தனது 17 வயதில் கிரிக்கெட் பயணத்தை தொடங்கிய ஷான் மார்ஸ் வெஸ்டர்ன் ஆஸ்திரேலியா அணிக்காக விளையாடி 12032 ரன்களை எடுத்திருக்கிறார். 2011 ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிரான தனது முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆடிய ஷான் மார்ஷ் 2019 ஆம் ஆண்டு இந்திய அணிக்கு எதிரான சிட்னி டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்காக கடைசியாக விளையாடி இருகிறார்.
இதுவரை 15 சர்வதேச T20 போட்டிகளில் விளையாடி இருக்கிறார். 2008 ஆம் ஆண்டு ஐபிஎல் முதல் சீசனில் பஞ்சாப் அணிக்காக 11 போட்டிகளில் ஆடிய இவர் 616 ரன்களை எடுத்து ஆரஞ்சு தொப்பியை வென்றிருந்தார்.

இந்நிலையில் தற்போது முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறப்போவதாக ஷான் மார்ஸ் அறிவித்துள்ளார். ஓய்வு குறித்து பேசிய ஷான் மார்ஷ், `சிறுவயதில் என் அப்பா விளையாடியதைப் பார்த்துக் கொண்டிருந்த போதுதான் எனக்கு கிரிக்கெட் மீது ஆர்வம் இருக்கிறது என்பதை உணர்ந்தேன். இது ஒரு அற்புதமான பயணம். 22 ஆண்டுகள் கிரிக்கெட்டில் நான் பயணிப்பேன் என்று என் கனவில் கூட நினைக்கவில்லை. இதை நினைத்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன்” என்று தெரிவித்திருக்கிறார்.