Published:Updated:

`இந்தியக் கிரிக்கெட்டின் மனநிலையை மாற்றியவர்; சிறந்த தலைவர்!' - கங்குலியைப் புகழும் அக்தர்

பிசிசிஐ தலைவராக பொறுப்பேற்கவுள்ள கங்குலியை பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் அக்தர் புகழ்ந்து பேசியுள்ளார்.

கங்குலி
கங்குலி

பிசிசிஐ தலைவராக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரங் கங்குலி பொறுப்பேற்கவுள்ளார். இந்திய ரசிகர்கள் கங்குலியை செல்லமாக `தாதா’என அழைப்பாளர்கள். இந்திய கிரிக்கெட்டில் உயர் பதவியை அவர் அலங்கரிக்கவுள்ளது கிரிக்கெட் ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளது. சமூக வலைதளத்தில் கங்குலிக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது. கங்குலியின் வருகை இந்தியக் கிரிக்கெட் வாரியத்துக்கு மேலும் வலுச்சேர்க்கும் என முன்னாள் வீரர்கள் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர். இந்நிலையில் பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர் அக்தர் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

Akthar
Akthar

அக்தர் தனது யூ டியூப் சேனலில் வெளியிட்டுள்ள வீடியோவில் , ``இந்திய அணியின் கேப்டனாக கங்குலி இருந்தபோது நிறைய வீரர்கள் அணிக்குள் வந்தனர். கங்குலி கேப்டனாக இருந்தபோது தான் சேவாக் தனது கிரிக்கெட் பயணத்தை தொடங்கினார். யுவராஜ் சிங், கெளதம் கம்பீர், ஜாகீர் கான், நெஹ்ரா என நிறைய பேர் இந்திய அணிக்குள் வந்தனர். இந்திய வீரர்களிடம் இருந்த வெறியை நான் உணர்ந்தேன். கிரேக் சாப்பல் பயிற்சியாளராக இருந்தபோது கங்குலியிடம் இருந்த கேப்டன் பதவி பறிக்கப்பட்டது அதிர்ச்சியாக இருந்தது.

``பிசிசிஐ தலைவரானதும் இதுதான் எனது முதல் பணி!”- உற்சாகத்தில் கங்குலி

கங்குலி என்னைப் பார்த்து பயப்படுகிறார் என மக்கள் நினைத்தார்கள். அவர் என்னுடைய பந்துவீச்சில் சில சமயம் அடிபடுவார். ஆனால் அது ஒரு தவறான கருத்து. அவருடைய பிரச்னை என்னவென்றால் எனது பந்துவீச்சில் ஹூக் மற்றும் புல் ஷாட்டுகளை ஆடுவதற்கு தடுமாறுவார். அவர் என்னைப்பார்த்து பயந்து இருந்தால் எனக்கு எதிராக களமிறங்கி இருக்க மாட்டார்.

Ganguly
Ganguly
தலைவனின் தாக்கம் வரலாற்றையே மாற்றும்... தலைவர் கங்குலி என்ன செய்ய வேண்டும்? #Ganguly

கங்குலி சிறந்த தலைவர். அவர் கேப்டனாகும் வரை, இந்திய அணியால் பாகிஸ்தானால் வீழ்த்த முடியும் என்று நான் நினைத்ததில்லை. அவர் இந்திய கிரிக்கெட்டின் மனநிலையை மாற்றியவர். சர்வதேச கிரிக்கெட்டில் பி.சி.சி.ஐ மிகவும் சக்திவாய்ந்த அமைப்பாக இருப்பதால், கங்குலியின் நியமனம் சர்வதேச கிரிக்கெட்டுக்கு உதவும். கங்குலி தலைமையில் இந்திய அணி சிறப்பாக செயல்படும் என நம்புகிறேன். கங்குலி திறமைகளை விரும்பினார். திறமையுள்ள இளம்வீரர்களை அடையாளம் கண்டார்” எனத் தெரிவித்துள்ளார்.