடையே நடைபெற்ற போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றிபெற்றது குறிப்பிடத்தக்கது. வேகப்பந்து வீச்சாளர்கள் ஷேனன் கேப்ரியெல்லும், ஜேசன் ஹோல்டரும் அதிக விக்கெட்கள் எடுத்திருந்தார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு