Published:Updated:

`தென்னாப்பிரிக்கத் தொடரிலும் ஓய்வா?'- தோனிக்கு பதில் இளம்வீரர்களை நோக்கும் பி.சி.சி.ஐ!

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடரைப் போல தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரிலும் தோனிக்கு ஓய்வு கொடுக்கப்படும் எனத் தெரிகிறது.

dhoni
dhoni

சிறிய இடைவெளிக்குப் பின்பு தோனியின் ஓய்வு குறித்த பேச்சுகள் மீண்டும் எழத் தொடங்கியுள்ளன. உலகக் கோப்பை தொடரிலும் தோனி மீது சில விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. இதனால் உலகக் கோப்பைத் தொடர் முடிவடைந்ததும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடரிலிருந்து தானாக முன்வந்து விலகி ராணுவப் பயிற்சி மேற்கொண்டார் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி. சுமார் 20 நாள்கள் காஷ்மீரில் ராணுவ முகாமில் தங்கி அவர்களுடன் பணியாற்றினார். அவருக்குப் பதிலாக ரிஷப் பன்ட் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இடம்பிடித்தார்.

dhoni
dhoni

பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை என்றாலும், ஓகே என்ற அளவில் விளையாடினார் ரிஷப். இந்நிலையில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடரைப் போல தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரிலும் தோனிக்கு ஓய்வு கொடுக்கப்படும் எனத் தெரிகிறது. தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி அடுத்த மாதம் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்யவுள்ளது. இதில் மூன்று டி20 போட்டிகளில் இந்திய அணியுடன் விளையாட உள்ளது. இந்தத் தொடருக்கான இந்திய அணி வரும் செப்டம்பர் 4-ம் தேதி தேர்வு செய்யப்பட உள்ளது. இதில்தான் அவருக்கு ஓய்வு கொடுக்கப்படலாம் எனக் கூறப்பட்டுவருகிறது.

`எவிக்ட் கோலி... சேவ் சாஸ்திரி!’ – கோலியை கார்னர் செய்யும் மும்பை லாபி

இதுதொடர்பாக பிடிஐ செய்தி நிறுவனத்திடம் பேசியுள்ள பி.சி.சி.ஐ அதிகாரி ஒருவர், ``2020 உலகக் கோப்பை டி20 தொடருக்கு முன்பாக இந்தியா 22 டி20 போட்டிகளில் மட்டுமே விளையாட இருக்கிறது. இதனால் உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையிலேயே வீரர்களை தேர்வு செய்ய தேர்வுக்குழுவினர் விரும்புகின்றனர். அந்தவகையில் உலகக் கோப்பை டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கு விளையாட எதுவாக அணி தரப்பில் மூன்று விக்கெட் கீப்பர்கள் எப்போதும் தயாராக வைத்திருக்க முக்கியத்துவம் கொடுக்கப்படும். 2020 உலகக்கோப்பை டி20 தொடருக்கான செயல்திட்டம் இப்போதே வகுக்கப்பட்டு வருகின்றது. அதில் ரிஷப் இடம்பெறவே அதிக வாய்ப்புகள் உள்ளன.

rishabh pant
rishabh pant
`கோலி மட்டுமல்ல... இவருகிட்டயும் க்ரீன் சிக்னல்தான்!'- ரவி சாஸ்திரி மீண்டும் பயிற்சியாளரான பின்னணி

ரிஷப்பின் உடற்தகுதியும், பேட்டிங்கும் அதற்கேற்றாற்போலவே சிறப்பாக இருந்து வருகிறது. அவருக்கு அடுத்து இளம்வீரர்கள் இஷான் கிஷான், சஞ்சு சாம்சன் ஆகியோரின் பெயர்கள் ஆலோசிக்கப்படும். தோனியின் எதிர்காலத் திட்டம் குறித்து அவருடன் பிசிசிஐ பேசுமா எனத் தெரியவில்லை. ஓய்வு என்பது அவரின் தனிப்பட்ட விருப்பம். தேர்வுக் குழுவோ அல்லது வேறு யாரும் அந்த விஷயத்தில் முடிவு எடுக்க முடியாது. அதற்கு உரிமையும் இல்லை" எனக் கூறியுள்ளார். இதனால் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 போட்டிகளில் தோனிக்கு இடம்கிடைப்பது கடினம் என்றே தோணுகிறது.