Published:Updated:

"ஒரு சிறந்த நண்பர் என்ற வகையில் உங்களை மிஸ் செய்கிறேன்!"- ஷேன் வார்னே குறித்து சச்சின் உருக்கம்

சச்சின், வார்னே

வார்னேவின் திடீர் மரணம் கிரிக்கெட் பிரபலங்கள், ரசிகர்கள் என அனைவரது மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இன்று அவரின் முதலாம் ஆண்டு நினைவு நாள்.

Published:Updated:

"ஒரு சிறந்த நண்பர் என்ற வகையில் உங்களை மிஸ் செய்கிறேன்!"- ஷேன் வார்னே குறித்து சச்சின் உருக்கம்

வார்னேவின் திடீர் மரணம் கிரிக்கெட் பிரபலங்கள், ரசிகர்கள் என அனைவரது மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இன்று அவரின் முதலாம் ஆண்டு நினைவு நாள்.

சச்சின், வார்னே

சுழற்பந்து என்றதும் நம் நினைவிற்கு வருபவர்களில் முக்கியமானவர் ஷேன் வார்னே. ஆஸ்திரேலிய அணியின் கிரிக்கெட் வீரரும், கிரிக்கெட் உலகின் ஜாம்பவனுமாகிய வார்னே ஆஸ்திரேலியாவுக்காக 145 டெஸ்ட் போட்டிகள் விளையாடி 708 விக்கெட்டுகளையும், சர்வதேச அளவில் 1001 விக்கெட்டுகளையும், டெஸ்ட் கிரிக்கெட்டில் 3 முறை ஹாட்ரிக் விக்கெட்களையும் எடுத்திருக்கிறார்.

வார்னே
வார்னே

ஐபிஎல் போட்டிகளில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி கோப்பையும் வென்று கொடுத்துள்ளார். இதனிடையே, கடந்த ஆண்டு நிகழ்ந்த வார்னேவின் திடீர் மரணம் கிரிக்கெட் பிரபலங்கள், ரசிகர்கள் என அனைவரது மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவரின் முதலாம் ஆண்டு நினைவு நாளான இன்று அவரது நண்பரும், இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரருமான சச்சின் டெண்டுல்கர் ட்விட்டரில் உருக்கமான பதிவு ஒன்றைப் பதிவிட்டுள்ளார்.

அப்பதிவில், "களத்தில் நாம் பல யுத்தங்களை நேருக்கு நேராகச் சந்தித்திருந்தாலும் களத்துக்கு வெளியே பல நல்ல தருணங்களை நாம் பகிர்ந்து கொண்டுள்ளோம். ஒரு சிறந்த கிரிக்கெட் வீரர் என்ற வகையில் மட்டுமில்லாமல் ஒரு சிறந்த நண்பர் என்ற வகையிலும் நான் உங்களை மிஸ் செய்கிறேன். உங்கள் நகைச்சுவை உணர்வின் மூலம் சொர்க்கத்தை இன்னும் அழகான ஓர் இடமாக நீங்கள் மாற்றியிருப்பீர்கள் என நான் நம்புகிறேன் வார்னி!” என்று சச்சின் குறிப்பிட்டுள்ளார்.