Published:Updated:

`சச்சின் சொன்ன சீக்ரெட், டிராவிட்டிடம் கேட்ட கேள்வி!’- U19 இறுதி போட்டிக்கு முன் ஜெய்ஸ்வால் ஷேரிங்ஸ்

ஜெய்ஸ்வால்
ஜெய்ஸ்வால்

`நான் அவரிடம் நிறைய கேள்விகளைத் தொடர்ந்து கேட்டுக்கொண்டிருந்தேன். அணி மிகுந்த அழுத்தத்தில் இருக்கும்போது எப்படி பேட் செய்ய வேண்டும் என்றும் கேட்டேன்.'

19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியானது தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இறுதிப்போட்டி வரை சென்றுள்ளது. உலகக் கோப்பைத் தொடரின் அனைத்துப் போட்டிகளிலும் சிறப்பானதொரு ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜெய்ஸ்வால்தான் சமூக வலைதளங்களில் டிரெண்டிங்.

சச்சின் டெண்டுல்கர்
சச்சின் டெண்டுல்கர்

பாகிஸ்தானுக்கு எதிராக நடந்த அரையிறுதிப் போட்டியில் ஆட்டமிழக்காமல் சதமடித்து அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணியாக அமைந்தார். இதனால், ஜெய்ஸ்வாலின் மீதிருந்த எதிர்பார்ப்புகள் அதிகமானது. இன்று நடைபெற்று வரும் வங்கதேச அணிக்கு எதிராக இறுதிப் போட்டியில் மற்ற வீரர்கள் தொடர்ந்து விக்கெட்டை பறிகொடுத்துவந்த நிலையில், அரைசதத்துடன் களத்தில் நின்று நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 88 ரன்கள் எடுத்தார்.

`பெரும் கனவுகள் உடையவன்; போராளி!'- `U19 ஸ்டார்' ஜெய்ஸ்வால் குறித்து நெகிழும் கிரிக்கெட் உலகம்

முன்னதாக, உலகின் முக்கிய கிரிக்கெட் வீரர்கள் உட்பட பலரும் ஜெய்ஸ்வாலை பாராட்டி வரும் சூழலில் தன்னுடைய இன்ஸ்பிரேஷன் குறித்து செய்தியாளர்களிடம் பேசியுள்ளார். ஜெய்ஸ்வால் பேசுகையில், ``வாசிம் ஜாஃபர் மற்றும் சச்சின் டெண்டுல்கர்தான் என்னுடைய இன்ஸ்பிரேஷன். வாசிம் சார், ஒரு இன்னிங்ஸை எப்படி விளையாட வேண்டும் என்று எப்போதும் என்னிடம் சொல்லுவார். அவருக்கு ஏற்கெனவே தென்னாப்பிரிக்காவில் விளையாடிய அனுபவம் இருக்கிறது. அங்குள்ள, மைதானங்களில் எழும்பும் பந்துகளை எதிர்கொள்வது குறித்தும் விரைவாக விக்கெட்டுகளை எடுப்பது குறித்தும் எனக்கு ஆலோசனைகளை வழங்கினார்” என்றார்.

ராகுல் டிராவிட்
ராகுல் டிராவிட்

தொடர்ந்து சச்சின் குறித்து பேசும்போது, ``சச்சின் வழங்கிய ஆலோசனைகள் எனக்கு மதிப்புமிக்கதாக இருந்தன. ஒவ்வொரு பந்துவீச்சாளரும் அடுத்து வீசப்போகும் பந்து குறித்து துப்பு கொடுப்பார்கள். அதை நீங்கள் கவனமாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்” என்று கூறினார்.

முன்னாள் பேட்டிங் லெஜண்டும் தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவருமான ராகுல் டிராவிட் கடந்த மாதம் உலகக் கோப்பை முகாமுக்கு வருகை புரிந்துள்ளார். அப்போது அவரை சந்தித்தது குறித்து பேசிய ஜெய்ஸ்வால், ``நான் அவரிடம் நிறைய கேள்விகளைத் தொடர்ந்து கேட்டுக்கொண்டிருந்தேன். அணி மிகுந்த அழுத்தத்தில் இருக்கும்போது எப்படி பேட் செய்ய வேண்டும் என்றும் கேட்டேன். எனக்கு எளிமையான ஆலோசனைகளைக் கூறினார். அடுத்து வரப்போகும் பந்தில் அதிக கவனத்தைச் செலுத்துங்கள்” என்று நெகிழ்ந்து பேசியுள்ளார்.

பானிபூரி வியாபாரம் டு ஐபிஎல்! யார் இந்த யஷஸ்வி ஜெய்ஸ்வால்? #IPLAuction
பின் செல்ல