Published:Updated:

போட்டியே இல்லை!- தமிழகக் கிரிக்கெட் சங்கத் தலைவராகிறார் ஸ்ரீனிவாசனின் மகள் ரூபா குருநாத்!?

ரூபா குருநாத் டி20 சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் உரிமையாளர் குருநாத் மெய்யப்பனின் மனைவி.

தோனியுடன் ரூபா குருநாத்
தோனியுடன் ரூபா குருநாத்

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் செயற்குழு கூட்டம் நேற்று சென்னையில் நடந்தது. சங்கத்தின் அடுத்த தலைவரைத் தேர்ந்தெடுப்பது குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இறுதியாக ரூபா குருநாத் ஒருமனதாகத் தலைவராகத் தேர்வுசெய்யப்பட்டார். ரூபா குருநாத் பிசிசிஐ அமைப்பின் முன்னாள் தலைவர் என்.ஸ்ரீனிவாசனின் மகள்.

கிரிக்கெட் சங்கத் தலைவர் தேர்தலுக்கான மனுத்தாக்கல் நாளை தொடங்குகிறது. 26-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதுவரை ரூபாவுக்கு எதிராக யாரும் போட்டியிடாத நிலையே உள்ளது என்பதால், ஒருமனதாக ரூபா தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. ரூபா குருநாத் டி20 சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் உரிமையாளர் குருநாத் மெய்யப்பனின் மனைவி.

ரூபா
ரூபா

டி20 தொடரில் சூதாட்டத்துக்காகத் தனது பதவியை துஷ்பிரயோகம் செய்ததாக குருநாத் மீது புகார் எழுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தலைவர் பதவிக்கு முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் எல்.சிவராமகிருஷ்ணனின் பெயர் பரிந்துரைக்கப்பட்டது. அவர் கிரிக்கெட் வர்ணனையாளராகப் பணியாற்றுவதால் அதற்கான நேரம் போதாமை காரணமாகப் பின்னர் அவரது பெயர் விலக்கிக்கொள்ளப்பட்டது. ரூபா தேர்ந்தெடுக்கப்படும் சூழலில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் முதல் பெண் தலைவர் என்கிற பெருமையைப் பெறுவார்.