Published:Updated:

``இன்னொரு சூப்பர் ஓவர் போயிருக்கலாம்!” - இறுதிப் போட்டி குறித்து சச்சின்

பிரேம் குமார் எஸ்.கே.

பவுண்டரிகள் வைத்து வெற்றியாளர்களைத் தீர்மானிப்பதைக் காட்டிலும் இன்னொரு சூப்பர் ஓவர் போயிருக்கலாம்.

சச்சின்
சச்சின்

இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாட்டில் நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து அணி சாம்பியன் பட்டம் வென்றது. அந்நாட்டில் இது தொடர்பான கொண்டாட்டங்கள் நடைபெற்று வந்தாலும் பவுண்டரிகள் மூலம் எப்படி வெற்றியாளரைத் தீர்மானிக்கலாம் என்ற கேள்விகள் இன்னும் குறையவில்லை.

சாம்பியன் இங்கிலாந்து
சாம்பியன் இங்கிலாந்து
AP

இதற்குப் பதிலாக மீண்டும் ஒரு சூப்பர் ஓவர் வைத்திருக்கலாம், அல்லது கோப்பையைப் பகிர்ந்துகூட அளித்திருக்கலாம் என்ற கருத்துகள் பறந்தன. ஐசிசி தனது விதிகள் குறித்து மறுபரிசீலனை செய்யும் நேரமிது என்றனர். காரணம் பவுண்டரிகள் மட்டுமே கிரிக்கெட் கிடையாது என்பதுதான் அனைவரின் கருத்தாக இருந்தது.

முன்னாள் வீரர்களில் தொடங்கி இன்னாள் வீரர்கள் வரை இது தொடர்பாகத் தங்களின் கருத்துகளைத் தெரிவித்து வரும் நிலையில், இந்திய அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரரும் நட்சத்திர வீரருமான சச்சின் இறுதிப் போட்டி மற்றும் இந்திய அணியின் செயல்பாடு தொடர்பாகப் பேசினார்.

ஸ்டோக்ஸ்
ஸ்டோக்ஸ்
AP

இறுதிப் போட்டி தொடர்பாகப் பேசிய சச்சின், ``இன்னும் ஒரு சூப்பர் ஓவர் வைத்திருக்கலாம் என்றே எனக்கும் தோன்றியது. பவுண்டரிகள் வைத்து வெற்றியாளர்களைத் தீர்மானிப்பதைக் காட்டிலும் அதுதான் சரியானதாக இருந்திருக்கும்.

இது உலகக் கோப்பை இறுதிப் போட்டி என்பதால் மட்டுமே சொல்லவில்லை. எல்லாப் போட்டிகளுமே முக்கியமான போட்டிதான்” என்றார். உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் போன்ற பெரிய தொடர்களில் நாக்-அவுட் சுற்றுகளில் மாற்றம் கொண்டு வர வேண்டுமா என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது.

தோனி
தோனி
AP

இதற்குப் பதிலளித்த சச்சின், ``நிச்சயமாக மாற்றம் தேவை என்று நினைக்கிறேன். டாப் அணிகளுக்கு நிச்சயம் ஏதாவது வாய்ப்பு அளிக்க வேண்டும். காரணம் தொடர் முழுவதும் நிலையான ஆட்டத்தை அவர்கள் வெளிப்படுத்தியிருப்பார்கள்” என்றார்.

இந்திய அணி அரையிறுதி ஆட்டத்தில் தோல்வி அடைந்ததுக்கு தோனி பேட்டிங் வரிசையில் மாற்றி இறக்கப்பட்டது முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாகப் பேசிய சச்சின், ``சந்தேகமே இல்லாமல் நான் தோனியை அவரது வழக்கமான 5 -வது இடத்திலதான் களமிறக்கியிருப்பேன். ”

சச்சின்
சச்சின்

இந்தியா இருந்த நிலைக்கும் அவருக்கு இருக்கும் அனுபவமும் சேர்ந்து நிச்சயம் இந்திய இன்னிங்ஸை கட்டமைத்திருக்க முடியும். தோனிக்குப் பிறகு ஹர்திக் பாண்டியா, அவருக்குப் பின்னர் தினேஷ் கார்த்திக் களமிறங்கியிருக்கலாம்” என்றார்.