Published:Updated:

CSK அணிக்காக சுரேஷ் ரெய்னாவைப் போல் ஆட வேண்டும்! - நெகிழ்ந்த ருத்துராஜ்

Ruturaj Gaikwad | ருத்துராஜ்

சிஎஸ்கே அணிக்காக சுரேஷ் ரெய்னாவைப் போல் விளையாட விரும்புகிறேன் என்று சிஎஸ்கே அணியின் வீரர் ருதுராஜ் கெய்க்வாட் தெரிவித்திருக்கிறார்.

Published:Updated:

CSK அணிக்காக சுரேஷ் ரெய்னாவைப் போல் ஆட வேண்டும்! - நெகிழ்ந்த ருத்துராஜ்

சிஎஸ்கே அணிக்காக சுரேஷ் ரெய்னாவைப் போல் விளையாட விரும்புகிறேன் என்று சிஎஸ்கே அணியின் வீரர் ருதுராஜ் கெய்க்வாட் தெரிவித்திருக்கிறார்.

Ruturaj Gaikwad | ருத்துராஜ்

கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த ஐபிஎல் சீசனில் சிஎஸ்கே அணிக்காக விளையாடிய ருத்துராஜ் கெய்க்வாட்  635 ரன்களை குவித்து  ஐபிஎல் கோப்பையை சிஎஸ்கே அணி 4-வது முறையாக கைப்பற்றியதற்கு முக்கிய காரணமாக இருந்தார்.

தற்போது நடைபெற்று வரும் இந்த  ஐ.பி.எல் தொடரில் நடந்து முடிந்த 2 போட்டிகளில், தனது சிறப்பான பேட்டிங்க் பார்மை வெளிப்படுத்தி 149 ரன்களைக் குவித்திருக்கிறார். பலரும் ருத்துராஜ் கெய்க்வாட்டின்  பேட்டிங் திறமையை சுரேஷ் ரெய்னாவோடு ஒப்பிட்டு வருகின்றனர்.       

சுரேஷ் ரெய்னா
சுரேஷ் ரெய்னா

சமீபத்தில் ருத்துராஜின் பேட்டிங்கை சுரேஷ் ரெய்னாவும் பாராட்டியிருந்தார். அதுமட்டுமின்றி தோனிக்கு பிறகு சிஎஸ்கே அணியின் கேப்டனாக ருத்துராஜைப் பார்ப்பதாகவும் தெரிவித்திருந்தார். 

இந்த ஐபிஎல் தொடரில்  சிஎஸ்கே அணி முதல் முறையாக சுரேஷ் ரெய்னா இல்லாமல் சேப்பாக்கத்தில் விளையாடியது. இந்த போட்டியைப் பார்ப்பதற்கு சுரேஷ் ரெய்னா சென்னைக்கு வந்திருந்தார்.

இந்நிலையில்தான்  சிஎஸ்கே அணிக்காக சுரேஷ் ரெய்னாவைப் போல் விளையாட விரும்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார். சுரேஷ் ரெய்னா குறித்து பேசிய ருத்துராஜ், “சுரேஷ் ரெய்னாதான் என்னுடைய  இன்ஸ்பிரேஷன்.  ஐபிஎல் தொடர்களில் சிஎஸ்கே அணிக்காக அதிக ரன்களை  குவித்தவர்.

Ruturaj Gaikwad
Ruturaj Gaikwad

அதுமட்டுமன்றி அணி நெருக்கடியான சூழல்களில் இருந்த போதெல்லாம் அதிலிருந்து வெளிவர உதவி புரிந்துள்ளார். அவரைப் போல சிஎஸ்கே அணிக்கு ஒரு நிலையான வீரராக இருக்கவும், விளையாடவும் விரும்புகிறேன்” என்று தெரிவித்திருக்கிறார்.