Published:Updated:

`டிரேட் மார்க் கவர் டிரைவ்... ஸ்டைல், மாஸ்!’ - கண்காட்சி போட்டியில் கலக்கிய சச்சின்

சச்சின் டெண்டுல்கர்
சச்சின் டெண்டுல்கர்

ஆஸ்திரேலியா வீராங்கனையின் சவாலை ஏற்று கண்காட்சி போட்டியில் பேட்டிங் செய்தார் சச்சின்.

ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட காட்டுத்தீயில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதிதிரட்டும் நோக்கத்தில் 10 ஓவர்கள் கொண்ட கண்காட்சி போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தப் போட்டி சிட்னியில் இன்று நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக சச்சின் டெண்டுல்கர், யுவராஜ் சிங் ஆகியோர் ஆஸ்திரேலியா பயணமாகியுள்ளனர். ரிக் பாண்டிங் தலைமையிலான அணியின் பயிற்சியாளராக சச்சின் டெண்டுல்கர் உள்ளார். யுவராஜ் சிங், ஆடம் கில்கிறிஸ்ட் அணியில் விளையாடுகிறார். இந்நிலையில் கடந்த சில நாள்களுக்கு முன்பு ஆஸ்திரேலிய மகளிர் அணியின் பந்துவீச்சாளர் எல்லிஸ் பெர்ரி ட்விட்டரில் ஒரு வேண்டுகோள் விடுத்தார்.

சச்சினுக்கு பந்துவீசிய வீராங்கனைகள்
சச்சினுக்கு பந்துவீசிய வீராங்கனைகள்

கண்காட்சி போட்டியின் இடைவேளையின்போது சச்சின் ஒரு ஓவர் பேட்டிங் செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். இதன்மூலம் காட்டுத்தீயில் பாதிக்கப்பட்டவர்களுக்கு கூடுதல் நிதிதிரட்ட முடியும் என வேண்டுகோள் விடுத்தார். சச்சினும் அவரது கோரிக்கையை ஏற்றுக்கொண்டார். இதுகுறித்து பதிலளித்த சச்சின், தோள்பட்டை காயம் காரணமாக விளையாடக் கூடாது என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இருப்பினும் பெர்ரி கோரிக்கையை ஏற்று விளையாடுகிறேன் என்றார்.

`கோலி, ஸ்மித் யார் சிறந்தவர்கள்?!’ - சச்சின் கொடுத்த மாஸ் ரிப்ளே

சச்சின் மீண்டும் மைதானத்துக்குள் களமிறங்குவதைக் காண ஏராளமான ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். சச்சின் ஓய்வு அறிவித்த பிறகு, முதன்முறையாக மைதானத்தில் பேட்டிங் செய்ய களமிறங்கினார். சச்சின் தன் நண்பர்களுடன் கிரிக்கெட் ஆடுவது, சாலையில் சிறுவர்களுடன் கல்லி கிரிக்கெட் ஆடுவது போன்ற வீடியோக்கள் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி டிரெண்டாகும். ஓய்வுக்குப் பிறகு, மைதானத்தில் சச்சின் விளையாடுவது இதுவே முதன்முறை என்பதால் அவரது ரசிகர்கள் குஷியாகினர். கண்காட்சிப் போட்டி இடைவேளையின்போது சச்சின் பேட்டிங்கை செய்ய சிட்னி மைதானத்துக்குள் நுழைந்தார். அங்கிருந்த ரசிகர்கள் ஆரவாரத்துடன் சச்சினை வரவேற்றனர்.

சச்சின் டெண்டுல்கர்
சச்சின் டெண்டுல்கர்

மைதானத்தில் அடியெடுத்து வைத்த சச்சின் பேட்டை தூக்கி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். எல்லிஸ் பெர்ரி மற்றும் அனேபல் ஆகியோர் சச்சினுக்கு பந்துவீசினர். சச்சின் முதல் பந்தை பவுண்டரிக்கு தட்டிவிட்டார். முதல் மூன்று பந்துகளை லெக் சைடில் தட்டிவிட்டார். நான்காவது பந்தை தனது ஃபேவரைட் கவர் ஷாட் ஆடினார். முதல் நான்கு பந்துகளை எல்லிஸ் பெர்ரி வீசினார். கடைசி இரண்டு பந்துகளை அனேபல் வீசினார். ஸ்டெம்புகளை நோக்கி வந்த கடைசி இரண்டு பந்துகளை ஸ்ட்ரைட் ட்ரைவ் ஆடினார். சச்சினின் ஆட்டத்தை மைதானத்தில் இருந்த ரசிகர்கள் கண்டுகளித்தனர். சச்சின் விளையாடும் இந்த வீடியோ ட்விட்டரில் டிரெண்டாகி வருகிறது.

பின் செல்ல