Published:Updated:

Dewald Brevis: அதே ஸ்டைல், அதே ஷாட், அதே ஜெர்ஸி எண்; குட்டி de Villiers வந்தாச்சு!

Dewald Brevis with de Villiers

இவர் விளையாடிய சில ஷாட்களைப் பகிர்ந்து ஏபிடி போன்றே உள்ளதாக மெய்சிலிர்க்கின்றனர் ரசிகர்கள். அதில் ஒரு வீடியோவிற்கு "The boy can play!" என்று டி வில்லியர்ஸே பாராட்டி ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்

Dewald Brevis: அதே ஸ்டைல், அதே ஷாட், அதே ஜெர்ஸி எண்; குட்டி de Villiers வந்தாச்சு!

இவர் விளையாடிய சில ஷாட்களைப் பகிர்ந்து ஏபிடி போன்றே உள்ளதாக மெய்சிலிர்க்கின்றனர் ரசிகர்கள். அதில் ஒரு வீடியோவிற்கு "The boy can play!" என்று டி வில்லியர்ஸே பாராட்டி ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்

Published:Updated:
Dewald Brevis with de Villiers

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடந்துவருகிறது. இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதிய ஆட்டத்தில், பலரது கவனத்தையும் ஈர்த்தார் தென்னாப்பிரிக்காவின் டெவால்ட் பிரெவிஸ். அந்தப் போட்டியில் அவர் அரைசதம் கடந்தபோது, சக வீரர்கள் "பேபி AB" என்று எழுதிய பலகையைக் காட்டி உற்சாகப்படுத்தினர். தன் அன்-ஆர்தடாக்ஸ் ஆட்டத்தால் மொத்த உலகத்தின் கவனத்தின் ஈர்த்த மிஸ்டர் 360 டிகிரி ஏ.பி.டி வில்லியர்ஸின் ஜெராக்ஸாக விளங்குகிறார் டெவால்ட் பிரெவிஸ். அட ஜெர்ஸி நம்பர் கூட டி வில்லியர்ஸ் அணிந்திருந்த அதே 17 தான். இப்போது மொத்த உலகமும் இந்த குட்டி ABD பற்றிப் பேசத் தொடங்கியிருக்கிறது.

Dewald Brevis
Dewald Brevis

அவர் விளையாடிய சில ஷாட்களைப் பகிர்ந்து ஏபிடி போன்றே உள்ளதாக மெய்சிலிர்க்கின்றனர் ரசிகர்கள். அதில் ஒரு வீடியோவிற்கு "The boy can play!" என்று டி வில்லியர்ஸே பாராட்டி ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். லெக் ஸ்பின்னருமான இவர், இந்தியாவுக்கு எதிரான அரை சதம் மட்டுமல்லாமல் ஒரு சதம், 96 ரன்கள் என குவித்து 265 ரன்களுடன் இந்த உலகக் கோப்பையின் மிகச் சிறந்த வீரராக விளங்கிவருகிறார். இந்நிலையில், இவர் டி வில்லியர்ஸை பார்த்து மட்டும் பயிற்சி பெறவில்லை, டி வில்லியர்ஸிடமே தனிப்பட்ட முறையில் பயிற்சி பெற்றிருக்கிறார் என்பது தெரியவந்துள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

"எனக்கு பிரெவிஸை நன்றாகவே தெரியும். கடந்த இரண்டு வருடங்களாக நான் அவருக்கு பயிற்சி அளித்துக்கொண்டிருக்கிறேன். அவரது பேட்டிங்கையும், கிரிக்கெட் குறித்த அவரது அணுகுமுறையையும் மெருகேற்ற அவருக்கு உதவிக்கொண்டிருக்கிறேன்" என்று கூறியிருக்கிறார் டி வில்லியர்ஸ். மேலும் பிரெவிஸின் வீட்டிலுள்ள நெட்டிலேயே இருவரும் பயிற்சி செய்துள்ளார்களாம்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அதுமட்டுமல்லாமல் ஐ.பி.எல் தொடருக்கு பயிற்சி செய்யும்போது, பிரெவிஸை பந்துவீசச் சொல்லி, டி வில்லியர்ஸ் பல மணி நேரம் பேட்டிங் செய்வாராம். அதேபோல், பிரெவிஸ் பேட்டிங் பயிற்சி எடுப்பதற்கு இவர் பந்துவீசுவாராம். இதுகுறித்து பேசிய பிரெவிஸ் "எங்கள் பள்ளிக்கு டி வில்லியர்ஸ் ஒருமுறை வந்திருந்தார். அப்போது நானும் எனது நண்பர்களும் அவருடன் ஒரே அறையில் இருக்க வாய்ப்பு கிட்டியது. அப்போது அவர் கூறிய பல கதைகளைக் கேட்க முடிந்தது. பின்னர் அவர் வெளியேறுகையில் அவருடன் நடந்து சென்றோம். நான் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அவரிடம் போன் நம்பரைக் கேட்டேன். அவரும் மறுக்காமல் வழங்கினார்." என்று கூறினார்.

Dewald Brevis
Dewald Brevis

அவரை நன்றாக கவனித்த டி வில்லியர்ஸ், அவரது திறமைகளால் கவரப்பட்டார். "உண்மையைச் சொல்லப்போனால் முதலில் நான் பெரிதாக எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் தான் இருந்தேன். பின்னர் அவரது திறமையை கண்டு ஆச்சர்யப்பட்டுதான் போனேன். எனக்கும் அவருக்கும் பல வகையில் ஒற்றுமை இருந்தது. பௌலர்களைக் கையாளும் விதம், அதிரடி ஆட்டம் என பல ஒற்றுமைகளைக் காண முடிந்தது. இருப்பினும், அவர் கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய உள்ளது. தனது ஆட்டத்தை கையாளும் விதம் குறித்தும், எளிதில் தனது விக்கட்டை இழக்காமல் இருப்பது குறித்தும் அவர் கற்றுக்கொள்ள வேண்டும் " என்று கூறியிருக்கிறார் ஏ.பி.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சமீபத்தில் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் டி வில்லியர்ஸ் ஒய்வு பெற்றிருந்த நிலையில் அவரைப் போன்றே மற்றொரு வீரர் விளையாடுவது உலகெங்கும் இருக்கும் அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. அதுவும் இந்தியாவில் அவரது ரசிகர்களுக்கு குறைவே இல்லை. இந்நிலையில் 2022-ம் ஆண்டிற்கான ஐ.பி.எல் தொடருக்கான ஏலம் நடைபெறவுள்ள நிலையில் ப்ரேவிஸ் மீது எந்த அணி ஆர்வம் காட்டும் என்று பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

Dewald Brevis
Dewald Brevis

என்னதான் அவர் இன்னும் தென் ஆப்பிரிக்க சர்வதேச அணியில் ஆடவில்லை என்றாலும் , ஐ.பி.எல் தொடருக்கு அது ஒன்றும் புதிதல்ல. ஏற்கனவே மும்பை இந்தியன்ஸ் அணி, தென்னாப்பிரிக்காவின் மார்கோ யான்செனை அவர் சர்வதேச அணிக்கு ஆடுவதற்கு முன்னரே எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த ஏலத்தில் அப்படியொரு அணி இவரை வாங்கினால், டி வில்லியர்ஸ் இல்லாத முதல் ஐ.பி.எல் தொடர், குட்டி டி வில்லியர்ஸை சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்கும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism