Published:Updated:

ஹரிஸ் சோஹைலின் ஷாட் பிளேஸ்மென்ட்... அமீரின் முதல் ஸ்பெல் விக்கெட்... தென்னாப்பிரிக்கா தோற்றது ஏன்?!

#PAKvSA

அவருக்கு மட்டுமல்ல மொத்த தென்னாப்பிரிக்கா அணிக்கும் இது மிகவும் சோதனைக் காலம்தான். 2003-ம் ஆண்டுக்குப் பிறகு அந்த அணி இந்த உலகக் கோப்பையில் லீக் சுற்றுடன் வெளியேறுகிறது. #PAKvSA

Published:Updated:

ஹரிஸ் சோஹைலின் ஷாட் பிளேஸ்மென்ட்... அமீரின் முதல் ஸ்பெல் விக்கெட்... தென்னாப்பிரிக்கா தோற்றது ஏன்?!

அவருக்கு மட்டுமல்ல மொத்த தென்னாப்பிரிக்கா அணிக்கும் இது மிகவும் சோதனைக் காலம்தான். 2003-ம் ஆண்டுக்குப் பிறகு அந்த அணி இந்த உலகக் கோப்பையில் லீக் சுற்றுடன் வெளியேறுகிறது. #PAKvSA

#PAKvSA

ஃபகர் ஜமான் – இமாம் உல் ஹக்கின் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் 50 ரன்களைத் தாண்டினால் பாகிஸ்தான் அணி 90 சதவீதம் வெற்றிபெறும் என்பது புள்ளிவிவரங்கள் சொல்லும் செய்தி. 10 போட்டிகளில் அந்த ஜோடி 50 ப்ளஸ் ரன்களை கடந்துள்ளது. அதில் 9 முறை பாகிஸ்தான் அணி வென்றுள்ளது. இந்த உலகக் கோப்பையில் இங்கிலாந்துடனான போட்டியில் மட்டுமே அந்த கூட்டணி 50 ப்ளஸ் ரன்களை கடந்தது. அந்த போட்டியில் மட்டுமே வெற்றியும் பெற்றிருந்தது. ஓப்பனர்கள் நன்றாக அடித்தளம் அமைத்துவிட்டால், அடுத்து வரும் வீரர்கள் அதில் கட்டடம் எழுப்பது எளிதாக இருக்கும். அவர்கள் நெருக்கடியில்லாமல் தங்களின் இயல்பான ஆட்டத்தை ஆட உதவும். அந்த பாக்ஸை முதலில் டிக் அடித்தது பாகிஸ்தான்.

#PAKvSA
#PAKvSA

ஜமான் - இமாம் இருவரும் அழகாக ஆட்டத்தைக் கட்டமைத்தனர். முதல் விக்கெட்டிற்கு 81 ரன்கள் சேர்த்தனர். பாபர் ஆசம் உள்பட டாப் 3 எல்லோரும் சிறப்பான பங்களிப்பைத் தந்தனர். ஆனால், நேற்றைய ஆட்டத்தின் ரியல் ஹிரோ ஐந்தாவது வீரராகக் களமிறங்கிய ஹாரிஸ் சோஹைல்!

அவுட் ஆஃப் ஃபார்ம் காரணமாக சோயப் மாலிக்குக்கு பதிலாக சேர்க்கப்பட்ட அவர், முக்கியமான கட்டத்தில் மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவரின் ஆட்டத்தில் 99 சதவிகிதம் ஃபெர்பெக்‌ஷன் இருந்தது. டைமிங், ஷாட் செலக்ஷன் எல்லாமே அற்புதமாக இருந்தது. முக்கியமாக ஷாட் ப்ளேஸ்மென்ட்! ரபாடா ஓவரில் டூ ப்ளெஸி சில்லி பாயின்ட்டில் ஃபீல்டரை வைக்க, பந்து ஷார்ட் பாலாகத்தான் வரும் என்பதைக் கணித்து தன்னுடைய இடது பக்கம் நகர்ந்து ஆஃப் சைடில் தூக்கி அடித்தார். அந்தப் பக்கம்தான் மைதானத்தில் சிறிய எல்லை. அவர் தூக்கி அடித்த பந்துகள் எல்லாம் ஒன்று மைதானத்தின் சிறிய எல்லையில் சென்றது அல்லது ஃபீல்டர் இல்லாத திசையில் சென்றது. அந்த அளவுக்கு எல்லாமே கணக்கிட்டு ஆடினார்.

#PAKvSA
#PAKvSA

அவர் களமிறங்கியபோது ரன்ரேட் ஐந்துக்கும் குறைவாக இருந்தது. பாகிஸ்தான் 280 ரன்கள் எடுக்கும் என எதிர்ப்பார்க்கப்பட்டபோது ஹரிஸ் சோஹைலின் நேர்த்தியான, அதே சமயம் அதிரடியான ஆட்டத்தால் 308 ரன்கள் குவித்தது. சோஹைல் பாகிஸ்தானிற்கு தேவையான நேரத்தில் 59 பந்துகளில் 86 ரன்கள் குவித்து ஆட்டநாயகன் விருதையும் தட்டிச்சென்றார்.

பெளலிங்கிலும் பாகிஸ்தான் அசத்தல்

இந்த போட்டிக்கு முன்பு வரை வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இங்கிலாந்து ஆகிய இரண்டு அணிகளுக்கு எதிரான போட்டிகளில் மட்டுமே, முதல் பத்து ஓவர்களில் விக்கெட் வீழ்த்தியிருந்தது பாகிஸ்தான். அதுபோக மிடில் ஓவர்களிள்(11-40) வேகப்பந்துவீச்சாளர்கள் வெறும் மூன்று விக்கெட்டுகள் மட்டுமே வீழ்ந்தியிருந்தனர். அந்த அணியின் பேஸ் அட்டாக் வீழ்த்தியிருந்த 19 விக்கெட்டுகளில் 13 விக்கெட்டுகள் டெத் ஓவர்களில் எடுக்கப்பட்டவை. எதிரணியர் எல்லா சேதாரத்தையும் செய்த பிறகு எடுக்கப்படும் விக்கெட்டுகளால் எந்தப் பயனும் இல்லை.

#PAKvSA
#PAKvSA

இந்த உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணிக்காக அதிக விக்கெட்டுகளை சாய்த்த அமீர் எடுத்த பெரும்பாலான விக்கெட்டுகள் டெத் ஓவர்களில் எடுக்கப்பட்டவை. இந்தப் போட்டிக்கு முன்பு, அவர் எடுத்திருந்த 13 விக்கெட்டுகளில் 3 மட்டுமே முதல் பவர்ப்ளேயில் எடுக்கப்பட்டது. (அந்த மூன்றும் வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான முதல் போட்டியில் எடுக்கப்பட்டது). பவர்ப்ளேயில் சிக்கனமாக பந்துவீசி எதிரணிக்கு நெருக்கடிக் கொடுப்பது மட்டுமே அவரது வேலை இல்லை. அவரின் முதல் ஸ்பெல்லில் ஓப்பனர்கள் ஒருவரையாவது பெவிலியனுக்கு நடையைக் கட்டவைக்க வேண்டும் என்பதைத்தான் சர்ஃபராஸ் அவரிடம் எதிர்பார்ப்பார். தென்னாப்பிரிக்காவக்கு எதிராக அமீர் தன்னுடைய இரண்டாவது ஓவரலியே அம்லாவை அவுட்டாக்கி தன் வேலையைச் சரியாக செய்தார்.

மற்ற ஆட்டங்களில், வெறும் அமீர் மட்டுமே சிறப்பாக பந்துவீச மற்ற வீரர்கள் அவருக்கு உறுதுணையாக இல்லாமல் போனதால் அமீரின் தாக்கம் பெரிதாக இல்லை. ஆனால், நேற்று எல்லா பெளலர்களும் நிலைமையை உணர்ந்து சிறப்பாக செயல்பட்டனர். மிடில் ஓவர்களில் இமாத் வாசிம் – ஷதாப் கானின் ‘ஸ்பின்’ கூட்டணி கலக்க, வஹாப் ரியாஸ் இறுதி ஓவர்களில் ரிவர்ஸ் ஸ்விங்கில் மிரட்டினார். இரண்டு நியூ பால் விதிகளால் ஒருநாள் போட்டிகளில் அதிகம் பார்க்கப்படாமல் போன ரிவர்ஸ் ஸ்விங்கை நேற்று வஹாப் ரியாஸ் செய்ய, அதைப் பார்ப்பதற்கே அவ்வளவு அற்புதமாக இருந்தது. பாகிஸ்தானின் மிரட்டல் பெளலிங்கால் தென்னாப்பிரிக்காவால் 249 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. 49 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றிபெற்றது.

லைட்டை தென்னாப்பிரிக்கா பக்கம் திருப்பலாம்!

தென்னாப்பிரிக்காவின் முக்கிய பெளலராக கருதப்பட்ட ரபாடா, இரண்டாவது முறையாக விக்கெட் இல்லாமல் தனது 10 ஓவர் கோட்டாவை முடித்தார். தாஹீரைத் தவிர எந்த ஒரு ரெகுலர் பெளலரும் சரியாக பந்துவீசவில்லை. லென்தில் தடுமாற்றம், முக்கியமாக ஃபீல்டிங்கிற்கு ஏற்றவாரு பந்துவீசாதது என தென்னாப்பிரிக்காவின் பலமாகக் கருதப்படும் பெளலிங்கில் ஏகப்பட்ட சொதப்பல்கள். பெளலிங் இப்படியென்றால் பேட்டிங் அதைவிட மோசம்.

#PAKvSA
#PAKvSA

வழக்கம் போல் அந்த அணியின் தொடக்க ஜோடி இந்த போட்டியிலும் சொதப்பியது. இந்த தொடரில் டி காக் – அம்லா ஜோடி மொத்தமே 149 ரன்கள்தான் எடுத்துள்ளது. அதில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் மட்டும் 104 ரன்கள். மற்ற போட்டிகளில் 45 ரன்கள். இங்கிலாந்திலுள்ள பெரிய மைதானங்களில் லார்ட்ஸ் மைதானமும் அடக்கம். பெளண்டரி எல்லைகள் மிக நீளம்.

மைதானம் பெரியது என்பதால் ஸ்பின்னர்கள் பந்துவீசும்போது அழகாகத் தொட்டுவிட்டாலே இரண்டு ரன்கள் ஓடலாம். அதுவே பந்துவீச்சாளர்களுக்கு நெருக்கடியை கொடுக்கும். ஆனால், தென்னாப்பிரிக்கா வீரர்கள் பெரிய பெளண்டரிகளை க்ளியர் செய்ய ஸ்லாக் ஷாட்கள் ஆட, தங்கள் விக்கெட்டை பறிகொடுத்தனர். இந்த இடத்தில்தான் ஹாரிஸ் சோஹைலின் ஆட்டம் மேலும் கவனிக்கப்படுகிறது. அவர் பெளண்டரிகளை க்ளியர் செய்ய முற்படாமல், 30 யார்டு வட்டத்துக்குள் இருக்கும் ஃபீல்டர்களை க்ளியர் செய்ய முற்பட்டார். அதில் வெற்றியும் பெற்றார்.

தென்னாப்பிரிக்க வீரர்கள் பேட்டிங்கின்போது தொய்வாகவே காணப்பட்டனர். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக வங்கதேசம் காட்டிய போராட்டக் குணத்தில், 10 சதவிகித தைக் கூட தென்னாப்பிரிக்க வீரர்கள் காட்டவில்லை. இந்தியாவுடனான படுதோல்வியால் உளவியல் ரீதியான பாதிப்பையும், அது ஏற்படுத்திய நெருக்கடிகளையும் கடந்து, பாகிஸ்தான் வீரர்கள் சிறப்பாக செயல்பட்டனர். அவர்கள் முன்பு செய்த தவறுகளை திருத்திக்கொண்டனர். தென்னாப்பிரிக்காவோ ஒரே தவறை மீண்டும் மீண்டும் செய்கிறது.

என் கிரிக்கெட் பயணத்தில் இந்த உலகக் கோப்பைதான் மிகவும் சோதனைக்காலம்
டூ ப்ளெஸ்ஸிஸ்

அவருக்கு மட்டுமல்ல மொத்த தென்னாப்பிரிக்கா அணிக்கும் இது மிகவும் சோதனைக் காலம் தான். 2003-ம் ஆண்டுக்குப் பிறகு அந்த அணி இந்த உலகக் கோப்பையில் லீக் சுற்றுடன் வெளியேறுகிறது. அந்த உலகக் கோப்பையிலாவது கடைசி போட்டிவரை அடுத்த சுற்றுக்குள் நுழையுமா? நுழையாதா? என்ற நிலையில் இருந்தது. ஆனால், இந்தமுறை மீதம் உள்ள லீக் போட்டிகளை கடமைக்கு ஆட வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

இந்த உலகக் கோப்பைக்கு பிறகு தென்னாப்பிரிக்கா, எந்த மாதிரி முடிவுகள் எடுக்கப்போகிறது என்பதுதான், இப்போது எல்லா கிரிக்கெட் ரசிகர்களிடமும் இருக்கும் கேள்வி.