Published:Updated:

Women's IPL: "ஸ்ம்ரிதி மந்தனாவே என் கேப்டன்"- CSK-வில் விளையாட விருப்பம் தெரிவித்த கேட் கிராஸ்!

கேட் கிராஸ்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் இதில் தீவிர ஆர்வம் காட்டி வருவதாகத் தெரிகிறது. இளம் வீரர்களுக்காக புதிய கிரிக்கெட் அகாடமியைத் தொடங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் இந்த லிஸ்டில் சேரலாம் எனத் தெரிகிறது.

Women's IPL: "ஸ்ம்ரிதி மந்தனாவே என் கேப்டன்"- CSK-வில் விளையாட விருப்பம் தெரிவித்த கேட் கிராஸ்!

கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் இதில் தீவிர ஆர்வம் காட்டி வருவதாகத் தெரிகிறது. இளம் வீரர்களுக்காக புதிய கிரிக்கெட் அகாடமியைத் தொடங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் இந்த லிஸ்டில் சேரலாம் எனத் தெரிகிறது.

Published:Updated:
கேட் கிராஸ்

2023-ம் ஆண்டு முதல் ஐ.பி.எல் போன்ற பெண்களுக்கான டி20 லீக் ஒன்றை நடத்த உள்ளது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம். இத்தொடரை நடத்த இரண்டு காலகட்டங்களையும் தேர்வு செய்துள்ளது பிசிசிஐ. நடந்துமுடிந்த ஐ.பி.எல் தொடரின் பிளே ஆப்ஸின் போது இதுகுறித்த பேச்சுவார்த்தை அணி பங்குதாரர்களிடையே நடைபெற்றது. இதன் அடிப்படையில் 2023-ம் ஆண்டு மார்ச் அல்லது செப்டம்பர் மாதங்களில் இத்தொடர் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Women's IPL
Women's IPL

சமீபத்தில் நடந்துமுடிந்த பெண்கள் டி20 சேலஞ்ச் போட்டிகளைக் காண, கணிசமான பார்வையாளர்கள் மைதானத்திற்கு வருகை புரிந்திருக்கிறார்கள். சூப்பர்நோவாஸ், வெலாசிட்டி அணிகளுக்கு இடையேயான இறுதிப் போட்டிக்கு கிட்டத்தட்ட 8,621 பேர் வந்திருந்தனர். கடந்த சில ஆண்டுகளில் பெண்கள் கிரிக்கெட் எந்த அளவிற்கு வளர்ந்துள்ளது என்பதற்கு இதுவே உதாரணம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கரீபியன் பிரீமியர் லீக், தி ஹன்ட்ரட் அண்ட், தி வுமன்ஸ் பிக் பாஷ் ஜூலை-நவம்பர் இடையே நடைபெறுவதால், மார்ச் மாதத்தை சரியான நேரமாகப் பார்க்கிறது பிசிசிஐ. ஏனெனில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்க வீரர்கள் டிசம்பர்-பிப்ரவரி மாதங்களுக்கு இடையில் சர்வதேச பொறுப்புகளைக் கொண்டிருப்பார்கள். கடந்த ஒரு வாரமாக, கிரிக்கெட் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் ஆகியவற்றுடன் இதுகுறித்த பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறது பிசிசிஐ .

Kate Cross
Kate Cross

இந்த புதிய தொடரில் சுமார் ஆறு அணிகள் வரை பங்கேற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சில ஐ.பி.எல் உரிமையாளர்களும் பெண்கள் அணிகளை வாங்க ஆர்வம் காட்டியுள்ளனர். கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் இதில் தீவிர ஆர்வம் காட்டி வருவதாகத் தெரிகிறது. இளம் வீரர்களுக்காக புதிய கிரிக்கெட் அகாடமியைத் தொடங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் இந்த லிஸ்டில் சேரலாம் எனத் தெரிகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இங்கிலாந்து பெண்கள் அணியை சேர்ந்த கேட் கிராஸ் மிகத் தீவிரமான சி.எஸ்.கே ரசிகை. பெண்களுக்கான ஐ.பி.எல் தொடர் குறித்த அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து “ நான் சேப்பாக்கத்தில் விளையாட ஆசைப்படுகிறேன்” என்று தன் விருப்பத்தைத் தெரிவித்துள்ளார் கிராஸ். “ புதிய அணிகள் பற்றியெல்லாம் எனக்குத் தெரியாது, ஆனால் சென்னை சூப்பர் கிங்ஸ் மகளிர் அணியைக் கொண்டிருக்குமெனில் மிக அற்புதமாக இருக்கும். ஸ்மிருதி மந்தனா சென்னை அணிக்காக தான் விளையாட விரும்புகிறார் என்பது எனக்குத் தெரியும். என் கேப்டனாக எனவே ஸ்மிருதி இருந்தால், நான் மிகவும் மகிழ்ச்சி அடைவேன்" என்று கூறியுள்ளார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism