Published:Updated:

`தோனி இருந்தபோது நிலைமையே வேறு..!’ - இந்திய அணியில் ராகுலின் `ரோல்’ குறித்து சேவாக்

தோனி ( Twitter )

ராகுலுக்கு விக்கெட் கீப்பராகவும் கூடுதல் வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என சேவாக் கோரிக்கை வைத்துள்ளார்.

Published:Updated:

`தோனி இருந்தபோது நிலைமையே வேறு..!’ - இந்திய அணியில் ராகுலின் `ரோல்’ குறித்து சேவாக்

ராகுலுக்கு விக்கெட் கீப்பராகவும் கூடுதல் வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என சேவாக் கோரிக்கை வைத்துள்ளார்.

தோனி ( Twitter )

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வெற்றிபெற்று தொடரைக் கைப்பற்றியது. முதலாவது போட்டியில் இந்திய அணி தோல்வியைச் சந்தித்து இருந்தாலும் அடுத்தடுத்த போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது.

கோலி - ரோஹித்
கோலி - ரோஹித்

இந்தப் போட்டியில் இந்திய அணி தரப்பில் சில புதிய முயற்சிகள் பரிசோதித்து பார்க்கப்பட்டன. தொடர் ஆரம்பிக்கும் முன்னரே இந்திய அணியின் கேப்டன் கோலி, ராகுல் மூன்றாவது இடத்திலும் தான் 4 -வது வீரராகவும் களமிறங்கவுள்ளதாகத் தெரிவித்தார். அதன்படியே மூன்றாவது வீரராக ராகுல் களமிறங்கினார்.

இந்தப் போட்டியில் கீப்பர் பன்ட்டுக்கு காயம் ஏற்பட, ராகுல் கீப்பிங் பணியையும் செய்தார். `அடுத்த போட்டிக்கு முன்னதாக மாற்று கீப்பர் அணிக்குத் திரும்புவார்' என எதிர்பார்த்தவர்களுக்கு கோலி ஒரு ட்விஸ்ட் வைத்தார். பகுதிநேர கீப்பரான ராகுலை இரண்டாவது போட்டியில் முழு நேர கீப்பராகக் களமிறங்கினார். இதனால் அணிக்கும் கூடுதலாக ஒரு பேட்ஸ்மேனை (மனீஷ் பாண்டே) சேர்க்க முடிந்தது. தவிர, இறுதிக் கட்டத்தில் களமிறங்கிய ராகுல் இந்திய அணிக்கு அதிரடியான ஃபினிஷிங் தந்தார்.

ராகுல்
ராகுல்

மூன்றாவது போட்டியில் தவானுக்கு காயம் ஏற்பட, ராகுல் தொடக்க ஆட்டக்காரராகக் களமிறங்க வேண்டிய சூழல். இப்படி இந்தத் தொடரில் ராகுல், முக்கியப் புள்ளியாகச் செயல்பட்டார். ஒரு வீரர் 50 ஓவர்கள் கீப்பிங் செய்துவிட்டு மீண்டும் தொடக்க ஆட்டக்காரராகக் களமிறங்குவது சரியானதாக இருக்காது என்ற விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டன.

ராகுலை முழு நேர கீப்பராகவும் 5-வது பேட்ஸ்மேனாகவும் களமிறக்குவது குறித்து அணி நிர்வாகம் பரிசீலிக்கும் என்றும் கூறப்பட்டது.

இந்நிலையில் தனியார் கிரிக்கெட் ஊடகத்திடம் பேசிய இந்திய அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் சேவாக், ``ஒருநாள் மற்றும் டி20 ஆட்டங்களில் சிறப்பான தொடக்கம் கிடைக்கும்போது நடுவரிசையில் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி கேப்டனுக்குப் பக்கபலமாக இருக்க வேண்டும். ஆனால், வீரர்களுக்குக் கொஞ்சம் வாய்ப்பும் வழங்க வேண்டும்.

Team
Team

5-வது வீரராக ராகுல் களமிறங்கி நான்கு முறை சொதப்பியதால், அடுத்து அவரின் இடத்தை மாற்றுவது குறித்து தற்போதைய அணி நிர்வாகம் சிந்திக்கிறது. ஆனால், தோனி இருந்தபோது நிலைமை அப்படி கிடையாது. இறுதிக்கட்டத்தில் உள்ள வீரர்களின் முக்கியத்துவத்தை அவர் அறிந்து வைத்திருந்தார். வீரர்களுக்குப் போதுமான வாய்ப்பை வழங்காமல் மாற்றினால், அவர்கள் எப்போது பாடம் கற்று பெரிய லெஜண்ட் வீரர்களாக மாற முடியும்?

நான் தொடக்க ஆட்டக்காரராகக் களமிறங்குவதற்கு முன்னதாக நடுவரிசையில் களமிறங்கியிருக்கிறேன். அப்போது நிறைய தவறுகள் செய்திருக்கிறேன். என்னுடைய தவறுகளால் அணி தோற்கும் நிலைக்கும் சென்றுள்ளது. ஆனால், ஒன்றை மட்டும் சொல்கிறேன். ஒரு வீரரை பெஞ்சில் அமர வைப்பதால் அவர் லெஜண்ட் வீரராகி விட முடியாது, வீரர்களுக்கு போதுமான வாய்ப்புகள் வழங்க வேண்டும்” என்றார்.

சேவாக்
சேவாக்

மேலும், ராகுலுக்கு விக்கெட் கீப்பராகவும் கூடுதல் வாய்ப்புகள் வழங்க வேண்டும் எனச் சேவாக் கோரிக்கை வைத்துள்ளார். இந்திய அணியின் கேப்டன் கோலி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் ஆட்டத்துக்குப் பின்னர் பேசும்போது, ``ராகுல் கீப்பிங் பணியைக் கவனித்துக் கொண்டால் நிச்சயமாக இந்திய அணி கூடுதல் பேட்ஸ்மேனுடன் களமிறங்கும் வாய்ப்பு கிடைக்கும். அது அணியின் பேட்டிங் பலத்தை அதிகப்படுத்தும். அணியின் நிலைத்த தன்மைக்கு அது மிகவும் முக்கியம்” என்றார்.