Published:Updated:

``இது மோட்டிவேஷன் லெவல் இன்னிங்ஸ்!” - ஸ்மித்தின் வெறித்தனம் #Ashes

ஸ்மித்
ஸ்மித் ( AP )

நேற்று இரவு முதல் சமூக வலைதளங்களில் ஸ்மித்தின் சதம் குறித்த பேச்சுதான். அழுக்கு சட்டையுடன் அவர் களத்தில் போராடிய புகைப்படங்கள் காணும் இடமெங்கிலும் பகிரப்பட்டு இருந்தது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

ஆஸ்திரேலிய இங்கிலாந்து ரசிகர்களுக்கு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் எல்லாம் இரண்டாம்பட்சம்தான். அவர்களுக்கு எப்போதுமே ஆஷஸ் தொடர்தான் டாப். இங்கிலாந்து ஆஸ்திரேலிய அணிகள் மோதும் வரலாற்று சிறப்புமிக்க ஆஷஸ் தொடர் நேற்று பிர்மிங்காம்மில் உள்ள எட்பக்ஸ்டன் மைதானத்தில் தொடங்கியது.

ஆஷஸ் கோப்பை
ஆஷஸ் கோப்பை
Twitter/ICC

எப்போதும் ஆஷஸ் தொடருக்கு இருக்கும் எதிர்பார்ப்பைக் காட்டிலும் கொஞ்சம் கூடுதல் எதிர்பார்ப்பு இந்த முறை இருக்கிறது. காரணம் இது டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான தொடக்கமும்கூட. இரண்டு ஆண்டுகள் நடைபெறவுள்ள டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் முதல் போட்டி நேற்று தொடங்கிய ஆட்டம்தான்.

கூடுதல் பரபரப்புக்கு மத்தியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங்கை தேர்வு செய்தது. ஆஸ்திரேலிய பேட்டிங் லைன் -அப் மீது கேப்டன் வைத்த நம்பிக்கையைத் தகர்த்து எறிந்தார் இங்கிலாந்தின் பிராடு. 2 ரன்னில் வார்னர் ஆட்டமிழக்க, பான்கிராஃப்ட் 8 ரன்னில் வெளியேறினார். இருவரையும் பிராடு வெளியேற்றினார்.

நேற்று இரவு முதல் சமூக வலைதளங்களில் ஸ்மித்தின் சதம் குறித்த பேச்சுதான். அழுக்கு சட்டையுடன் அவர் போராடிய புகைப்படங்கள் காணும் இடமெங்கிலும் பகிரப்பட்டு இருந்தது

முதலில் தொடங்கிய ஆட்டம், அப்படியே தொடர அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது ஆஸ்திரேலியா. ஒருகட்டத்தில் 122 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து கிட்டத்தட்ட முதலாவது இன்னிங்ஸ் முடிவுக்கு வர தயாரானது. ஆனால், எதிர்பாராததை ஏதிர்பாருங்கள் என்று சொல்வதைப்போல டூ டவுன் களமிரங்கிய ஸ்மித் ட்விஸ்ட் வைத்தார், கடைசி இரு பௌலர்களுடன் சேர்ந்து அவர் செய்ததெல்லாம் வேற லெவல் வெறித்தனம். பீட்டர் சிடிலுடன் சேர்ந்து 88 ரன்கள் பார்ட்னர்ஷிப், லயனுடன் சேர்ந்து 74 ரன்கள் பார்ட்னர்ஷிப் என மாஸ் காட்டினார் ஸ்மித். ஸ்மித் 144 ரன்னில் கடைசி விக்கெட்டாக வீழ்ந்தார். பிராட் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இது ஆஷஸ் தொடரில் ஸ்மித் அடிக்கும் 9-வது சதம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதுபோன்று பலமுறை நடந்திருந்தாலும் ஆஷஸ் தொடரின் முதல் போட்டியில் இருக்கும் பிரஷர் என்பது உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இறுதிக்கட்டத்தில் இருந்த பிரஷரை விட அதிகம் என்றுதான் சொல்ல வேண்டும். இறுதிப் போட்டியில் சிறிது நேரம்தான் பிரஷர் நீடித்தது. ஆனால், இங்கு 5 நாளும் அதே பிரஷர் இருக்கும். இன்னும் சொல்லப்போனால் 5 போட்டிகளிலும் இருக்கும்.

ஸ்மித்
ஸ்மித்
Twitter/ICC

காரணம் களத்தில் இருந்து மட்டுமே வீரர்களுக்கு அழுத்தம் வராது. களத்துக்கு வெளியே இருந்தும் அழுத்தம் வரும். இது இங்கிலாந்து நாட்டில் நடந்தால் ஆஸ்திரேலியாவும் ஆஸ்திரேலியாவில் நடந்தால் இங்கிலாந்து அணியும் சந்திக்கும் பெரும் பிரச்னை. நேற்றும் அது நடந்தது. அனால், ஆஸ்திரேலியாவுக்கு நடந்தது என்பதைக் காட்டிலும் ஸ்மித்துக்கு எதிராக நடந்தது என்றுதான் சொல்ல வேண்டும். ரசிகர்களின் தாக்குதல் மனதளவில் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் இருந்தது.

அதாவது, பந்து சேதப்படுத்தப்பட்ட விவகாரத்தை மையமாகக் கொண்டு ரசிகர்கள் ஸ்மித்துக்கு எதிராகக் கடும் தாக்குதல் நடத்தினர். அவர் மன்னிப்பு கோரும்போது அழுத முகத்தை முகமூடியாக அணிந்து வந்தனர். பந்தை சேதப்படுத்துவதற்கு ஆஸ்திரேலிய வீரர்கள் பயன்படுத்திய சேன்ட் பேப்பர் எனத் தொடர்ச்சியாகத் தாக்க, எந்தச் சலனமும் இல்லாமல் ஆடினார் ஸ்மித்.

ரசிகர்கள்
ரசிகர்கள்
Twitter/@cricketcomau

ஆஷஸ் தொடரில் இது ஒன்றும் புதிதல்ல. கடந்த ஆஷஸ் தொடரில் ஸ்டோக்ஸ் கைது செய்யப்பட்டது போன்று ஆஸ்திரேலிய ரசிகர்கள் மைதானத்தில் செய்துகாட்டினர். ஸ்லெட்ஜிங் என்பது இருநாட்டு வீரர்கள் மட்டுமல்ல, ரசிகர்களுக்கும் கைவந்த கலை.

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின்போது இங்கிலாந்து ரசிகர்களை ஸ்மித் வார்னருக்கு எதிராகச் செயல்பட வேண்டாம் என்று சொல்வீர்களா என ஆஸ்திரேலியா இங்கிலாந்து போட்டிக்கு முன்னதாக இயான் மார்கனிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர், ரசிகர்களை நான் தடுக்க முடியாது. ஒருவர் தவறு செய்து தண்டனை அனுபவித்தால் மட்டுமே அவர் ரசிகர்கள் அப்படியே ஏற்றுக்கொள்வர்கள் என்று அர்த்தம் கிடையாது. தவிர, பணம் செலவு செய்து டிக்கெட் வாங்கி வந்தவர்களை நான் எப்படிக் கட்டுப்படுத்த முடியும். அவர்கள் கொண்டாடும் விதத்தில் ஆட்டத்தைக் கொண்டாடட்டும்” என்றார். ரசிகர்களும் அப்படித்தான் செயல்பட்டார்கள்.

மீம்ஸ்
மீம்ஸ்
Twitter

நேற்றைய முதல் நாள் ஆட்டம் முடிவடைந்த பின்னர் பேசிய ஸ்மித், ``நான் மீண்டும் விளையாடுவேன் என்று நினைக்கவில்லை. கடந்த 15 மாத காலத்தில் நான் என்னை இழந்ததுபோல் உணர்ந்தேன். குறிப்பாக, காயத்துக்கான சிகிச்சையில் இருந்தபோது மிகக் கடினமாக இருந்தது. ஆனால், அதிலிருந்து மீண்டு வந்தபோது மீண்டும் தன்னம்பிக்கையாக உணர்ந்தேன். கயத்தில் இருந்து மீண்டு வந்தது என்னை மேலும் உந்தியது. நாம் விரும்புவதைச் செய்தால் எல்லாம் தானாக நடக்கும். ஆஸ்திரேலிய மக்களும் எனது ஆட்டத்தால் மகிழ்ச்சி அடைந்திருப்பார்கள் என நம்புகிறேன்.

ஸ்மித்+வார்னர் வெர்சஸ் இங்கிலாந்து... ஆஷஸ் ஆரம்பம்! #ENGvAUS #Ashes

நான் அணிக்கு மீண்டும் திரும்பிவந்து, இப்போது இருக்கும் இடம் என்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. நான் களத்தில் இருக்கும்போது உண்மையிலே எப்படி ஆட வேண்டும் என்ற ஐடியா இல்லாமல்தான் இருந்தேன். எனது நிலையை விவரிக்க வார்த்தைகள் இல்லாமல் இருக்கிறேன். எனது சதங்களில் இது மிகச் சிறப்பானது என்பேன். சில நேரங்களில் நான் சிறப்பான பந்துகளை எதிர்கொள்ள முடியாமல் சிரமப்பட்டேன். ஆனால், எனக்குள், சரி விடு, அடுத்த பந்தை பார்த்துக்கொள்ளலாம் என எனக்கு நானே நம்பிக்கை அளித்து வந்தேன்” என்றார்.

Smith
Smith
AP

இந்தநிலையில்தான் வரலாற்று சிறப்புமிக்க ஸ்மித்தின் இந்தச் சதத்துக்கு பெரும் பாராட்டு குவிந்து வருகிறது. ரசிகர்களும் ஸ்மித்தின் கம்பேக்கை கொண்டாடி வருகின்றனர். ஒரு சில ஆட்டங்கள் நமக்கு நம்பிக்கை அளிக்கும். ஆனால், சில ஆட்டம், வாழ்க்கை எத்தனை இக்காட்டான நிலையில் விட்டாலும் மீண்டு வர முடியும் என மோட்டிவேஷன் தரும். ஸ்மித் நேற்று ஆடியதெல்லாம், மோட்டிவேஷன் தரக்கூடிய இன்னிங்ஸ்.

முதல் நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 284 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இங்கிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 10 ரன்கள் எடுத்துள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு