Published:Updated:

Nepal: பாலியல் வழக்கில் சிக்கிய சந்தீப் லமிச்சானுடன் கைக்குலுக்க மறுத்த ஸ்காட்லாந்து வீரர்கள்!

சந்தீப் லமிச்சான்

சந்தீப் லமிச்சான், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்டார்.

Published:Updated:

Nepal: பாலியல் வழக்கில் சிக்கிய சந்தீப் லமிச்சானுடன் கைக்குலுக்க மறுத்த ஸ்காட்லாந்து வீரர்கள்!

சந்தீப் லமிச்சான், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்டார்.

சந்தீப் லமிச்சான்

நேபாளத்தின் கீர்த்திப்பூர் மைதானத்தில் நேபாளம் - ஸ்காட்லாந்து அணிகளுக்கு இடையிலான ஒரு நாள் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. போட்டிக்குப்பின் ஸ்காட்லாந்து வீரர்கள் நேபாள நாட்டு அணி வீரர்களுடன் கைகுலுக்கினர். ஆனால் நேபாள வீரரான சந்தீப் லமிச்சானுடன் பலரும் கைகுலுக்க மறுத்துவிட்டனர். அது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

நேபாளம் - ஸ்காட்லாந்து அணிகள்
நேபாளம் - ஸ்காட்லாந்து அணிகள்

நேபாள நாட்டு கிரிக்கெட் அணியின் கேப்டனாகச் செயல்பட்டவர் சந்தீப் லமிச்சான். இதுவரை 30 சர்வதேச ஒரு நாள் போட்டிகள் மற்றும் 44 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து அவரை நேபாள கிரிக்கெட் கூட்டமைப்பு சஸ்பெண்டும் செய்திருந்தது. 

இதனிடையே, நேபாள கிரிக்கெட் கூட்டமைப்பின் கூட்டம் பொக்காரா நகரில் கடந்த ஜனவரி 31-ம் தேதி நடந்தது. அதில் சந்தீப் லமிச்சான் மீது பிறப்பிக்கப்பட்ட சஸ்பெண்டு உத்தரவை நீக்குவது என முடிவானது. அதுபற்றி பிப்ரவரி 1-ம் தேதி முடிவு அறிவிக்கப்படும் எனக் கூட்டமைப்பு அதிகாரி பிரேந்திரா பகதூர் சந்தா கூறியிருந்தார்.

அதன் பிறகு 4 சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் விளையாடவும்  அவரை நேபாள கிரிக்கெட் அணி அனுமதித்தது. இதற்கு நேபாளத்தில் பல்வேறு தரப்பிலிருந்தும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. பாலியல் வழக்கில் குற்றவாளியான சந்தீப்பை கிரிக்கெட்டில் சேர்க்கக் கூடாது எனக் கோரி போராட்டமும் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.