Published:Updated:

Kohli: `இந்த டார்கெட் எல்லாம் கோலிக்கு பத்தாது'- கோலியைப் பாராட்டிய சச்சின்!

சச்சின்

இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் விராட் கோலியை பாராட்டி ட்வீட் ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார்.

Published:Updated:

Kohli: `இந்த டார்கெட் எல்லாம் கோலிக்கு பத்தாது'- கோலியைப் பாராட்டிய சச்சின்!

இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் விராட் கோலியை பாராட்டி ட்வீட் ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார்.

சச்சின்
நேற்று நடைபெற்ற ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது.

அணியின் வெற்றியைவிட நேற்றைய போட்டியில் விராட் கோலி அடித்த சதம்தான்  அதிக அளவில் பேசப்பட்டு வருகிறது. நேற்று அவர் அடித்த அந்த சதத்தின் மூலம் பல்வேறு சாதனைகளையும் படைத்திருக்கிறார்.

விராட் கோலி
விராட் கோலி

இதுகுறித்து பேசிய விராட் கோலி,  “ இதற்கு முன் நடைபெற்ற சில போட்டிகளில் நான் சரியாக விளையாடவில்லை. பயிற்சியின்போது நான்  சிறப்பாக செயல்பட்டிருந்தாலும், போட்டியில் பயிற்சியில் செய்தவற்றை வெளிப்படுத்தத் தவறினேன். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் முதல் பந்தில் இருந்து பந்துவீச்சாளர்களை அதிரடியாக எதிர்கொள்ள வேண்டும் என்ற மனநிலையில் இருந்தேன்” என்றும் தெரிவித்திருந்தார்.

விராட் அடித்த சதத்திற்காக பலரும் அவரை பாராட்டி வரும் நிலையில் இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரும் கோலியை பாராட்டி ட்வீட் ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார். அந்த பதிவில், “விராட் கோலி  முதல் பந்தில் கவர் டிரைவ் ஆடியதைப் பார்த்தவுடன் இன்றைய நாள் விராட் கோலி உடையது என்று எனக்குத் தெரிந்துவிட்டது.

கோலி - டூப்ளெசிஸ் இருவருமே ஆட்டத்தில் முழு கட்டுப்பாட்டுடன் இருந்தார்கள். அவர்கள் பெரிய ஷாட் மட்டும் ஆடாமல் விக்கெட்டுகளுக்கிடையே நன்றாக ஓடியும் ரன்களை சேர்த்து நல்ல ஒரு பார்ட்னர்ஷிப்பை அமைத்து அபாரமாக ரன்களைக் குவித்திருந்தனர். விராட் கோலி, டூப்ளெசிஸ் பேட்டிங் செய்த விதத்திற்கு இந்த 186 ரன்கள் போதுமானதாக இல்லை” என்று குறிப்பிட்டுப் பாராட்டியிருக்கிறார்.