Published:Updated:

போராடும் தென்னாப்பிரிக்கா, பௌலிங்கில் மிரட்டும் இந்தியா, குறுக்கே ஆடப்போகும் மழை, வெல்லப்போவது யார்?

இந்தியா
News
இந்தியா ( ICC )

ஏடாகூடமான பவுன்ஸ், பிட்ச் வெடிப்புகள் ஆகியவை இந்திய பௌலர்களுக்கும் பேருதவியாக இருந்தது. முகமது ஷமி அவர் வீசிய முதல் ஓவரிலேயே எய்டன் மார்க்ரமை போல்டாக்கினார்.

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டி பரபரப்பான இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது.

நான்காவது இன்னிங்ஸில் டார்கெட்டை சேஸ் செய்து கொண்டிருக்கும் தென்னாப்பிரிக்க அணி வெல்வதற்கு கடைசி நாளில் 211 ரன்களை அடிக்க வேண்டும். இந்திய அணி வெல்வதற்கு 6 விக்கெட்டுகளை வீழ்த்தியாக வேண்டும். வெல்லப்போவது யார்?

அதற்கு முன் நான்காவது நாளில் நடைபெற்ற சம்பவங்கள் குறித்து ஒரு அலசல்.

இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 130 ரன்கள் முன்னிலையோடு இரண்டாம் இன்னிங்ஸை தொடங்கியிருந்தது. மூன்றாம் நாளின் கடைசியில் ஒரு சில ஓவர்களை மட்டுமே இந்திய அணி ஆடியிருந்தது. அதிலேயே ஓப்பனரான மயங்க் அகர்வாலின் விக்கெட்டை யான்சென் வீழ்த்தியிருந்தார். இதன்பிறகு, நைட் வாட்ச்மேனாக ஷர்துல் தாகூர் வந்திருந்தார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

கே.எல்.ராகுல் மற்றும் ஷர்துல் தாகூர் இருவருமே நான்காம் நாள் ஆட்டத்தைத் தொடங்கியிருந்தனர். நைட் வாட்ச்மேனாக வந்திருந்த ஷர்துல் தாகூர் நீண்ட நேரம் நீடிக்கவில்லை. அவரது வேலை முடிந்துவிட்டதால் ஒரு சிக்சரை மட்டும் அடித்துவிட்டு ரபாடாவின் பந்தில் எட்ஜ் ஆகி ஸ்லிப்பில் கேட்ச் ஆனார். இதன்பிறகு, புஜாராவும் ராகுலும் கூட்டணி சேர்ந்தனர். வழக்கமான தென்னாப்பிரிக்க பிட்ச்கள் எந்த மாதிரியான குணாதிசயங்களை வெளிப்படுத்துமோ அதை இந்த சென்ச்சூரியன் பிட்சும் முதல் நாளிலிருந்தே வெளிக்காட்டிக் கொண்டிருக்கிறது. பேட்ஸ்மேன்களின் கணிப்பைத் தவறாக்கும் வகையில் ஏடாகூடமான பவுன்ஸ் பௌலர்களுக்கு கிடைத்தது.

இரண்டாம் நாள் முழுவதும் மழை பெய்து ஓய்ந்ததால் மூன்றாம் நாளிலிலிருந்து இந்த Un even Bouncing தன்மை அதிகமாகவே வெளிப்பட்டது. குறிப்பாக, நேற்று பிட்ச்சிலிருந்த சில வெடிப்புகளும் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தன. லெந்தை மீறிய பவுன்ஸ்களும் பேட்ஸ்மேனை ஏமாற்றும் வகையிலான இன்/அவுட் மூவ்மெண்டுகளும் அதிகமாகவே இருந்தது. இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 55 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்ததற்கும், இரண்டாம் இன்னிங்ஸில் 174 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனதற்கும் பிட்ச் வெளிக்காட்டிய தன்மைகள் மிக முக்கிய காரணமாக அமைந்திருந்தது.

கே.எல்.ராகுல்
கே.எல்.ராகுல்
BCCI
பிட்ச்சைத் தாண்டி இரண்டாம் இன்னிங்ஸ் பேட்டிங்கை இந்தியாவும் கொஞ்சம் கூடுதல் வேகத்தோடு அணுக முனைந்தது. ஏற்கெனவே இரண்டாம் நாள் முழுவதும் மழையால் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் ஐந்தாம் நாளிலும் கனமழை குறுக்கிட வாய்ப்பிருப்பதாக வானிலை கணிப்புகள் வெளியாகியுள்ளது. இதனால் முடிந்தவரை நான்காம் நாளிலேயே வெற்றியை உறுதி செய்துவிட வேண்டும் என்ற எண்ணம் இந்தியாவிற்கு இருந்தது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

முதல் இன்னிங்ஸில் உச்சக்கட்ட நிதானத்தோடு ஆடியிருந்த ராகுல் இந்த இன்னிங்ஸில் ரிஸ்க் எடுத்து பேட்டை விட்டு சில பவுண்டரிகளை அடித்திருந்தார். வெளியே பேட்டை விட்டே ஸ்லிப்பிலும் கேட்ச் ஆகியிருந்தார். 23 ரன்களில் ராகுல் அவுட் ஆன நிலையில் கேப்டன் விராட் கோலி க்ரீஸுற்குள் வந்தார். வழக்கம்போல, நன்றாகவே ஆட்டத்தைத் தொடங்கினார். க்ளீன் ஹிட்டாக சில பவுண்டரிகளை அடித்தார். ஆனால், நீண்ட நேரம் நிலைக்கவில்லை. உணவு இடைவேளைக்கு பிறகு யான்சென் வீசிய முதல் ஓவரின் முதல் பந்திலேயே ஒரு கவர் ட்ரைவ் அடிக்க முயன்று கீப்பரான டீகாக்கிடம் கேட்ச் ஆகியிருந்தார். முதல் இன்னிங்ஸிலும் இங்கிடி ஒயிடாக வீசிய பந்தில் இப்படித்தான் பேட்டை விட்டு அவுட் ஆகியிருந்தார். 2014 இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் முதிர்ச்சியற்ற வீரராக கோலி இப்படித்தான் அவுட் ஆகிக் கொண்டிருந்தார். அதன்பிறகு, தவறுகளை திருத்திக் கொண்டு சிறப்பான பெர்ஃபார்மென்ஸ்களை வழங்கியிருந்தார். ஆனால், இப்போது அந்த 2014 கோலியே மீண்டும் மறுபிறவி எடுத்திருப்பதை போல இருக்கிறது.

விராட் கோலி
விராட் கோலி
ICC
கோலியிடமிருந்து நீண்ட காலமாக ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் 71வது சதம் இந்த 2021லும் சாத்தியப்படவில்லை.

இதன்பிறகு, ரஹானே 23 பந்துகளில் 20 ரன்களை அடித்திருந்தார். 3 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சரை விளாசியிருந்தார். நீண்ட காலமாக அவுட் ஆஃப் ஃபார்மிலிருக்கும் ரஹானேவிற்கு ஏறக்குறைய இதுதான் கடைசி வாய்ப்பாக பார்க்கப்பட்டது. இந்த டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸிலுமே வழக்கமாக அவர் பாணியில் மெதுவாகத் தொடங்காமல் கவுன்ட்டர் அட்டாக் செய்திருந்தார். ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே செல்லும் பந்துகளுக்கு இரண்டாம் யோசனையேயின்றி முழுமையாக பேட்டை விட்டு ஷாட் ஆடினார். மற்ற பேட்ஸ்மேன்கள் திணறிய ஷார்ட் பிட்ச் டெலிவரிகளில் பவுண்டரியும் சிக்சரும் அடித்து அசத்தினார். ஆனால், எல்லா பந்துகளையும் அடித்துக் கொண்டே இருக்க இது லிமிட்டெட் ஓவர் கிரிக்கெட் இல்லையே. இப்படியாக தொடர்ச்சியாக அட்டாக்கிங்காக ஆடினால் அதிகமான விக்கெட் வாய்ப்புகள் உருவாகும். நேற்றும் மார்கோ யான்சென் ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே வீசிய ஷார்ட் பாலை வம்படியாக மடக்கி அடிக்க முயன்று ஸ்கொயரில் கேட்ச் ஆனார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நீண்ட நேரமாக உருட்டிக்கொண்டிருந்த புஜாரா இங்கிடியின் பந்தில் எட்ஜ் ஆகி கேட்ச் ஆனார். இதன்பிறகு, ரிஷப் பண்ட் அடித்த 34 ரன்கள் இந்தியாவிற்கு பேருதவியாக அமைந்தது. தென்னாப்பிரிக்கவிற்கு 300 ரன்களுக்கு மேல் டார்கெட் செட் செய்ய பண்ட் மிக முக்கிய காரணமாக அமைந்தார். ஆனால், அவரும் ரபாடாவின் ஒரு ஷார்ட் பாலை இறங்கி வந்து அரைகுறையாக அடிக்க முயன்று அவுட் ஆனார்.
Bumrah
Bumrah
ICC

இந்திய அணி 174 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. தென்னாப்பிரிக்காவிற்கு டார்கெட் 305. முழுமையாக ஒரு செஷன் மீதமிருந்ததால் தென்னாப்பிரிக்காவின் முக்கியமான விக்கெட்டுகளை எல்லாம் காலி செய்து வெற்றியை உறுதி செய்ய வேண்டும் என கோலி & கோ நினைத்தது. ஆனால், அந்த எண்ணம் பாதிதான் நிறைவேறியது.

ஏடாகூடமான பவுன்ஸ், பிட்ச் வெடிப்புகள் ஆகியவை இந்திய பௌலர்களுக்கும் பேருதவியாக இருந்தது. முகமது ஷமி அவர் வீசிய முதல் ஓவரிலேதே எய்டன் மார்க்ரமை போல்டாக்கினார். நன்கு பவுன்ஸ் ஆகி வரும் என மார்க்ரம் நினைத்த பந்து அவரை ஏமாற்ற இன்சைட் எட்ஜ் ஆகி போல்டானார். கீகோ பீட்டர்சனும் கேப்டன் டீன் எல்கரும் கூட்டணி அமைத்தனர். இந்தக் கூட்டணி கொஞ்சம் நிலைத்து நிற்க தொடங்கியது. சிராஜிடம் தொடர்ந்து பிட்ச்சின் வெடிப்புகளை கோலி அடையாளம் காட்டி அங்கேயே வீசும்படி அறிவுறுத்தினார். இதற்குப் பலனும் கிடைத்தது. மிடில் ஸ்டம்பிலிருந்து சிராஜ் வெளியே எடுத்த பந்து கூடுதலாக மூவ் ஆக பீட்டர்சன் எட்ஜ் ஆகி கேட்ச் ஆனார். டீன் எல்கர் மட்டும் தொடர்ந்து நின்று சிறப்பாக ஆடி அரைசதம் அடித்தார். இடையில் வாண்-டர்-டஸனை பும்ரா அட்டகாசமான கட்டரிலும் நைட் வாட்ச் மேனான மகாராஜை யார்க்கரிலும் போல்டாக்கியிருந்தார்.

டீன் எல்கர்
டீன் எல்கர்
Cricket South Africa

தென்னாப்பிரிக்க அணி 94-4 என்ற நிலையில் நான்காம் நாள் ஆட்டத்தை முடித்தது. கடைசி நாளில் தென்னாப்பிரிக்காவின் வெற்றிக்கு 211 ரன்கம் தேவை. இந்தியாவின் வெற்றிக்கு 6 விக்கெட்டுகள் தேவை.

இந்தியாவின் பௌலிங்கை வைத்து எளிதில் வெல்லலாம் என தோன்றினாலும், செட்டில் ஆகி நிற்கும் டீன் எல்கரும் வரவிருக்கும் டீகாக் மற்றும் பவுமா மூவருமே இந்தியாவிற்கு கடுமையாகச் சவாலளிப்பார்கள். போதாக்குறைக்கு மழையால் ஆட்டம் தடைபடவும் வாய்ப்பிருப்பதால் தென்னாப்பிரிக்கா இந்த டெஸ்ட்டை காப்பாற்றிக் கொள்ளவும் வாய்ப்பிருக்கிறது.