Published:Updated:

`4-வது இடத்துக்கான தேர்வில் என்ன நடந்தது?’ - முன்னாள் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பங்கர்

Sanjay Bangar
Sanjay Bangar

இந்திய அணியிலும் பயிற்சியாளர் குழுவிலும் இருந்த ஒரே மாற்றம் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பங்கர் நீக்கம் என்று சொல்லலாம்.

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்குப் பின்னர், இந்திய அணியின் பயிற்சியாளர் குழுவில் சில மாற்றங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பெரிய மாற்றங்கள் எதுவும் நிகழவில்லை. எனினும், கடந்த 5 ஆண்டுகளாக இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளராக இருந்த சஞ்சய் பங்கர் மாற்றப்பட்டு அவருக்குப் பதிலாக விக்ரம் பேட்டிங் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். இன்னும் சொல்லப்போனால் இந்திய அணியிலும் பயிற்சியாளர் குழுவிலும் இருந்த ஒரே மாற்றம் இவரது நீக்கம் என்று சொல்லலாம்.

Ravi - kOhli
Ravi - kOhli

இந்திய அணியின் பேட்டிங் டிபார்மென்ட்டைக் கவனித்துக் கொண்ட பங்கர், கடந்த 5 ஆண்டுகளில் பல்வேறு பாசிட்டிவ் விஷயங்களை இந்திய அணிக்கு வழங்கியுள்ளார். தவான் - ரோகித் ஓப்பனிங் இவரது காலகட்டத்தில்தான் பலமானது. புஜாராவின் டெஸ்ட் ஆட்டமும் கோலியின் அசுர வளர்ச்சியும் இவர் பேட்டிங் பயிற்சியாளராகச் செயல்பட்ட காலத்தின் பாசிட்டிவ் விஷயங்களாகப் பார்க்கப்படுகிறது. அதேநேரத்தில் முரளி விஜய், ரஹானே ஆகியோரின் சொதப்பல்களும் ஒருநாள் போட்டியில் 4-வது இடத்துக்கான இடம் முதலியவை குற்றசாட்டுகளாக முன்வைக்கப்படுகின்றன.

மற்ற குற்றசாட்டுகளைவிட 4-வது இடத்துக்கான தேர்வுதான் பங்கர் மீது வைக்கப்படும் பெரிய விமர்சனம். பேட்டிங் பயிற்சியாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட பின்னர் முதல்முறையாகப் பேசிய பங்கர், ``இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளராக 5 ஆண்டுகள் பல்வேறு ஏற்றத்தாழ்வுகளை சந்தித்து வந்திருக்கிறேன்.

Team India
Team India

2014-ம் ஆண்டு முதல் 3 ஆண்டுகள் டெஸ்ட் போட்டிகளில் முதலிடத்தில் இருந்தோம். இந்தியா விளையாடிய 52 டெஸ்ட் போட்டிகளில் 30-ம் வெற்றி பெற்றோம். அதிலும் அந்நிய மண்ணில் 13 வெற்றிகள். தொடர்ச்சியாகப் பல்வேறு நாடுகளில் ஒருநாள் தொடர்களைக் கைப்பற்றினோம். உலகக் கோப்பை மட்டும் மிஸ் ஆகிவிட்டது.

ரஹானேவின் ஆட்டம் தொடர்பாக சில விமர்சனங்கள் வருகின்றன. கடந்த 18 மாதங்களில் அவர் அரை சதங்களை சதங்களாக மாற்றுவதில் கொஞ்சம் சொதப்பினார். எனினும், தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சதமடித்தது மகிழ்ச்சியாக இருந்தது” என்றார்.

Rahane
Rahane
AP

பயிற்சியாளராகப் பதவி நீட்டிக்கப்படாதது தொடர்பாகப் பேசிய பங்கர், ``நிச்சயமாக அது கொஞ்சம் வருத்தமாகத்தான் இருந்தது. ஆனால், அது சில நாள்களுக்குதான். ஆனால், பிசிசிஐ மற்றும் நான் பணியாற்றிய பயிற்சியாளர்களான ஃபிளெட்சர், கும்ப்ளே, ரவி சாஸ்திரி ஆகியோருக்கும் இந்நேரத்தில் நன்றி தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளேன்.

பலர் என்னிடம், `வெளிநாட்டு அணிக்குப் பணியாற்ற உள்ளீர்களா?' எனக் கேட்கிறார்கள். கடந்த 5 ஆண்டுகாலமாக அதிகமாகப் பயணித்துள்ளேன். உடனடியாக இந்தியாவுக்கு வெளியே பணியாற்றும் முடிவில் இல்லை” என்றவர், இறுதியாக ஒருநாள் போட்டிகளில் 4-வது இடம் தொடர்பான சர்ச்சைக்கு வந்தார்.

pant
pant

``4-வது இடத்துக்கான வீரர் தேர்வு எனது தனிப்பட்ட முடிவு மட்டும் கிடையாது. ஒட்டுமொத்த அணி நிர்வாகமும் தேர்வுக்குழுவும் இணைந்து முடிவை எடுப்போம். 4-வது இடத்துக்கு வீரரின் ஃபார்ம், ஃபிட்னஸ், அவர் வலதுகை ஆட்டக்காரரா, இடதுகை ஆட்டக்காரரா, அவரால் பந்துவீச முடியுமா? உள்ளிட்ட பல விஷயங்கள் கருத்தில் கொள்ளப்பட்டன” என்றார்.

நாலு யார்க்கர்... நாலு விக்கெட்... மலிங்கா மேஜிக் நடந்தது எப்படி?! #Slinga #SLvNZ

உலகக் கோப்பைத் தொடரைப் பொறுத்தவரையில் கே.எல் ராகுல் 4-வது வீரராகக் களமிறங்கி வந்த நிலையில், தவான் காயம் காரணமாக அவர் முதலாவது இடத்தில் இறங்க வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டார். அதன்பின்னர், 4-வது இடத்துக்கு விஜய் சங்கர் கொண்டு வரப்பட்டார். அவரும் காயமடைந்ததால் பன்ட் அணிக்குள் கொண்டு வரப்பட்டார். நியூசிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி தோல்வி அடைந்து வெளியேறியது குறிப்பிடத்தக்கது.

அடுத்த கட்டுரைக்கு