Published:Updated:

’ஸ்மித்துக்கு அப்படி ஒரு வெறி!’- ஸ்டூவர்ட் பிராட் ஷேரிங்க்ஸ்

ஸ்மித்
ஸ்மித்

'கிரிக்கெட்டில், நான் இதுவரை விளையாடிய வீரர்களில் பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் இருவரும் தலைசிறந்தவர்கள்' என இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் கூறியுள்ளார்.

கொரோனா தாக்கம் காரணமாக உலகமே முடங்கியுள்ளது. விளையாட்டுத் துறையும் இதில் விதிவிலக்கல்ல. மைதானங்கள் எல்லாம் காலியாக இருக்கின்றன. பல முக்கிய விளையாட்டுப் போட்டிகள் எல்லாம் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. ஃபிட்னஸ் பயிற்சி மற்றும் சமூக வலைதளங்களில், விளையாட்டு வீரர்கள் தங்களது பொழுதைக் கழித்துவருகிறார்கள்.

ஸ்டூவர்ட் பிராட்
ஸ்டூவர்ட் பிராட்

இந்நிலையில், இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட், டெய்லி மெயில் பத்திரிகையின் சில கேள்விகளுக்கு விடையளித்துள்ளார். உங்களுடன் விளையாடும் வீரர்களில் சிறந்த வீரர் யார்? எதிரணியில் யார்? என்ற கேள்விக்குப் பதிலளித்த ஸ்டூவர்ட் பிராட், “ நான் ரொம்ப அதிர்ஷ்டசாலி, இங்கே குறிப்பிட்ட நபரை மட்டுமே கூற வேண்டும் என நீங்கள் கேட்டுள்ளீர்கள். நீங்கள் ஒரு 4 அல்லது 5 ஆப்ஷன் கேட்டிருந்தால், என் நினைவில் 10 அல்லது 15 நபர்கள் வந்திருப்பார்கள்.

’ஐ மிஸ் தோனி; அவர் மீண்டும் விளையாடினால்..?!’ - குல்தீப் யாதவ் சொல்லும் ஐடியா

பென் ஸ்டோக்ஸ், நான் விளையாடிய வீரர்களில் மிகச்சிறந்த வீரர். பேட்டிங் , பௌலிங், ஃபீல்டிங் என களத்தில் எது செய்தாலும் நேர்மறையான எண்ணத்துடன் இருக்கக்கூடிய நபர். எனக்கு எதிரான என்றால், அது ஸ்டீவ் ஸ்மித்தான். அவருக்கு பந்து வீசுவதற்கான சிறந்த வழியை நான் இன்னமும் கண்டுபிடிக்கவில்லை. அவர் பந்துவீச்சாளர்களின் வாழ்க்கையை கடினமாக்குகிறார். பெரிய அளவில் ரன்களைக் குவிக்க வேண்டும் என்ற பசியுடன் இருப்பவர்” எனக் கூறியுள்ளார்.

பென் ஸ்டோக்ஸ்
பென் ஸ்டோக்ஸ்
`காலி மைதான கிரிக்கெட்; ரசிகர்கள் இல்லாமல் மாயாஜாலம் நடக்காது’ - விராட் கோலி ஓப்பன் டாக்

உங்களால் ஒரு சட்டத்தை மாற்ற முடிந்தால் என்னவாக இருக்கும் என்ற கேள்விக்குப் பதிலளித்துள்ள பிராட், “மன்கட் விக்கெட் முறையை மாற்ற வேண்டும். அது ஒரு சலிப்பான, ஆர்வமில்லாத விக்கெட் எடுக்கும் முறை. வேகமான பந்துவீச்சு, அற்புதமான கேட்சுகள் ,ஸ்விங் செய்யக்கூடிய பந்துகள், எல்.பி.டபிள்யூக்கள் என்ற முறையில்தான் கிரிக்கெட்டை பார்க்கிறேன். மன்கட் போன்ற குப்பைகளை அல்ல” என்று தெரிவித்துள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு