Published:Updated:

``வழங்கப்படும் வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுங்கள் பன்ட்!” - சேவாக் சொன்ன அறிவுரை

பிரேம் குமார் எஸ்.கே.

ஆட்டத்தின் முக்கிய கட்டத்தில் அவர் தவறான ஷாட்களால் அவுட் ஆகி, அணியை இக்காட்டான நிலைக்குத் தள்ளுகிறார் என்ற விமர்சனமும் வருவதுண்டு.

Sehwag
Sehwag

இந்திய அணியில் தோனிக்குப் பின் விக்கெட் கீப்பர் யார் என்ற கேள்விக்கென விடையாகக் கிடைத்தவர் ரிஷப் பன்ட். விக்கெட் கீப்பிங்கில் அவ்வப்போது சொதப்பினாலும் தன்னுடைய அதிரடியான ஆட்டம் மூலம் அதைச் சரி செய்யும் திறன் கொண்டவர். ஆனாலும், பேட்டிங்கில் தொடர்ச்சியாக அவர் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்துவதில்லை என்ற குற்றச்சாட்டும் அவர் முன் வைக்கப்படுவது உண்டு.

Pant
Pant

ஆட்டத்தின் முக்கிய கட்டத்தில் அவர் தவறான ஷாட்களால் அவுட் ஆகி, அணியை இக்காட்டான நிலைக்குத் தள்ளுகிறார் என்ற விமர்சனமும் வருவதுண்டு. எனினும் பன்ட், 21 வயதே ஆன இளம் வீரர். அவர் தன்னை ஒரு முழுமையான கிரிக்கெட்டராக மாற்றிக்கொள்வதற்கான கால அவகாசத்தை வழங்க வேண்டும் என்ற கருத்தும் நிலவுகிறது.

`பும்ரா மேஜிக்; ரஹானே கிளாசிக்!’ - கேப்டனாகக் கங்குலி, தோனி சாதனைகளை முறியடித்த கோலி

இந்நிலையில் டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் குறித்தும் பன்ட் குறித்தும் பேசியுள்ளார் இந்திய அணியின் முன்னாள் அதிரடி நாயகன் சேவாக். ``பன்ட் ஒரு திறமையான வீரர். அவரிடம் அதிக திறன் இருக்கிறது. அவர் ஒரு கிரிக்கெட்டராக மெருகேறி வருகிறார். தற்போது இந்திய அணியில் அவரது இடம் உறுதிசெய்யப்பட்டுள்ளதால், அவருக்கு வழங்கப்படும் வாய்ப்புகளை அவர் முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்” என்றார்.

Team India against West indies
Team India against West indies

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர்பாகப் பேசிய சேவாக், `இந்தத் தொடர் 2 வருடங்கள் கொண்டது. அது நீண்ட காலம். இதில் வெற்றியாளரை கணிப்பது கடினம். எனினும், இந்திய அணி நல்ல நிலையில் இருக்கிறது. ரவி சாஸ்திரிக்கு இரண்டாம் இன்னிங்ஸுக்கு வாழ்த்துகள். இந்திய அணியின் தற்போதைய பலமாக, தரமான வேகப்பந்து வீச்சு உள்ளது. சுழற்பந்து இச்சாளர்களும் சிறப்பாகச் செயல்படுகிறார்கள். தற்போது செய்ய வேண்டியதெல்லாம், சரியான அணியைத் தேர்வு செய்வது மட்டுமே’ என்றார்.