Published:Updated:

Ruturaj Gaikwad: "`ரிலாக்ஸ் பாய்ஸ்..!' தோனி கூறிய அட்வைஸ்..."- ருத்துராஜ் கெய்க்வாட் சொன்ன ரகசியம்!

தோனி, ருத்துராஜ்

இந்திய கிரிக்கெட் வீரர் ருத்துராஜ் கெய்க்வாட், தோனியின் திறமையான கேப்டன்சி குறித்தும், அவர் தோல்வியை எதிர்கொள்ளும் விதம் குறித்தும் நெகிழ்ச்சியாகப் பகிர்ந்து கொண்டார்.

Ruturaj Gaikwad: "`ரிலாக்ஸ் பாய்ஸ்..!' தோனி கூறிய அட்வைஸ்..."- ருத்துராஜ் கெய்க்வாட் சொன்ன ரகசியம்!

இந்திய கிரிக்கெட் வீரர் ருத்துராஜ் கெய்க்வாட், தோனியின் திறமையான கேப்டன்சி குறித்தும், அவர் தோல்வியை எதிர்கொள்ளும் விதம் குறித்தும் நெகிழ்ச்சியாகப் பகிர்ந்து கொண்டார்.

Published:Updated:
தோனி, ருத்துராஜ்

அகமதாபாத்தில் நடைபெற்ற மகாராஷ்டிரா - உத்தரப்பிரதேச அணிகளுக்கு இடையேயான விஜய் ஹசாரே போட்டியில் மகாராஷ்டிரா வீரர் ருத்துராஜ் கெய்க்வாட் ஒரே ஓவரில் 7 சிக்ஸர்கள் (ஒரு நோ பால்) அடித்து 42 ரன்கள் குவித்து உலகச் சாதனை படைத்திருக்கிறார். இதைப் பலரும் கொண்டாடி வரும் வேளையில், அவர் குறித்த மற்றுமொரு செய்தி வைரலாகி வருகிறது.

அண்மையில் ஆகாஷ் சோப்ராவுடன் நேர்காணல் ஒன்றில் பேசிய ருத்துராஜ், இந்திய அணியின் சர்வதேச போட்டிகளின் சரிவு குறித்துப் பேசியிருந்தார். அப்போது சிஎஸ்கே-வில் விளையாடிய அனுபவம் பற்றி நினைவுகூர்ந்தார். தோனியின் திறமையான கேப்டன்சி குறித்தும், அவர் தோல்வியை எதிர்கொள்ளும் விதம் குறித்தும் நெகிழ்ச்சியாகப் பகிர்ந்து கொண்டார்.

தோனி
தோனி

இது பற்றிப் பேசிய ருத்துராஜ், "ஆட்டத்தில் தோல்வியுற்ற பிறகு அனைவரும் 10 - 15 நிமிடங்களுக்குச் சற்று அமைதியாக இருப்பார்கள். ஆனால், மஹி பாய் விளையாட்டு முடிந்து திரும்பி வந்து 'நடந்தது நடந்துவிட்டது, ரிலாக்ஸ் பாய்ஸ்' என்று எங்களிடம் கூறுவார். அவர் அப்படிச் சொன்னப் பிறகு எல்லோருக்குமே கொஞ்சம் ரிலாக்ஸாக இருக்கும். நாம் நினைப்பது நடக்கவில்லை என்றால் அதை நாம் எப்படிக் கையாள வேண்டும் என்பதையும் தோல்வியின்போது அதை ஏற்றுக்கொண்டு எப்படிச் சமநிலையாக மனதை வைத்துக் கொள்ளவேண்டும் என்பதையும் தோனியிடமிருந்துதான் கற்றுக்கொண்டேன். வெற்றி அல்லது தோல்வி எது நடந்தாலும் அணியை எப்போதும் சமநிலையில் வைத்திருப்பார் தோனி. தோல்வியின்போது ஏமாற்றமாகத்தான் இருக்கும். ஆனால் அதற்காக விளையாட்டைக் குறை கூறிக் கொண்டிருப்பதில் பயனில்லை" என்று கூறினார்.